Thursday, 2 June 2016

 தினமலர் பட்டம்- பட்ட சபை உறுப்பினர்களுக்கு சென்னையில் இரண்டு  பயிற்சி 

                      தினமலர் சார்பாக நடத்திய பட்டசபை போட்டியில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேஸ்வரி  உட்பட 50 மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.அதற்கான அழைப்பு கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் காலை வழிபாட்டு கூட்டதில் மாணவி பரமேஸ்வரிக்கு  வாழ்த்து தெரிவித்து வழங்கினார்.


சின்ன அறிமுகம்

அரசும் ,அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?  என  எழுதி அனுப்புங்கள் என்று தினமலர் பட்டம் இதழில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்களிடம் கேட்டு இருந்தனர்.அதன் தொடர்ச்சியாக பள்ளியில் இருந்து பல்வேறு மாணவர்களை ஊக்கபடுத்தி இப்போட்டியில் கலந்து கொள்ள சொன்னோம்.அதனில் சிவகங்கை மாவட்ட அளவில் அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் இப்பள்ளியின் மாணவி தேர்வு செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பல ஆயிரம் மாணவர்கள் போட்டி இட்டுள்ள தினமலர் பட்டம் - பட்டசபையில் உறுப்பினராகி (மொத்தம் 50 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி ) உள்ள அதிகமான மாணவர்கள் மிக பெரிய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த நிலையிலும் அரசு உதவி பெறும் தமிழ் வழி கல்வி பயிலும் இப்பள்ளி மாணவி மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
                                      

No comments:

Post a Comment