Sunday, 28 February 2016

                     தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் 

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.


                                   விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்ரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் தினம் தொடர்பாகவும் , அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கமாக பேசினார்.ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் சோதனைகளை எளிய முறையில் மாணவர்களுக்கு செய்து காண்பித்து செயல் விளக்கம் அளித்தார்.விழாவில் சென்னை அக்னி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில்  பங்குபெற்று ஜூனியர் பிரிவில் வெற்றி பெற்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள தேர்வு பெற்றுள்ள 6ம் வகுப்பு மாணவி காவியாவுக்கும்,பயிற்சி அளித்த முத்து மீனாள்  ஆசிரியைக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இக்கண்காட்சியில் மாணவர்கள் சுமித்ரா,பிரவீனா,நந்தகுமார்,பூவதி ஆகியோர் கலந்து கொண்டனர். 6 முதல் 8 வகுப்பு வரை சுமார் 120  பேர் பங்கேற்ற இப்போட்டிகளில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் கலந்துகொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
                      திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நம்மை சுற்றி அறிவயல் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் ரஞ்சித்,பிரவீனா மற்றும் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்ட கண்ணதாசன்,தனம் ஆகியோருக்கும் ,இம்மாணவர்களுக்கு பயிற்சி அளித்து தேவகோட்டையில் இருந்து  திருச்சி அழைத்து சென்ற ஆசிரியை வாசுகிக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிவகங்கை,ராமநாதபுரம்  மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட ஒரே பள்ளி இப்பள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.விழா நிறைவாக மாணவி பரமேஸ்வரி நன்றி கூறினார்.

பட விளக்கம் :  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment