Wednesday, 25 November 2015



 தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ( அரசு உதவி பெறும் பள்ளி ) மாணவ,மாணவியர் 



கோவிலூர் கல்லூரியில் நடைபெற்ற ஓவிய போட்டி,பேச்சு போட்டி,ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்டு  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  போட்டிகளில் வெற்றி பெற்றனர்.தேவகோட்டையில் இருந்து கலந்து கொண்ட பள்ளிகளில் அரசு உதவி பெறும் நடுநிலைப்  பள்ளி இது ஒன்றுதான் என்பது குறிப்பிடதக்கது.




சமீபத்தில் காரைக்குடி  கோவிலூர் ஆதினம் பள்ளி ,கல்லூரிகள் சார்பில் கோவிலூரில் மாணவ,மாணவியர்க்கு ஓவியம் வரைதல்,பேச்சு போட்டி,கட்டுரை போட்டி நடைபெற்றது.இதனில்  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளஅனைத்து பிரிவுகளிலும் காலை வேளையில் தேவகோட்டையில் இருந்து ஆசிரியர்கள் இருவர் உதவியுடன் பேருந்தில் புறப்பட்டு சென்று போட்டிகளில் கலந்து கொண்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிக்கு சான்றிதழும்,பரிசாக புத்தகங்களும் வழங்கப்பட்டன.இப்போட்டிகளில் பெருவாரியான தனியார் ஆங்கில வழி கல்வி பள்ளிகளே கலந்து கொண்டன.தனியார் பள்ளி மாணவ,மாணவியர் இடையே போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியாகிய இப்பள்ளி மாணவ ,மாணவியர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment