Friday, 24 June 2016

 சுட்டி விகடனின் சிறந்த மாணவ பத்திரிக்கையாளர் தனலெட்சுமிக்கு பாராட்டு விழா


சுட்டி விகடனின் மாணவர் பத்திரிக்கையாளாராக ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட  சீனியர் சுட்டி ஸ்டார்க்கு பள்ளியில் பாராட்டு ( தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பள்ளியில் இருந்து சீனியர் சுட்டி ஸ்டாராக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது )ws




தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு தேர்வான சுட்டி ஸ்டார் மாணவி தனலெட்சுமி ஒரு ஆண்டு முழுவதும் திறம்பட செயல்பட்டு பத்திரிக்கையில் எழுதியது காரணமாக அவருக்கு சிறந்த சுட்டி மாணவ பத்திரிக்கையாளர் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.சிறந்த பத்திரிக்கையாளராக தேர்வு செய்யப்பட்ட அவரை சென்னைக்கு அவரது தாயார் அழைத்து செல்ல இயலாத நிலையிலும் ( தாயார் வீட்டு வேலை பார்ப்பதால் ) ஆசிரியை செல்வமீனாள் அரசு விடுமுறை நாளன்றும் சென்னை அழைத்து சென்று சிறந்த பத்திரிக்கையாளர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.சான்றிதழ்,விருது,பரிசு என அனைத்தும் கிடைக்க பெற்ற மாணவி தனலெட்சுமி மிகுந்த சந்தோசத்துடன் பள்ளி திரும்பினார்.சென்னையில் நடைபெற்ற விழாவில் முழுவதும் கலந்து கொண்டு பயன் பெற்றார்.மாணவிக்கு பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை டிஸ்பி  கருப்புசாமி,காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்,பாஸ்கரன் , தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய,ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.கடந்த ஆண்டும் இம்மாணவி தேர்வானதுடன் தாய் சென்னை செல்ல இயலாத நிலையில் ஆசிரியை செல்வமீனாள் அவர்கள்தான் சென்னை அழைத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின் குறிப்பு : கடந்த ஆண்டு தேர்வு பெற்ற சுட்டி ஸ்டார் மாணவர் நடராஜனும் இதே போன்று சீனியர் சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment