Sunday, 21 February 2016

  அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா 




 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழா

 பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .காரைக்குடி   தமிழ்ச் சங்கம் சார்பாக நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவித்து இப்பள்ளி மாணவ,மாணவியர்   11 பேர் வெற்றி பெற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். 2ம் வகுப்பில்  மாணவர் வெங்கட்ராமன், 3ம் வகுப்பில் மாணவிகள்  ஜனஸ்ரீ ,கீர்த்தியா ,4ம் வகுப்பில் மாணவர்கள் ஐயப்பன்,அஜய் பிரகாஷ், 5ம் வகுப்பில் மாணவர்  கார்த்திகேயன், மாணவி மாதரசி ,6ம் வகுப்பில் மாணவர்கள்  ரஞ்சித்,விக்னேஷ்,7ம் வகுப்பில் மாணவர்  நந்த குமார் , மாணவி தனலெட்சுமி ஆகியோர் பரிசுகள் பெற்றனர். பரிசு பெற்றவர்களை ஆசிரியர் அனைவரும் பாராட்டினார்கள்.ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

பட விளக்கம் : அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்க்கு பாராட்டு விழாவில் மாணவ,மாணவியர் பெற்ற சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களுடன் உள்ளனர்.

No comments:

Post a Comment