Sunday, 7 June 2026

 அரசின் விலையில்லா புத்தகங்கள், நோட்டுகள் மாணவர்களுக்கு வழங்கல்

தேவகோட்டையில் பெற்றோர்–ஆசிரியர் பங்கேற்புடன் சிறப்பு விழா





தேவகோட்டை, ஜூன் 7:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், புதிய கல்வியாண்டை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் பெற்றோர்–ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களான ரஞ்சிதா, சரவணன், ஜோசப் மற்றும் பொன்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினர். கல்வி வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு வரும் நலத்திட்டங்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் துணைபுரிவதாக அவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியைகள் முத்துலெட்சுமி, பாண்டிச்செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

புதிய கல்வியாண்டை உற்சாகமாகத் தொடங்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பட விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழாவில், தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் பெற்றோர்–ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்களான ரஞ்சிதா, சரவணன், ஜோசப் மற்றும் பொன்மணி ஆகியோர் மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினர்.

No comments:

Post a Comment