Thursday, 31 December 2015

சுட்டித் தமிழ்!
மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பவராக மட்டும் அல்லாமல், நண்பராகவும் விளங்கும் ஆசிரியரைப்  பற்றி சுட்டி விகடனில் புத்தாண்டு தினமான (1-1-2016) வருடத்தின் முதல் தினமான இன்று தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 5ம் வகுப்பு மாணவி  காயத்ரி  கூறுவதைக் கேட்கத் தவறாதீர்.அழைக்க வேண்டிய எண் : 044-66802905.( காலை 6 மணிமுதல் இரவு 12மணி வரை கேட்கலாம்)









அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .





லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர் ,

சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,

தேவகோட்டை.
காந்திய கிராம சமூக சேவா சங்கம் நடத்திய கலை நிகழ்ச்சிகளில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு 

Monday, 28 December 2015

மண்டல அளவில் நடைபெற்ற ஓவிய  போட்டியில் 

தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை 


தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி


    தேவகோட்டை- திருச்சி தேசிய  அண்ணா கோளரங்கத்தில்  திருச்சி மண்டல மின்சார வாரியம் சார்பில் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவிய போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசு பெற்றார்.  

Thursday, 24 December 2015

          ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Tuesday, 22 December 2015

அகம் ஐந்து ,புறம் ஐந்து
மாணவர்களுக்கான ஆளுமை பயற்சி

அம்மா,அப்பா சொல்வதை நன்றாக கேட்போம் மாணவர்கள் உறுதி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கான அகம் ஐந்து ,புறம் ஐந்து என்ற தலைப்பில் ஆளுமை தன்மை வளர்க்கும் பயற்சி நடைபெற்றது.

Monday, 21 December 2015

சுட்டி விகடனின் அழகான மினி வேன் 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான மினி வேன்  வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
சுட்டி விகடன் 31/12/2015 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான மினி வேன்  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .


Sunday, 20 December 2015

சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 15மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

Saturday, 19 December 2015

 சுட்டி ஸ்டார் மாணவிக்கு பரிசு  கொடுக்க போட்டோ எடுத்த ஜூனியர் விகடன் புகைபடகலைஞர் திரு.சாய் அவர்கள் 

சுட்டி விகடனின் இந்த ஆண்டிற்கான சுட்டி ஸ்டார் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமி அவர்களை ஜூனியர் விகடன் புகைபடகலைஞர் திரு.சாய் அவர்கள் சுட்டி விகடன் இதழுக்காக போட்டோ எடுத்த போது எடுத்த படங்கள். சுட்டி விகடனின் பரிசு பொருள் என்ன என்பது  விரைவில் தெரிவிக்கபடும் என்று சுட்டி விகடன் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மாணவர்களையும்,ஆசிரியர்களையும் பல்வேறு வகைகளில்  தொடர்ந்து ஊக்கபடுத்தி வரும்  விகடன் குழுமத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

Friday, 18 December 2015

பள்ளி வயது வளர் இளம் பெண்கள்  எவ்வாறு தன் சுத்தம் பேண வேண்டும்? மருத்துவர் அறிவுரை                   
                                      தேவகோட்டை -தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 6,7,8 வகுப்பு மாணவிகளுடன் மருத்துவர் பார்கவி மணிவண்ணன் வளர் இளம் பெண்களுக்கான தொற்றா நோய் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடத்தினார்.

Monday, 14 December 2015

இன்றைய இந்து ஆங்கில நாளிதழில்   கலர் படத்துடன் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி

http://www.thehindu.com/news/national/tamil-nadu/on-campus/article7985099.ece



NATIONAL » TAMIL NADU

December 14, 2015
Updated: December 14, 2015 05:45 IST

On Campus


  • SPECIAL CORRESPONDENT

COMMENT   ·   PRINT   ·   T  T  
  • Meet on An Exhibition of products made by children being displayed at Chairman Manickavasagam Middle School in Devakottai; (right) Meet on ‘Computational intelligence and computing research’ under way at Vickram College of Engineering, Enathi.
    Meet on An Exhibition of products made by children being displayed at Chairman Manickavasagam Middle School in Devakottai;

WASTE PUT TO USE

An exhibition of products made by children from waste was inaugurated at Chairman Manickavasagam Middle School, Devakottai, by Lakshmi Devi, Assistant Elementary Educational Officer. Students, from Class I to Class VIII, displayed over 100 products made from thermo coal, leaves, containers and other used items. L. Chockalingam, Headmaster, presided over the inaugural session. Sakthi, student, proposed a vote of thanks.

Sunday, 13 December 2015

பிஞ்சுகள் செய்த வெள்ள நிவாரணம்

இன்றைய தினமலர் நாளிதழில்   கலர் படத்துடன் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி 




Saturday, 12 December 2015

 தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம்
மனிதனில் மட்டுமே காணப்படக்கூடிய நோய் தொழுநோய்

தொழுநோய் மேற்பார்வையாளர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Friday, 11 December 2015

   ரோட்டரி சங்கம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Monday, 7 December 2015

                      கழிவிலிருந்து செல்வம் கண்காட்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களில் வீனாவதிலிருந்து செலவு எதுவும் இல்லாமல் நல்ல பொருள்கள் தயாரித்து  பயன்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது.

Wednesday, 2 December 2015

      மாற்று திறனாளிகளை ஊக்க படுத்துங்கள்  

கல்லூரி பேராசிரியை பேச்சு                                   

 சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.



Friday, 27 November 2015

வங்கியில்  படிவம் இல்லாமல்  கிரீன் கார்டு மூலம் பணம் செலுத்துவது  எப்படி?
கிரீன் கார்டு என்றால் என்ன?
  வங்கி நடைமுறைகள் எப்படி?
  தேவகோட்டை  நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம்.

Thursday, 26 November 2015

பள்ளியில் மாணவி, பக்கத்து வீட்டில் ஆசிரியை என்கிற தினமலர் செய்தியை படித்து விட்டு சென்னையில் இருந்து பள்ளியையும்,மாணவியையும் பாராட்டி,வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ள ( இது வரை அறிமுகம் இல்லாத நிலையில் நல்ல தகவலுக்காக  வாழ்த்தி ) புதிய நண்பருக்கு நன்றி.

Wednesday, 25 November 2015



 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ( அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் 

Saturday, 21 November 2015

மத்திய அரசின்  போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 

                              
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Wednesday, 18 November 2015

                    சுட்டி  விகடனின் சூப்பர் நேவி ஹெலிகாப்டர்

சுட்டி   கிரியேசன்ஸ் சூப்பர் நேவி ஹெலிகாப்டர் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

Tuesday, 17 November 2015

                        பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் 

தேவகோட்டை- தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Sunday, 15 November 2015

 ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ,மிக பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் (அரசு உதவி பெறும் பள்ளி ) 1ம் வகுப்பு மாணவியின் பேச்சை காண 16/11/2015 அன்று ( மாலை சரியாக 5.35 மணிக்கு ) வாருங்கள்.முழு நிகழ்ச்சியையும் ( 1 மணி நேரம்) 5ம் வகுப்பு மாணவி காயத்ரி தொகுத்து வழங்க உள்ளார்.மகிழ்ச்சியாக இருக்க பாடல்கள்,கருத்து மிக்க பொம்மலாட்ட நாடகம்,ஆங்கில நாடகங்கள் என அனைத்தையும் காண வாருங்கள்.



தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின்  ( அரசு உதவிபெறும்  பள்ளி ) சார்பாக கலை நிகழ்ச்சிகள் 16/11/2015
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்களின் சொற்பொழிவு 

 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவியரின் இறைவணக்க பாடல் 

Friday, 13 November 2015

தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை ( 14/11/2015) சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனம் அவர்கள் பரம் பொருளின் வடிவம் என்கிற தலைப்பில் மாலை 5.50 மணி அளவில் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.அனைவரும் வருக.
தேவகோட்டை கந்த சஷ்டி விழா கழகம் சார்பில் நடைபெறும் 70ஆம் ஆண்டு விழாவின் தொடர் நிகழ்வில் நாளை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் மாலை 5.30 மணி அளவில் இறை வணக்கம் பாடல் பட உள்ளனர்.

Wednesday, 11 November 2015

பள்ளியில் மாணவி;பக்கத்து வீட்டில் ஆசிரியை

இன்றைய தினமலர் நாளிதழில் சென்னை பதிப்பில் 4ம் பக்கம் மாணவியின்  கலர் படத்துடன் வெளியாகி உள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் செய்தி 

 





 கோவிலூர் கல்லூரியில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

                    

  பகிர்தலில் மன மகிழ்வு வார விழாதொடர்ச்சி
 கற்றலில் குறைபாடு உள்ள மாணவிக்கு மற்றொரு மாணவி வீட்டிற்கே சென்று எழுத்து கற்று கொடுத்து உதவுதல் 
                  (JOY OF GIVING WEEK)
சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை. 



Tuesday, 10 November 2015


 சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்

Sunday, 8 November 2015

குக்கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்  பள்ளிக்கு அறம் செய விரும்பு திட்டத்தில் நல்ல தண்ணீர் மெசின் வழங்குதல் ( இந்த வார ஆனந்த விகடனில் இது தொடர்பான செய்தி வெளியாகி உள்ளது)

Saturday, 7 November 2015

கோவிலூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ் வழங்குதல் 

Friday, 6 November 2015


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு  அதிகாரி செயல் முறை விளக்கம் 
      சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு செயல் முறை விளக்கம் அளித்தார்.

Tuesday, 3 November 2015

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றி
சர்வதேச பயற்சியாளர் பேச்சு


Saturday, 31 October 2015

                                        தேசிய ஒருமைப்பாட்டு தின விழா 

தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப்பட்டது.

Thursday, 29 October 2015

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  முதலாம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

இந்நிகழ்வினை வெள்ளிகிழமை ( 30/10/2015),சனிகிழமை (31/10/2015),ஞாயிறு(1/11/2015) மூன்று நாட்களும் மாலை 6.30 மணி முதல் 7.00 மணி காணுங்கள்
தினமலர்  பத்திரிக்கை பள்ளி அளவில் நடத்திய   போட்டிகளில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க  நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர்

Tuesday, 27 October 2015

மாநில அளவில் நடைபெற்ற நியூஸ் 7 சேனலில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு  வெற்றி  பரிசாக  ரூபாய் 5,000 பணமும்,சான்றிதழும்   பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 

அன்பின் சொக்கலிங்கம் சார் 

நேற்று காலையில் சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்கையில், காலை 5 30 மணி முதல் முயற்சி செய்து 6 மணிக்கு செய்தித் தாள் கிடைத்ததும் காரைக்குடி தமிழ் இந்து வாசகர் திருவிழாவில் உங்கள் பள்ளிக்கூடத்தின் பெயர் இருக்கிறதா என்றுதான் முதலில் தேடிப் பார்த்தேன்...
ஆனால் எனக்கு விடை இன்றைய தமிழ் இந்துவில் எதிர்பாராத இடத்தில் பதில் இருந்தது....வாசகர் கடிதங்கள் இடம்பெறும், இப்படிக்கு இவர்கள் பகுதியில்!  ஆஹா...பள்ளிக் குழந்தைகள் பெயரோடு!

வாழ்த்துக்கள் சார்...உங்கள் இடையறாத ஊக்கத்திற்கு! அந்த அன்பர் திருப்பத்தூர் ராமநாதன் அவர்களுக்கும்!

எஸ் வி வேணுகோபாலன் 




Published: October 27, 2015 11:16 ISTUpdated: October 27, 2015 11:16 IST

ஆர்வம் கொண்ட அந்த மாணவர்கள்!

COMMENT   ·   PRINT   ·   T+  
கடந்த ஞாயிறு அன்று காரைக்குடியில் நடைபெற்ற வாசகர் திருவிழாவில் பங்கேற்ற என் கவனத்தை ஈர்த்தார்கள் - பார்வையாளர்கள் வரிசையில் துறுதுறுவென அமர்ந்திருந்த பள்ளிச் சிறுவர்கள் 11 பேர்.
அவர்கள் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் வகுப்புக்கு ஒருவர் என்ற வீதத்தில் ஜெயஸ்ரீ, வெங்கட்ராமன், ஜனஸ்ரீ, அய்யப்பன், கார்த்திகேயன், உமாமகேஸ்வரி ஆகியோரும், ஏழாம் வகுப்பு சார்பில் பரமேஸ்வரி, ராமேஸ்வரி, எட்டாம் வகுப்பு சார்பில் தனம், பூவதி, கண்ணதாசன் என அவர்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.
தங்களது கதை, ஓவியங்களை ‘தி இந்து’வின் மாயாபஜார் இணைப்பிதழில் வெளியிட்டு ஊக்கப்படுத்திவருவதால், வாசகர் திருவிழாவுக்கு உற்சாகமாகக் கிளம்பிவந்ததாக அந்தக் குழந்தைகள் சொன்னபோது வியப்பாக இருந்தது.
பாடத்துக்கு வெளியே சென்று பொது விஷயங்களைப் பற்றி மாணவர்களுடன் பேச ’தி இந்து’ தமிழ் நாளிதழ் உதவிபுரிவதாகச் சொன்னார் அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியை கலாவதி. இவர்களுடன் ஒரு குழந்தையின் தாய் சித்ரா, மற்றொரு குழந்தையின் பாட்டி சீதாலட்சுமி ஆகியோரும் விழாவுக்கு வந்திருந்தது என்னை நெகிழவைத்தது.
ராமநாதன், திருப்பத்தூர்.

Friday, 23 October 2015

 தஞ்சாவூர் மாவட்டம் திருகருகாவூரில் பாடலாசிரியர் அறிவுமதி கலாம் அவர்களின் நினைவாக அக்னி சிறகுகள்  அறகட்டளை என்ற அமைப்பின் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கினார்.ஏற்புரை வழங்கும்போது எடுத்த படம்.






Thursday, 22 October 2015

 நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை நடைப் பெற்றது.

Monday, 19 October 2015

எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா 

   தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல் .ஐ.சி.சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் தொடர்பான செய்தி தொகுப்பு நியூஸ் 7 தமிழ் தொலைக்கட்சியில் காணுங்கள் 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் பேச்சு போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு  வெற்றி பெற்றது தொடர்பான செய்தியையும் , பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பான செய்தி தொகுப்பையும் இன்று இரவு 11 மணி முதல் 11.30 மணிக்குள்ளும் , நாளை 20/10/2015 செவ்வாய் கிழமை மதியம் 2மணி முதல் 2.30 மணிக்குள்ளும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் காணுங்கள்.   லெ .சொக்கலிங்கம் ,தலைமை ஆசிரியர் ,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.நன்றி 

http://ns7.tv/ta

Sunday, 18 October 2015

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 


நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி  1ம் ஆண்டு நிறைவு  பேச்சு போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி 

Saturday, 17 October 2015

 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சேனலில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இன்று பகல் 12 மணி 

Friday, 16 October 2015

 தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015  விழா- எனது நன்றிகள்

தினமலர் லட்சிய ஆசிரியர் விருது 2015  விழா நடைபெறும் இடம் மதுரை.விருது பெறுபவருக்கு மட்டுமே அனுமதி என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தினமலர் பத்திரிக்கையில் வெளியான உடன் அன்று காலை முதல் எனக்கு அறிமுகம் இல்லாத  மற்றும் அறிமுகமான என் மீது அன்பு கொண்ட அதிகமானோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர். திருப்பத்தூர் ஓய்வு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுப்பையா ,தேவகோட்டை ராம் நகர் ஜெய பிரபகரன்பண்டியன், சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி  ஆசிரியை முத்து மீனாள் ,தேவகோட்டை கருவுல அலுவலர் திரு.முருகன்,திருப்பத்தூர் ஓய்வு AEO  திரு.ரெங்கசாமி ,தேவகோட்டை ABDO திரு.குமார்,கல்வித்துறை ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அலுவலர் திரு.நாகசுந்தரம்,எனது நண்பர் விருதுநகர் திரு செந்தில்,மானமதுரை ஆசிரியை மீனாட்சி நடராஜன்,தேவகோட்டை NSMVPS தமிழ் ஆசிரியர் ஓய்வு திரு.சண்முகநாதன்,தேவகோட்டை வைரம் சுவாமிநாதன் செட்டியார்,TNSF மாவட்ட செயலாளர் திரு.ஜீவா ,தேவகோட்டை அரவிந்த் ஸ்நாக்ஸ் ஆச்சி அவர்கள்,ராமநாதபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை சன்மார்க்க சங்கம் செயலர் ,தேவகோட்டை போஸ்ட் மேன் ( எங்கள் பள்ளி பகுதி )திரு.ராஜேந்திரன்,காரைக்குடி ரயில்வே அதிகரி திரு.சந்திர சேகர்,திண்டுக்கல் ஆசிரியர் ஏங்கல்ஸ் ,புளியால் பள்ளி ஆசிரியர் சேவியர்,தேவகோட்டை டி பிரிடோ ஆசிரியர்கள் ப்ரைட்,ஜெயசீலன்,சுப்ரமணியன் திருப்பத்தூர் தலைமை ஆசிரியர் திரு.ஸ்ரீதர் ராவ்,குழிபிறை முன்னாள் தலைமை ஆசிரியர் பால  கிருஷ்ணன்,கீழசிவல்பட்டி உறவினர் திரு.அழகப்பன்,(இவர்கள் அனைவரும் தொலைபேசி வாயிலாக ) ஆகியோருக்கும்,முக நூல் ,வாட்சப் ,மெசேஜ் வாயிலாகவும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும்,தற்போது வாழ்த்து சொல்லி வருபவர்களுக்கும் ,like கொடுப்பவர்களுக்கும்,  விருது கிடைக்க காரணமான அனைவருக்கும் எனது நன்றி.

Thursday, 15 October 2015

 அகில இந்திய வானொலியான 

கோடை பண்பலை வானொலியில் அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நேரடி ஒலிபரப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள மாணவர்கள் பங்கேற்பு 


Tuesday, 13 October 2015

               நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சி பட்டறை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலை வழிக் கற்றல் பயற்சிப் பட்டறை நடைபெற்றது.