Thursday, 16 February 2017

இன்றைய நிகழ்ச்சி 17/02/2017

பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான  ஆளுமை தன்மையை வளர்ப்பது எவ்வாறு ?

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,வளாகம்,தேவகோட்டை.

நாள் : 17/02/2017

நேரம் : காலை 9.15 மணி

பயிற்சி அளிப்பவர் : திரு.K.M.ராஜேஷ், நிருவாக இயக்குனர்,ராஜேஷ் IAS பயிற்சி மையம் ,(அரியலூர்,சேலம்,தஞ்சாவூர் ).

அனைவரும் வருக.அனுமதி இலவசம்.

நீங்களும் IAS ஆகலாம் என்கிற தலைப்பிலும் தகவல்கள் வழங்கப்பட உள்ளது.அனைவரும் அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
100 சதவிகிதம் (பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ) ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாராட்டுதல் நடைபெற்றது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கதுக்கு சிவகங்கை மாவட்ட மருத்துவ துறை துணை இயக்குனர் யசோத மணி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Monday, 13 February 2017

சேக்கிழார் விழாவில்  பெரியபுராணம்    பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா  


      தேவகோட்டை -    தேவக்கோட்டடை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

Saturday, 11 February 2017

பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா 


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.
 
 

Tuesday, 7 February 2017

    ரூபெல்லா பீதியை முறியடித்த மாணவர்கள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் கீழ்  ஊசி போட்டுக்கொண்ட  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.

Monday, 6 February 2017

100 சதவிகிதம்  (பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  ) மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் பெற்றோர் ஒத்துழைப்புடன் போடப்பட்டது

 மீசில்ஸ் ரூபெல்லா   தடுப்புசித் திட்டம் துவக்க விழா

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்ட துவக்க விழா நடைபெற்றது.100 சதவிகிதம்  (பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  ) மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் பெற்றோர் ஒத்துழைப்புடன் போடப்பட்டது 

Sunday, 5 February 2017

 மீன்கள் இரண்டு வருடம் முதல் 75 வருடம் வரை ஆயுட்காலம் கொண்டது 

 மீன்வள பல்கலைகழகத்தின் முதன்மை செயல் அலுவலர் தகவல் 


தமிழகத்தில் மாநில அளவில் முதன் முறையாக பள்ளி அளவில் மாணவர்களிடம் வண்ண மீன்கள் வளர்ப்பது  தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்  நிகழ்ச்சி 

நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்களுடன் ஏராளமான  கல்லூரி மாணவர்களும் பங்கேற்பு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வண்ண மீன்கள் வளர்ப்பு  இலவச பயிற்சி மற்றும் மீன்கள் , மீன்வளர்ப்பு பற்றிய படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.