தி இந்து தமிழ் பத்திரிக்கை விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் திருக்குறள் , அபிராமி அந்தாதி நடனம்
தி இந்து தமிழ் பத்திரிக்கையின் பெண் இன்று சார்பாக மதுரையில் பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் சார்பாக திருக்குறள்,அபிராமி அந்தாதி பாடல்கள் மாணவிகளால் பாடபெற்று , மாணவிகளால் நடனமாகவும் நடத்தி காண்பிக்கப்பட்டது.தி இந்து தமிழ் நாளிதழின் SHANKAR V SUBRAMANIAM ( BUSINESS HEAD) அவர்கள் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவானது மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டது.மதுரை மற்றும் சுற்றி உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து எண்ணற்ற பெண்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.இவ்விழாவில் இப்பள்ளி மாணவிகள் 9 பேர்( 6 முதல் 8ம் வகுப்பு வரை ) காலை 6 மணிக்கு ஆசிரியை உதவியுடன் தேவகோட்டையில் கிளம்பி 10 மணிக்கு மதுரை பாத்திமா கல்லூரியை அடைந்தனர்.அங்கு மேடையில் பல்வேறு பிரமுகர்கள்,எண்ணற்ற பெண்கள் கூட்டதின் முன்னிலையில் அனைவரின் முன்பாகவே அபிராமி அந்தாதி ,திருக்குறள் நடனம் ஆகியவற்றை தன்னம்பிக்கையுடன் மைக் முன்பு நின்று பாடி, நடனம் ஆடி காண்பித்தனர்.மேடையில் இருந்த பாத்திமா கல்லூரி முதல்வர் உட்பட அனைவரும் அருமையாக செய்தீர்கள் என்று உடனடியாக பாராட்டி,வாழ்த்து தெரிவித்தார்கள்.பார்வையாளர்கள் பல பேர் மாணவிகளிடம் வந்து வாழ்த்து தெரிவித்ததுடன் அபிராமி அந்தாதி மனனம் செய்து பாடுவதே மிகபெரிய விசயம்.அதனை நீங்கள் பயமே இல்லாமல் இவ்வளவு பெரிய மேடையில் பாடியதுடன் , நடனமாகவும் அதனை ஆடி காண்பித்தது எங்களுக்கு பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.பொதுவாக பாடல்களை CD வடிவில் பாட விட்டு ஆடுவதுதான் இன்று பெரும்பாலான பள்ளிகளில் நடை பெற்று வருகிறது.ஆனால் அபிராமி அந்தாதி,திருக்குறள் ஆகியவற்றை நீங்களாகவே தன்னம்பிக்கையுடன் பாடி,நடனம் ஆடியது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.
இம்மாணவிகள் அனைவரும் மதுரைக்கு வருவதே இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இத்துணை மக்கள் முன்பாகவும், பாத்திமா கல்லூரியின் மிகப்பெரிய அரங்கத்தில் நடனம் ஆடியதும் அவர்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு ஆகும். இதற்காக தி இந்து தமிழ் நாளிதழின் நிர்வாகத்துக்கும் , ஆசிரியர் திரு. அசோகன் அவர்களுக்கும்,பெண் இன்று பகுதியின் நிருபர் பிருந்தா அவர்களுக்கும், மதுரை செய்தி பிரிவு ஆசிரியர் திரு.செல்வராஜ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து இந்து நாளிதழின் அலுவலர்களுக்கும் ,நிர்வாகத்துக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இப்பள்ளி 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவ,மாணவியர் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி நடுநிலைப் ஆகும். இம்மாணவிகள் அனைவரும் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ( கல்வி மற்றும் பொருளாதாரம் ) வறுமை கோட்டுக்கு கீழ் வாழகூடிய குடும்பங்களை சார்ந்தவர்கள்.இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் இவர்களது குழந்தைகளை கல்வியில் நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து அடிப்படை விசயங்களை கற்றுக் கொடுத்து தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றுவதையே கல்வியின் வெற்றியாக எண்ணி இப்பள்ளி ஆசிரியர்களும்,தலைமை ஆசிரியரும் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.அதன் தொடர்ச்சியாக இம்மாணவிகளுக்கு கடந்த ஒரு ஆண்டாக தொடர்ந்து பள்ளியிலேயே திருக்குறள்,அபிராமி அந்தாதி பாடல்,நடனத்திற்க்கான பயிற்சியை ஆசிரியை KR.செல்வமீனாள் வழங்கி வருகிறார்.அவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவரால் மாணவிகளை மதுரைக்கு அழைத்து வர இயலவில்லை. மாணவிகள் 9 பேரையும் அவர்களது பெற்றோர்கள் மதுரைக்கு அழைத்து வர இயலாத சூழ்நிலையில் ( ஏனெனில் அவர்களது பெற்றோர்கள் தினசரி கூலி வேலைக்கு சென்றால்தான் ஊதியம் கிடைக்கும் என்கிற நிலையில் ) பள்ளி விடுமுறை நாளன்று பெண் ஆசிரியை தி.முத்து மீனாள் தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு அழைத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இம்மாணவிகளுக்கு பேருந்து கட்டணம்,நடனம் ஆடுவதற்கு தேவையான ஒப்பனைகள்,ஆடைகள்,சலங்கைகள் என அனைத்துமே பள்ளி ஆசிரியர்களாலேயே வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்து தமிழ் நாளிதழில் வாசகர் திருவிழாவில் அறிமுகமான திருமதி .ஜெய பிரதா அவர்கள் பள்ளி மாணவிகளுக்கு அவர்களாகவே முன் வந்து ஒப்பனை செய்து உதவி செய்தார்.அவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இம்மாணவிகள் அனைவருக்கும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.ஒரு புத்துணர்ச்சியுடன் அவர்கள் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் கண்டு,கேட்டு மகிழ்வுற்றனர்.தி இந்து தமிழ் நிகழ்ச்சி நிச்சயமாக அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்று காலை பள்ளி வழிபாட்டு கூட்டதில் இது தொடர்பாக மாணவிகள் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டதில் அனைத்து பெற்றோர் முன்னிலையில் இம்மாணவிகளுக்கு வாழ்த்து சொல்லப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களை ஊக்கபடுத்தி அவர்களையும் ரங்கோலி போட்டியில் கலந்து கொள்ள செய்தோம்.அவர்களில் தேர்வான உமா மகேஸ்வரி என்கிற பள்ளி மாணவியின் தாயையும் மதுரை அழைத்து சென்று அங்கு நடைபெற்ற போட்டியிலும் கலந்து கொள்ள செய்தோம்.அவரும் ஆர்வமாக கலந்து கொண்டு ஆறுதல் பரிசு பெற்றார்.இது போன்று கலந்துகொள்வது இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார்.இந்து தமிழுக்கு நன்றி.
இவ்விழாவில் மதுரை காவல் துறை தலைவர் திரு.முருகன் அவர்கள் இன்றுள்ள தொடர்பு சாதனங்கள் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் நன்மை , தீமைகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்துரைத்தார்.APOLLO மருத்துவமனையின் தலைமை அதிகாரி ரோஹினி ஸ்ரீதர், பாத்திமா கல்லூரியின் முதல்வர் பாத்திமா மேரி ,விவசாய துறையில் சாதனை படைத்துள்ள பெண் விவசாயி,சொல் அரங்கம்,கலை நிகழ்ச்சிகள் என அனைத்துமே அருமையாக இருந்தது.
மதிய உணவும் மிகவும் சுவையாக இருந்தது.இந்த நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பட விளக்கம் : தி இந்து தமிழ் பத்திரிக்கையின் பெண் இன்று சார்பாக மதுரையில் பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் சார்பாக திருக்குறள்,அபிராமி அந்தாதி பாடல்கள் மாணவிகளால் பாடபெற்று , மாணவிகளால் நடனமாகவும் நடத்தி காண்பிக்கப்பட்டது.தி இந்து தமிழ் நாளிதழின் SHANKAR V SUBRAMANIAM ( BUSINESS HEAD) அவர்கள் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நன்றி
லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com http://www.kalviyeselvam.
No comments:
Post a Comment