Thursday, 30 June 2016

இன்றைய தினகரன் நாளிதழில் கல்வி மலர் இணைப்பில் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் இப் பள்ளி தொடர்பான கட்டுரை வெளி வந்துள்ளது அனைவரும் படியுங்கள் .நன்றி தினகரன் நாளிதழுக்கு.



http://kalvi.dinakaran.com/News/News/1845/Government_aided_school_Running_Creatively.htm

சமூகத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி



6/30/2016 10:25:31 AM
சமூகத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி
இன்றைய தினகரன் நாளிதழில் கல்வி மலர் இணைப்பில் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் இப் பள்ளி தொடர்பான கட்டுரை வெளி வந்துள்ளது அனைவரும் படியுங்கள் .நன்றி தினகரன் நாளிதழுக்கு.



இன்றைய ஆங்கில நாளேடான டெகான் கிரானிகல் பத்திரிக்கையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியில்  திருக்குறள் தீலீபன் அவர்களின் பேச்சு செய்தியாக வந்துள்ளது.அனைவரும் பாருங்கள்.

Wednesday, 29 June 2016

 கத்தரிக்காய் வாத்தும் .தக்காளி வாத்தும் கை கோர்த்து நடை பயிலும் கண்கொள்ளா காட்சி 

தக்காளி வாத்து 2ம் வகுப்பு மாணவர்கள் செய்ததது - பாராட்டு

தினமலர் - பட்டம் இதழ் பார்த்து பொம்மை செய்து வந்த 2ம் வகுப்பு மாணவர்,மாணவிக்கு பாராட்டு 


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி கு.அனுசியா , மாணவர் வெ .ஆகாஷ்   தினமலர் - பட்டம் இதழில் வெளியான ஆர்ட் ரூம் பகுதியை படித்து விட்டு பள்ளிக்கு தக்காளி வாத்து செய்து கொண்டு வந்தனர் .தக்காளி வாத்து செய்வதற்கு செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும்,மாணவ,மாணவிக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

Saturday, 25 June 2016

                                                                   இன்றைய நிகழ்ச்சி
                                                                               (27/06/2016)

                                         கவனகம் மற்றும் நினைவாற்றல் பயிலரங்கம்

ஒரு கோடி ஆண்டுக்கு முன்பு உள்ள தேதியை சொன்னால் கிழமையை சொல்வார்

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் , தேவகோட்டை.

நாள் : 27/06/2106

நேரம் : காலை 9: 30 மணி

பயிற்சி அளிப்பவர் : திருக்குறள் தீலீபன் , காரைக்குடி .



இவரது சிறப்புகள் : 1) நினைவாற்றல் கலை - திருக்குறளில் முதல் சீரை சொன்னால், குறளை சொல்லுதல்,குறளை சொன்னால்,குறளின் எண்னை சொல்லுதல்,குறளின் எண்னை சொன்னால் ,குறளை சொல்லுதல் போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல்

2) உதடு ஒட்டாத திருக்குறளை வாயில் உதடுகளில் குண்டூசி வைத்து கொண்டு சொல்வது இவரது சிறப்புகளில் ஒன்று 

3) கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ( கி.பி.ஒன்று முதல் கி.பி.ஒரு லட்சம்) ஆண்டுகள் வரையிலான தேதியைச் சொன்னால்,கிழமையை சொல்லுவார் 

4) 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றி சொல்ல,அதை நினைவில் நிறுத்தி, 1 முதல் 50 வரை,எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாக சொல்லுவார் 

5) பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்த தேதியை சொன்னாலும்,உடன் கிழமையை சொல்வார் 

6) உலக நாடுகளின் பெயரை சொன்னால் ,அந்த நாட்டு தலை நகரத்தின் பெயரை சொல்லுவார்.

7) புதினாறு வகையான கவனகம் நிகழ்ச்சிகள் செய்வார் 
1) குறள் கவனகம்
2) பறவை கவனகம் 
3) எண் கவனகம் 
4) விலங்கு கவனகம் 
5) எழுத்து கவனகம் 
6) நூல் கவனகம் 
7) கூட்டல் கவனகம் 
8) மலர்க் கவனகம் 
9) பெயர்க் கவனகம் 
10) பழக் கவனகம் 
11) ஆண்டுக் கவனகம் 
12) நாடுகள் கவனகம் 
13) மாயக்கட்ட கவனகம் 
14)வண்ணக் கவனகம் 
15) தொடு கவனகம் 
16) ஒலிக் கவனகம் 
                                   இவை அனைத்தும் நினைவாற்றல் தொடர்பான பயிற்சியாகும் .இவற்றை அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து நிகழ்வை நடத்த உள்ளார்.

அனைவரும் வருக.அனுமதி இலவசம்.

தங்களின் நிருபரை அனுப்பி உதவவும்.நன்றி.

Friday, 24 June 2016

 மெகா யோகாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தேவகோட்டையில் கந்தசஷ்டி கழகம் சார்பாக நடைபெற்ற மெகா யோகாவில் கலந்துகொண்டதற்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

 சுட்டி விகடனின் சிறந்த மாணவ பத்திரிக்கையாளர் தனலெட்சுமிக்கு பாராட்டு விழா


சுட்டி விகடனின் மாணவர் பத்திரிக்கையாளாராக ஒரு ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட  சீனியர் சுட்டி ஸ்டார்க்கு பள்ளியில் பாராட்டு ( தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இப்பள்ளியில் இருந்து சீனியர் சுட்டி ஸ்டாராக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது )ws


Thursday, 23 June 2016

இன்றைய தினகரன் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமியின் சாதனைகளை மாணவர் களம் பகுதியில் அவரது பேட்டியாக கலர் படத்துடன் வெளிவந்துள்ளதை படியுங்கள்.தினகரன் நாளிதழுக்கு நன்றி.மேலும் இரண்டு மாணவர்களின் ஓவியங்கள் அவர்களது வண்ண படத்துடன் வந்துள்ளது.






Tuesday, 21 June 2016

தினமலர் - பட்டம் இதழ் பார்த்து பொம்மை செய்து வந்த 2ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவி மா.திவ்ய ஸ்ரீ  தினமலர் - பட்டம் இதழில் வெளியான பொம்மை செய்யலையோ பொம்மை பகுதியை படித்து விட்டு பள்ளிக்கு பொம்மை செய்து கொண்டு வந்தார்.பொம்மை செய்வதற்கு ஊக்கப்படுத்திய ஆசிரியை வாசுகிக்கும்,மாணவிக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்தார்.

 

இலக்கை அடைய முயற்சி தேவை 

பள்ளி மாணவர்களிடம்  டி .எஸ்.பி. பேச்சு 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தின விழாவில் இலக்கை அடைய முயற்சி தேவை என தேவகோட்டை டி . எஸ்.பி .பேசினார்.

Monday, 20 June 2016

சுட்டி விகடனின் சூப்பர் பிசினஸ் ஜெட் 


சுட்டி கிரியேசன்ஸ் சூப்பர் பிசினஸ் ஜெட் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியருக்கு பாராட்டு

சுட்டி விகடன் 30/06/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான சூப்பர் பிசினஸ் ஜெட் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியர்
சுட்டி விகடனின் சூப்பர் பிசினஸ் ஜெட் 


சுட்டி கிரியேசன்ஸ் சூப்பர் பிசினஸ் ஜெட் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியருக்கு பாராட்டு

சுட்டி விகடன் 30/06/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான சூப்பர் பிசினஸ் ஜெட்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 17 மாணவ,மாணவியர் 

Saturday, 18 June 2016

 சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )

           சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி மு.ராஜேஸ்வரி ஆவார்.

Friday, 17 June 2016

                            பள்ளி மாணவர்களுக்கான  யோகா பயிற்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.

              நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு   மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தேவகோட்டை நகராட்சி சார்பாக நடைபெற்றது.

Tuesday, 14 June 2016

இரத்தம் சுழல்வதர்க்கே , சுழற்றிடுவீர் இரத்த தானத்தின் மூலம் 

பள்ளி மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் பேச்சு 


சர்வதேச குருதி கொடையாளர் விழிப்புணர்வு முகாம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச குருதி கொடையாளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


Sunday, 12 June 2016

   சர்வதேச குழந்தை தொழிலாளார் முறை ஒழிப்பு தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச குழந்தை தொழிலாளார் முறை ஒழிப்பு தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Saturday, 11 June 2016

 குறுந்தகடு பெருந்தொடர் ஒளிபரப்பில் 10வது அதிகாரம் (விசைகள் ) இந்த வாரம் ஒளிபரப்பு  தொடர்தல் 

தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் ,அவைகளின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு தொடர்ந்து பெரிய வண்ண தொலைகாட்சியில் 10 வது வாரமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.இதனை மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து,படித்து பயன் அடைந்து வருகின்றனர்.

தமிழக அரசின் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செய்தி இதழில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்   நடுநிலைப் பள்ளியின் செய்தி விரிவாக 3 பக்கங்கள் வெளியாகி உள்ளதை காணுங்கள்.

Wednesday, 8 June 2016

 சேக்கிழார் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பரிசு 


      தேவகோட்டை -    தேவகோட்டை சிவன்கோவிலில் நடைபெற்ற  சேக்கிழார் விழாவில் பெரியபுராணம்   முற்றோதுதல் நிகழ்வில் அனைத்து பாடல்களையும் பாடிய சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் காயத்ரி,கார்த்திகேயன்,ரஞ்சித்,தனலெட்சுமி,பார்கவி லலிதா,கண்ணதாசன்,யோகேஸ்வரன்,தனம்,ராஜலெட்சுமி,சௌமியா ஆகியோருக்கு   தமிழ் வள்ளல் மெய்யப்பர் நினைவு பரிசுகளையும் சான்றிதல்களையும் சிவநெறி செல்வர் பேரா.சொக்கலிங்கம்,பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் ஆகியோர் வழங்கினார்கள் .மாணவர்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர்க்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடன் சேக்கிழார் விழாக்குழு செயலர் பேரா .சபா .அருணாசலம் ,பொருளாளர் தெட்சினாமூர்த்தி ,கவிஞர் பழனியப்பன் உள்ளனர். 

Tuesday, 7 June 2016

 சேக்கிழார் விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர்

தேவகோட்டை  சேக்கிழார் விழாவில் பெரிய புறாணம் முற்றோதுதல் நிகழ்வில்  சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ ,மாணவியர் அனைத்து பாடல்களையும் பாடுகின்றனர்.


தினமலர்- பட்டம் -பட்டசபை -எனது அனுபவங்கள் 

தினமலர் சார்பாக நடைபெற்ற பட்டசபை  நிகழ்ச்சியில் எங்கள் பள்ளி மாணவி தேர்வாகி அதன் தொடர்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

Monday, 6 June 2016

தினமலர் 06/06/2016 நாளிதழில் (இன்று) பட்டசபை தொடர்பான எங்கள் எனது பேட்டியும் ,படமும் தமிழகம் முழுவதும் 6ம் பக்கத்தில் வெளியாகி உள்ளது.நன்றி தினமலர் நாளிதழ் .


சுட்டி விகடனின் அழகான போர்க்லிப்ட் வடிவம் 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான போர்க்லிப்ட்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் பரத்குமார்க்கு  பாராட்டு
தமிழ்வழி கல்வி பள்ளியில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழி கல்வி மோகம் மாறும்

பள்ளி தாளாளர் பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமை பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும்        மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன் தமிழ்வழி கல்வி பள்ளியில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழி கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.

Thursday, 2 June 2016

 தினமலர் பட்டம்- பட்ட சபை உறுப்பினர்களுக்கு சென்னையில் இரண்டு  பயிற்சி 

                      தினமலர் சார்பாக நடத்திய பட்டசபை போட்டியில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி பரமேஸ்வரி  உட்பட 50 மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் சென்னையில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.அதற்கான அழைப்பு கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் காலை வழிபாட்டு கூட்டதில் மாணவி பரமேஸ்வரிக்கு  வாழ்த்து தெரிவித்து வழங்கினார்.

Wednesday, 1 June 2016

சுட்டி விகடன் FA பகுதியில் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள்

சுட்டி விகடன் FA பகுதியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் மாணவர்களால் எழுதப்பட்ட பாடம் சார்ந்த செயல்பாடுகள் வெளிவந்துள்ளதை காணுங்கள் 


பள்ளி திறப்பு , புதிய மாணவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்பு 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் உத்தரவு படி இன்று பள்ளி திறக்கப்பட்டு புதியதாக பள்ளிக்கு வந்த  முதல் வகுப்பு மாணவர்களுக்கு  மகிழ்ச்சியுடன் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லே.சொக்கலிங்கம் உள்ளார் .