Thursday, 15 October 2015

 அகில இந்திய வானொலியான 

கோடை பண்பலை வானொலியில் அப்துல் கலாம் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நேரடி ஒலிபரப்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள மாணவர்கள் பங்கேற்பு 



                                                தேவகோட்டை-  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் நேரடி வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்று நிகழ்ந்தது.22 மாவட்டங்களில் ஒலிபரப்பாகும் கோடை வானொலி பண்பலை நிகழ்ச்சியில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெற்ற அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெற்ற நேரடி விநாடி வினாவில் மாணவர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் செய்திருந்தார் .ஆசிரியைகள் முத்து மீனாள் ,முத்து லெட்சுமி,செல்வ மீனாள் ,சாந்தி ஆகியோர் வினாடி வினா தொடர்பாக மாணவர்களுக்கு பயற்சி அளித்தனர்.வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மாணவர்கள் பெறும் மகிழ்ச்சி அடைந்தனர்.இதற்கான தகவலை பள்ளிக்கு வழங்கிய நேயர் காளிமுத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.கோடைபண்பலை வானொலிக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment