Monday, 27 July 2026

 தேவகோட்டையில் அப்துல் கலாம் நினைவு தினம்: மாணவர்களுக்கு டி.எஸ்.பி. கண்ணன் பரிசு வழங்கி பாராட்டு


































தேவகோட்டை, ஜூலை :

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்புரை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) கண்ணன் தலைமை தாங்கி, மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “ஒரு மனிதனின் வெற்றிக்கு மிக முக்கியமானது முயற்சி; அதிலும் விடாமுயற்சி அவசியம். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி கற்று, வாழ்க்கையில் உயர்ந்து தங்கள் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். ஆசிரியர்கள் வழங்கும் பணிகளை சுமையாகக் கருதாமல் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும். தங்களை விட வயதில் இளையவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினக்கூலி தொழிலாளர்களாக உழைக்கும் பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து, கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டும். டாக்டர் அப்துல் கலாம் கூறிய உயரிய சிந்தனைகளையும் வாழ்க்கை நெறிகளையும் பின்பற்றி வாழ வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அப்துல் கலாமின் பொன்மொழிகள் ஒப்புவித்தல், கவிதை வாசித்தல், பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.எஸ்.பி. கண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் மாணவி நந்தனா நன்றியுரை வழங்கினார்.

பட விளக்கம்:
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சியில், பொன்மொழிகள் ஒப்புவித்தல், பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை டி.எஸ்.பி. கண்ணன் பரிசுகள் வழங்கினார். அருகில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்.


வீடியோ :

https://www.youtube.com/watch?v=S7960qs66og


https://www.youtube.com/watch?v=oWuUKzGUsrM

No comments:

Post a Comment