Thursday, 16 February 2017

100 சதவிகிதம் (பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ) ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாராட்டுதல் நடைபெற்றது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கதுக்கு சிவகங்கை மாவட்ட மருத்துவ துறை துணை இயக்குனர் யசோத மணி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.



மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டம் குறித்து பல்வேறு வட்சப் தகவல்கள் மூலம் பீதியடைந்து இருந்த பொதுமக்களையும்,பெற்றோர்களையும், பிற பள்ளி மாணவர்களையும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்  அரசின் தடுப்பு ஊசி திட்டமான தடுப்பூசியை போட்டு நல்ல உடல் நலத்துடன் உள்ளதை தங்கள் விழிப்புணர்வு பேரணியின் வாயிலாக தெளிவு படுத்தினார்கள் என்பது பாராட்டபடவேண்டியது. தமிழக அளவில் முதன்முதலாக ரூபெல்லா தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment