பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்
தேவகோட்டை- தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள் முழுவதையும் மிகபெரிய மேடையில்
ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் 5ம் வகுப்பு மாணவி காயத்ரி,உமா
மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்கள் .கலை நிகழ்ச்சிகளில் 1ம் வகுப்பு மாணவி
ஜெய ஸ்ரீ,2ம் வகுப்பு மாணவி அம்மு ஸ்ரீ,வெங்கட்ராமன் ,3ம் வகுப்பு மாணவி ஜன
ஸ்ரீ ஆகியோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.மாணவ,மாணவியரின் குழு நடனம்,தனி
நடனம்,ஆங்கில நாடகங்கள்,தொழிற்சாலை கழிவு நீரை ஊரின் குளத்தில் விடுவதால்
ஏற்படும் ஆபத்தை எடுத்து சொல்லி அதனை சரி செய்யும் கருத்து மிக்க சிந்தனையை
தூண்டும் வகையில் பொம்மலாட்ட நாடகமும் நடைபெற்றது.கந்தசஷ்டி விழாவின்
பெருமைகளை ஆங்கிலத்தில் மாணவி ராஜேஸ்வரியும் ,3ம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன்
தமிழிலும் எடுத்து சொன்னார்கள்.கலை நிகச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை
ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரிய குழுவினர் செய்திருந்தனர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் கந்த சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியபோது எடுத்த படம்.
தேவகோட்டை- தேவகோட்டை கந்த சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் கந்த சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியபோது எடுத்த படம்.
No comments:
Post a Comment