Monday, 29 February 2016

 பள்ளி  மாணவர்களுக்கான  மருத்துவ  முகாம் 

 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.



                                     முகாமிற்கு வந்திருந்தோரை ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெள்ளைச்சாமி  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் பரிசோதித்தார்.மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களை கண்டுபிடித்து அவற்றை உடனுக்குடன் எடுத்து கூறினார்கள்.மேலும் சில நோய்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர்.மாணவர்களின் பெற்றோர்களுக்கும் நோய்களின் தீவிரம் குறித்து எடுத்த சொல்லப்பட்டது.சில நோய்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.முகாமிற்கான ஏற்பாடுகளை செவிலியர்கள் பத்மாவதி,சண்முகப்ரியா ,மருந்தாளுநர்கள் கனிமொழி,சிவக்குமார் ,உதவியாளர் ஷாஜஹான் ஆகியோர்  செய்து இருந்தனர்.முகாமின் நிறைவாக ஆசிரியை சாந்தி  நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பள்ளி  மாணவர்களுக்கான நலவாழ்வு திட்ட மருத்துவ  முகாம் நடை பெற்றது.மருத்துவர் மாணவர்களை பரிசோதனை செய்கின்றார்..

No comments:

Post a Comment