Monday, 29 February 2016

சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !

சுட்டி விகடன் இதழுக்கும்,சுட்டி ஸ்டார் மாணவிக்கு  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளியில் பாராட்டு

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி ) பள்ளி மாணவி  சுட்டி ஸ்டார் மு.தனலெட்சுமி படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் படத்துடன் கப் பரிசளிப்பு  


 சுட்டி விகடன் சார்பில் சுட்டி ஸ்டார்களை தொடர்ந்து ஊக்கபடுத்தும் நிகழ்ச்சி சென்னையில்  நடைபெற்றது. அன்றைய நிகழ்ச்சியில் இவர்களது படத்துடன்  கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் )வெளியீடு மற்றும் படத்துடன் கப் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.மேலும் பல்வேறு கருத்தாளர்களை கொண்டு அன்றைய தினம் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.மாணவி தனலெட்சுமி சென்னையில்  சுட்டி விகடன் சார்பில்  தான் பெற்ற பயற்சி தொடர்பாக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலை வழிபாட்டு கூட்டதில் விளக்கமாக எடுத்துக் கூறினார். சுட்டி விகடன் வழங்கிய படத்துடன் கூடிய இந்த ஆண்டுக்கான காலண்டர் (சுட்டி விகடன் ) வெளியீடு மற்றும் தன் படத்துடன் கூடிய  கப்  ஆகியவற்றை ஆர்வமுடன் மாணவர்கள் இடத்தில் காட்டினார்.இது போன்று அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சுட்டி விகடன் நிர்வாகத்துக்கும்,   வெற்றி பெற்ற மாணவியையும் , மாணவியின் தாயார் சென்னைக்கு அழைத்து செல்ல இயலாத நிலையில் ( தாயார் அவர்கள் வீடுகளில் வேலை பார்த்து வரும் சூழ்நிலையில் ) விடுமுறை நாளாக இருந்தபோதும் மாணவியை சென்னைக்கு அழைத்து சென்ற ஆசிரியை மு.முத்து லெட்சுமி அவர்களையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
                                     இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு.வேல் பாரி அவர்களது பயிற்சியும், உரையும் மாணவர்களையும்,பெற்றோர்களையும் தொடர்ந்து ஊக்குவிப்பதாக இருந்ததாக மாணவியும்,ஆசிரியரும் தெரிவித்தனர்.திரு.சேது ராமன் அவர்களின் மந்திரமா,தந்திரமா நிகழ்ச்சி அறிவியல் சிந்தனையை தூண்டுவதாக நன்றாக இருந்ததாக தெரிவித்தனர்.தொடர்ந்து இப்பள்ளிக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும் சுட்டி விகடன் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

                           இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் சென்று தனது கருத்துக்களை தெரிவிக்க மேடையில் ஏறி பேசிய மாணவி தனலெட்சுமிக்கும் வாழ்த்து தெரிவிக்கபட்டது.

சின்ன அறிமுகம்
 சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி மு.தனலெட்சுமி ஆவார்.
   சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி காரைக்குடி மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 11 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.கோடை விடுமுறையில் இப்போட்டி நடை பெற்றது.இப்போட்டியில்   மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி தனலெட்சுமிக்கும் பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சுட்டி விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுதமிழகம் முழுவதும் மொத்தம் 63மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவ்வாறு தேர்வு ஆனவர்கள் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் சார்பாக கட்டுரைகள் எழுதலாம்.படத்துடன் இவர்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் வெளியவதுடன் குறிப்பிட்ட தொகையும்  பரிசாக  கிடைக்கும்.இவர்களுக்கு சுட்டி விகடன் சார்பாக பல கட்ட பயற்சி வழங்கப்பட்டு  உள்ளது.

No comments:

Post a Comment