Friday, 17 June 2016

                            பள்ளி மாணவர்களுக்கான  யோகா பயிற்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.



                                             பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை கந்தசஷ்டி விழா கழக யோகா முகாம் அலுவலரும்,பதஞ்சலி யோகா கழகத்தின் சிவகங்கை மாவட்ட செயலுருமான யோகா ஆசிரியர் தினேஷ் குமார் மாணவர்களுக்கு யோகாசனம் தொடர்பான யமம்,நியமம்,ஆசனம்,பிரணாயாமம் ,ப்ரத்யாஹாரம்,தாரணம் ,தியானம்,சமாதி என எட்டு அங்கங்களையும் அது தொடர்பான உட்கட்டாசனம்,வீரபத்ராசனம்,அர்த்த புஜங்காசனம்,தனுராசனம் பயிற்சிகளும்,குழு ஆசனங்களும் கற்றுகொடுத்தார்.மாணவர்கள்  அனைவரும் ஆர்வமுடன் யோகா தொடர்பான தகவல்களை கேள்விகளாக கேட்டு கற்றுக்கொண்டனர்.தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகத்தினர் யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.பயிற்சி நிறைவாக உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் யோகா பயிற்சிகள் மற்றும் குழு ஆசனங்கள் நடைபெற்றது.

No comments:

Post a Comment