Sunday, 17 May 2026

 

மதுரையில் மேஜிக் மணி நடத்திய முதலீட்டு கருத்தரங்கம்: தொழில், முதலீடு, பொருளாதாரம் குறித்து வல்லுநர்கள் விளக்கம்






















































தொழிலில் வெற்றிக்கு ‘போக்கஸ்’ மற்றும் தினசரி முன்னேற்றம் அவசியம் – நேச்சுரல்ஸ் குமாரவேல்

நண்பர்களே சமீபத்தில் மதுரையில் மேஜிக் மணி நடத்திய ஷேர் மற்றும் மியூச்சுவல் பண்டு தொடர்பான கூட்டத்திற்கு சென்றிருந்தேன்.

முதலாவதாக நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குமாரவேல் பேசியபோது,

இன்றைய காலகட்டத்தில் பிசினஸ் என்று சொல்வது பெரிய ஊரில் எல்லாம் கிடையாது. பெரிய இடமாக இருக்க வேண்டும் என்பது எல்லாம் இல்லை.

தேடுதல் இருக்கவேண்டும். போக்கஸ் இருக்க வேண்டும். சிறிய ஊர்களிலும் மிகப்பெரிய அளவில் தொழில் நடைபெற்று வருகின்றது.

ஒரே நேரத்தில் இரண்டு முயல்களை பிடிக்க முயற்சிக்க வேண்டாம். ஒரு முயலைப் பிடிப்பதற்கு திரும்பத் திரும்ப தொடர்ந்து முயற்சி செய்தல் வேண்டும். அதுபோல் செய்ததுதான் நான் நேச்சுரல் நிறுவனத்தை உருவாக்கினேன். எல்லோரும் சேர்ந்து செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

தினசரி இம்புரோவெமன்ட் இருக்க வேண்டும் .ரொம்ப சூப்பரா இருக்கணும்னு அவசியம் இல்ல. ஆனா டெய்லி இம்ப்ரூவ்மென்ட் இருக்க வேண்டும்.

நீங்க செய்யக்கூடாத வேலைய ரொம்ப சூப்பரா செய்ய வேண்டாம். ஒரு வேலையை செய்யணுமா, வேண்டாமான்னு முதல்ல யோசிங்க. அதை செய்யணும்னு முடிவு பண்ணிட்டா தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும்.

ஓவர் நைட்ல ஒபாமா ஆகமுடியாது. ஓவர் நைட்ல உப்புமாதான் பண்ண முடியும். தொழில் வெற்றி பெற காத்திருப்பு, தினசரி முன்னேற்றம், போக்கஸ் இது மூன்றும் தான் மிக முக்கியமான விஷயங்கள்.

முதல்ல தொழிலா ஆரம்பிக்கிறதுக்கு தைரியம் வேணும். கேஸ்ப்லொவ் ப்ராப்ளம் இல்ல.

இரண்டு சிலைகள் இருந்தன. ஒரு சிலை மார்பில் ஆக மாறிவிட்டது. மற்றொரு சிலை கற்சிலையாகவே இருந்தது.

வாங்க வருபவர்கள் மார்பில் சிலையை அதிகமாக விரும்பி கேட்டார்கள். ஏன் என்று கற்சிலை கேட்டதற்கு, நீ உன்னை உருவாக்கிய பொழுது கல்லாக தள்ளித் தள்ளிப் போய் விட்டாய். ஆனால் நானும் அந்த சிற்பி அடித்து அனைத்தையும் தாங்கிக் கொண்டேன். அதனால் இன்று மார்பில் சிலையாக நன்றாக இருக்கின்றேன்.

எனவே உங்களுக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தால்தான் வாழ்க்கையில் வெற்றியாளராக வரமுடியும். இம்பாக்ட் தே வேர்ல்டு சிம்பிளிசிட்டி.

அதாவது உலகம் நல்லவற்றையே உங்களுக்கு கற்றுத்தருகிறது. நீங்கள்தான் அதனை கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது மிகச் சிறந்த முயற்சியே வெற்றி ஆகும். அது இலக்கை உடையதாக இருக்க வேண்டும்.

ஃபுட்பால் கால்பந்து விளையாட்டுக்கு சென்றுவிட்டு அங்கு அனைத்து வீரர்களும் தயாராக இருக்கும்போது கோல் போஸ்ட் இல்லாமல் இருந்தால் எவ்வாறு விளையாட முடியும்? அதுபோல் உங்களுக்கும் இந்த உலகில் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது என்கிற தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்த உதவிகளை இந்த சமுதாயத்திற்கு செய்யுங்கள். நான் நேச்சுரல் முடி திருத்தும் தொழில் ஆரம்பிக்க போகிறேன் என்று கூறியதும் எனது அம்மா, அப்பா குடும்பத்தில் யாருமே இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் 15 ஆண்டு காலமாக நான் தொடர்ந்து செய்தேன். இன்னும் செய்து கொண்டே இருக்கின்றேன். முதலில் வேண்டாம் என்று கூறிய எனது அம்மா சில ஆண்டுகளில் எனது அம்மா எனக்கும் ஒரு ஊருக்கு பிரான்சிஸ் கொடு என்று கேட்டார்கள். அதுதான் தொழிலின் வெற்றி.

இந்த முடிதிருத்தும் தொழிலில் மிகவும் சிறப்பாக செய்யக்கூடிய பலரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை விடவும் நாம் தினமும் ஏதாவது ஒரு முன்னேற்றம் தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்பதால் தான் வெற்றி அடைய முடிகிறது.

சமுதாய நலனில் மிகுந்த அக்கறை இருக்க வேண்டும். அலெக்ஸாண்டர் தன்னுடைய இறப்பின்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அவருடைய இரண்டு கைகளையும் வெளியே வைக்கச்சொல்லி சொல்லியிருந்தார். அந்த கைகளில் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை சொன்னார்.

எனவே உலகத்திற்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உலகம் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும். உங்களுடைய கருத்துக்களை அனைவருக்கும் எடுத்துச் செல்வதற்கு மிகுந்த அளவில் உதவி செய்யுங்கள் வெற்றி நிச்சயம். இவ்வாறு குமாரவேல் அவர்கள் பேசினார்கள்.

இவருடைய பேச்சு புத்துணர்ச்சி தருவதாகவும், தன்மைம்பிகை தருவதாகவும் அமைந்து இருந்தது.


உலக பொருளாதாரம், இந்திய வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் – கார்த்திக்ராஜா விளக்கம்

யூடிஐ மியூச்சுவல் ஃபண்டின் மேனேஜர் கார்த்திக்ராஜா பேசும்போது , உலக அளவில் கடன் 1990ஆம் ஆண்டு 29 சதவீதமாக இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு 95 சதவீதமாக இருப்பதாக தெரிகிறது. இதனில் இந்தியாதான் உலக அளவில் குறைவான கடனை பெற்றுள்ளது

இன்ஃப்லேஷன் அதிகமாவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. மத்திய வங்கிகள் கோல்ட் அதிகமாக அதிகமாக வாங்குகின்றது.

இந்தியாவில் ஆவரேஜ் வயது 30 வயதுக்கும் குறைவானோர் அதிகமாக உள்ளனர். வேர்ல்டு போபுலேஷன் குழந்தைகள் குறைகின்றது. பெரியவர்கள் அதிகமாகி விட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் பத்து வருஷத்தில் வளர்ச்சி நிச்சயம் அதிகமாக இருக்கும். சீனா கவர்மெண்ட் சுய தொழில் செய்வதற்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். அதனால் பல்வேறு தொழில்களும் அவர்களது நாட்டில் மிகவும் வலுப்பெற்று இருக்கின்றது.

சீனா தனது ரியல் எஸ்டேட் பிரிவை குறைத்துள்ளது. எக்ஸ்போர்ட்ஸ் அதிகமாக உள்ளது. சுயமாக தயாரிப்பு செய்வதால் இன்ஃப்லேஷன் குறைந்து கொண்டே வருகின்றது.

ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் தைவான், கொரியா, சீனா போன்றவை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளன.

ஏ.ஐ.தொழில்நுட்பத்திற்கு அதிகமாக பவர் தேவைப்படுகிறது. எனவே பவர் செக்டர் இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜிடிபி இருபத்தி இரண்டாயிரத்து இருபத்தி நான்கு வருடம் முதல் 2029 வரை 5 வருடம் 6சதவிகிதமாக சரியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அதிகமான வளர்ச்சி இருக்கும் என்றும் நம்பப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கவர்மெண்ட் வருமானம் அதிகமாகும் பொழுது கடன் குறைகிறது. வெளிநாட்டு கடன் கம்மியாக நாம் தான் உள்ளோம்.

தெற்கு ஆசியாவில் ஆயில் எக்ஸ்போர்ட்ஸ் நாம் செய்கின்றோம். அதே நேரத்தில் ஐடி சர்வீஸ் மிக அதிக அளவில் நாம் வெளிநாடுகளுக்கு செய்து கொடுத்துள்ளோம். அதன் மூலமாக நமக்கு வருமானம் அதிகமாக உள்ளூர் வந்துள்ளது.

ஒரு கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு நம் இந்தியாவில் இருக்கின்றது. ஜாப் புதிது புதிதாக நாம் தயார் செய்வதால் ஜிடிபி அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.

IPO அதிக அளவிற்கு வருமானம் தந்ததாக டிராக் ரெக்கார்டு கிடையாது. சில கம்பெனிகள் மட்டுமே லாபத்தை தந்துள்ளன. மூன்று வருடத்திற்கான ரோலிங் ரிட்டன் அவசியம் பாருங்கள்.

மிக எளிதாக, விரைவாக பணம் செய்வதற்கு எந்த பார்முலாவும் கிடையாது. உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறனை வைத்துதான் நீங்கள் முடிவு செய்ய முடியும். இவ்வாறு அதிகமான தரவுகளை வைத்து மிக தெளிவாக விளக்கினார்.


அசெட் அலோகேஷன் முதலீட்டாளரை காப்பாற்றும் – நிபுணர்கள் கருத்து

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி எஸ்.ஐ.எப். தொடர்பாக மிக விரிவான தகவல்களை எடுத்துரைத்தார்.

unify மியூச்சுவல் ஃபண்ட் செயல் அதிகாரி சரவணன் ஸ்டெபிளிட்டி as a strategy என்று கூறினார். பிரித்து முதலீடு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

பல்வகைப்படுத்துதல் தெரிந்து இருக்க வேண்டும் என்றும் கூறினார். நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இரண்டு வாரம் இதுபோல்தான் ரிசர்வ் இல்லாமலிருந்தது. பிறகு அது சரி செய்யப்பட்டது.

அதுபோல் அனைத்துமே சரி செய்யப்படும். வேலைவாய்ப்புக்கள் ஐடி கம்பெனிகள் குறைந்தாலும் வேறு வழிகளில் அதிகமாகிக் கொண்டே செல்கின்றது. நீங்கள் தற்பொழுது நடக்கும் ட்ரெண்டை கவனித்து வாருங்கள்.

3 லட்சம் கோடிவெளிநாட்டினர் விற்பது கடந்த இரண்டு வருடத்தில் நடைபெற்றுள்ளது. எப்பிஐ செல்லிங் அதிகமாக இருக்கிறது. us மார்க்கெட்டில் ai இன்வெஸ்ட்மென்ட் அதிகமாகி கொண்டே உள்ளது.

டேட்டா வைத்துதான் எல்லாமே நடக்குது. ரைசிங் இன்ப்ளஷன் மற்றும் ரைசிங் குரோவ்த் வைத்ததுதான் அனைத்துமே நடக்கும் . இது மாற, மாற எவ்வாறெல்லாம் மாற்றம் நாடாகும் என்பதை தரவுகள் மூலம் மிக எளிமையாக விளக்கினார்.

ஸ்மால் கேப் 40x ரிட்டன் தந்துள்ளது .வாரன் பஃபெட் கூறுவார் முதல் விதி, உங்களது பணத்தை இழக்காதீர்கள். .முதலில் சொன்ன விதியை எப்பொழுதுமே மதியுங்கள் என்று இரண்டாவதாக கூறுவார் .

டைட்டானிக் கப்பல் அதிகமான லைப் ஜாக்கெட் இருப்பதற்கு நான்கைந்து ரூம் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏறிய சிலர் ஏன் இந்த ரூமை விட்டு விட்டீர்கள்? இதனையும் ஆல் சேர்த்திருந்தால் லாபம் பார்க்கலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் அந்த நான்கைந்து அறைகளில் வைக்கப்பட்டிருந்த லைப் ஜாக்கெட் தான் டைட்டானிக் கப்பல் மூழ்கும் போது வாழ்க்கையை காப்பாற்றியது. அதுபோன்று அசெட் அலகேஷன் செய்துகொள்ளுங்கள்.அசட் அலோகேஷன் உங்களை காப்பாற்றும்.


ரியல் எஸ்டேட் முதலீட்டில் நீண்டகால லாப வாய்ப்பு – முகமது முனீர்

முகமது முனீர் என்பவர் ரியல் எஸ்டேட் தொடர்பாக பல்வேறு தகவல்களை எடுத்து உரைத்தார். வின்னிங் லெவன் அனாலஜி என்பதை எடுத்துக் கூறினார். ரியல் எஸ்டேட் என்பது தேவை மற்றும் விருப்பம் என்ற இரண்டும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

எக்ஸெல் சீட்டில் போட்டு இவ்வளவு லாபம் வரும் அவ்வளவு லாபம் என்றெல்லாம் கூற முடியாது என்பதையும் தெளிவு படுத்தினார்.

வீடு வாங்கினால் வாடகைக்கு விடுவதன் மூலம் 3% வருமானம் கிடைக்கும். ரீடைல் பிசினஸ் இருக்கு விட்டால் 8 பர்சன்டேஜ் வருமானம் கிடைக்கும். வேர் ஹவுசிங் விட்டால் 10% வருமானம் கிடைக்கும்.

லேண்ட்ல் இன்னைக்கு இன்வெஸ்ட் பண்ணா ஸிரோ வருமானம் . ஆனால் 20 வருஷத்துல 40 மடங்கு அதிக ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று கூறினார்.

உதாரணத்திற்கு சென்னை மாதவரம் ஏரியாவை எடுத்து விரிவாக விளக்கினார்.

ஷேர் வாங்க அல்லது மியூச்சுவல் ஃபண்ட் வாங்க வங்கியில் சென்று கடன் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். கோல்ட் வாங்குவதற்கும் வங்கியில் சென்று கடன் கேட்டால் கொடுக்க மாட்டார்கள்

ஆனால் இடம் வாங்குவதற்கு லோன் கேட்டால் வங்கியில் உடனடியாக தருவார்கள்.

எனவே ரியல் எஸ்டேட்டில் எம்ஆர்பி கிடையாது. இதிலும் இன்வெஸ்ட் செய்து 20 முதல் 40 மடங்கு லாபம் பெறுங்கள் என்று கூறினார்.


ஸ்மால் கேப் முதலீட்டின் முக்கியத்துவம் – நவீன் சந்திரமோகன்

ITUS கேப்பிட்டல் MUTUAL FUND FOUNDER நவீன் சந்திரமோகன் பேசும்போது, ஸ்மால் கேப் ல ஆல்பா பார்க்கணும். கன்சன்ட்ரேஷன் ஆஃ கன்விக்சன் இருக்கு. டைவர்சிஃபிகேஷன் இருக்குவேண்டும். பந்தன் ஸ்மால் கேப் மற்றும் நிப்பான் இந்தியா கோல்ட் ஸ்மால் கேப் பண்ட் நல்ல வருமானம் கொடுத்துள்ளதை தரவுகளோடு மிகத் தெளிவாக விளக்கினார்.ஸ்மால் கேப் பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது என்று விளக்கினார்.



“அணில் போல கொஞ்சம் கொஞ்சமாக சேமியுங்கள்” – ரெஜி தாமஸ்

ரெஜி தாமஸ் பேசும்போது , சைஸ் பெருசா இருந்தா அது ஆல்பாவுக்கு எதிரியா இருக்கும். aum சைஸ் பெரிதாக இருந்தால் ஆல்பா பாதிக்கும்.இதற்க்கு யானை, அணில் வச்சு ஒரு கதை சொன்னார்.

               யானைக்கு பேரு மேக்னஸ். அது காட்டிலும் மிகப்பெரிய ராஜாவா இருந்துச்சு. அது  நான் சொன்னா தான் எல்லாமே நடக்கும் என்று சொல்லி காட்டுக்குள்ள சொல்லிக்கிட்டு இருந்தது.

                                             நான் பெரிய ஆள்.என்னுடைய காலை எடுத்து வச்சா இந்த பூமி அதிரும் அப்படின்னு சொல்லி மிரட்டிக்கிட்டு இருந்தது. ஆனால் அந்த காட்டுக்குள் ஒரு அணிலும் இருந்தது.

                                              அந்த அணியில் மரத்துக்கு மரம் தாவி அதற்கு தேவையான உணவை எடுத்துகொண்டது.

                                       இப்படியே ஆறு மாசம் போயிட்டு இருந்தப்ப திடீர்னு காட்டுக்குள்ள தண்ணி வறட்சி ஏற்பட்டது. அப்பொழுது யானை மக்கனஸ் தலைமையில் மற்றவர்கள் எல்லாம் கூடி ஒரு குழு அமைத்து தண்ணிய கண்டுபிடிக்க முடிவு செஞ்சாங்க.

                                       . அந்தக் குழு, அதுக்குள்ள ஒரு சப் குழு  வச்சாங்க. அந்த துணைக்குழு மூலமா மறுபடியும் தேடினாங்க தண்ணீர்  கிடைக்கல. மறுபடியும் ஒரு துணைக் குழு வச்சு தேடினாங்க.

                            இதுக்கு நடுவுல அணில் அதற்கு வேண்டிய சாப்பாடு கிளை , கிளை தாவி மிக எளிமையாக சேகரிக்க ஆரம்பிச்சிருச்சு. இப்படியே போயிட்டு இருக்கு.  ஒரு மூணு மாசம் கழிச்சு ஒரு குளத்தை கண்டுபிடிச்சாங்க. ஆனா அந்த குளத்தில் தண்ணீர் வற்றி போச்சு.

                                       இதே மாதிரி மீண்டும் மறுபடியும் ஒரு குழு அமைத்து தேடினாங்க. வடக்குல ஒரு இடத்தில தண்ணி இருக்கக்கூடிய குளம் இருக்கிறதா சொன்னாங்க. அப்ப அணியில் பார்த்தா அதுக்கு தேவையான பொருள்களை சேகரித்து வைத்திருந்ததை  குரங்கு கண்டுபிடித்து யானை கிட்ட சொன்னபோது,  உடனே யானை கோபமாகி அணியில் கூப்பிட்டு விசாரிச்சாரு.

                                    அணில்  சொன்னது எனக்கு தேவையானதை நான் கொஞ்ச,கொஞ்சமா சேகரிச்சுக்கிட்டேன்.என்று கூறியது.

                                     இதை கேட்ட  உடன்   எல்லா காட்டு மிருகங்களும் கோபமானது.அப்போது  யானை கூறியது,அணில் தனக்கு தேவையானதை சேகரித்து கொண்டது. நாம் கோப பட வேண்டாம்.  இந்த அணியில் விட்ருவோம்.

                                       அணில் அதற்குத் தேவையானது செஞ்சிருக்கு. ஆனால் நல்ல முறையில் செய்து சேகரித்து இருக்குன்னு சொல்லிட்டு விட்டார்கள்.

                                                      அணில் மாதிரி தான்  நீங்கள் இருக்கணும்.உங்களுக்கு என்ன வேணுமோ அதனை நீங்கள் கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து கொண்டே வாருங்கள்.என்று கூறினார்.

                                                          உலகத்திலேயே லீசா டிலியன்நாட்டில்  ஒருவரது வருமானம்  2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருக்கு. 40 ஆயிரம் மக்கள் தொகை இருக்கு. அதே மாதிரி தான் கத்தார் போன்ற நாடுகளிலும் உள்ளது.

                                                          ஆனா இந்தியாவில் மிகக் குறைந்த அளவில்தான் தனி நபர் வருமானம் உள்ளது.

                                ஏயும் சின்னதா இருந்துச்சு லாபம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு மிக அழகாக பல்வேறு தகவல்களை விளக்கி  கூறினார்.

கமாடிட்டி, காப்பர் மற்றும் எல்நினோ தாக்கம் – ஞானசேகர் தியாகராஜன்


ஞானசேகர் தியாகராஜன் கமாடிட்டி பற்றி பேசினார்.  குரூட் ஆயில் விலை ஏற்றம் மிக முக்கியம்.அடுத்த ஒரு மிகப்பெரிய பாதிப்பு விஷயம்  விவசாயம் பாதிக்கப்படலாம்.

                                                   எல்நினோ மிகப் பெரிய பிரச்சினையா நாட்டுக்குள்ள வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதுமாதிரி வர்றப்ப அக்ரிகல்ச்சர் ப்ராடக்ட் எல்லாம் அதிகமான  விலை ஏறும். அதற்கு நம்ம முன்னெச்சரிக்கையாக இருந்தால்தான் மிக முக்கியமானது என்று சொன்னார். 

                                                                   கமாடிட்டி தொடர்பாக பேசும்பொழுது தொடர்ந்து காப்பரின் விலையும் கூடிக்கொண்டே வருகிறது. ஏய்  செய்யக்கூடிய அனைத்து பொருள்களும் தயாரிப்பதற்கு காப்பர் உதவியாக இருக்கின்றது. எனவே இது தொடர்பான விஷயங்களுக்கு காப்பர் பயன்படுத்தப்படுவதால் காப்பரின் விலை அதிகமாகி கொண்டே வருகிறது என்கிற தரவுகளையும் எடுத்துரைத்தார்.                    


இந்திய பொருளாதாரம் மற்றும் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகள் – சிவராமகிருஷ்ணன்

 சிவராமகிருஷ்ணன் சிஇஓ சின்சியர் சிண்டிகேஷன் இந்தியா எகனாமி எப்ப கண்டுபிடிகப்பட்டது என்று விரிவாக விளக்கினார். 

                                          நமது மார்க்கெட் 2000, 2008, 2012, 2018, 2020ல மிகப்பெரிய வீழ்ச்சி அடைந்தது. ஆனா அதுக்கப்புறம் மிக நல்ல முறையில் வந்துருச்சு. இப்ப இந்தியாவில் ஸ்பெண்டிங் அதிகமாயிடுச்சு.

                                             அதாவது ட்ரான்ஸ்போர்மேஷன் அதிகமா இருக்கு. அதனால உங்களோட நெட்வொர்க்கில் எத்தனை சதவீதத்தை நீங்க வீட்டில முதலீடு  பண்றீங்கன்னு பாருங்க. ஒரு கோடி இருந்தா அது இரண்டு கோடி ஆகிறது என்றால்  ஒரு வருஷத்துல 15 பர்சன்டேஜ் உங்களுக்கு வருமானம் கிடைச்சிருக்கு. மேஜரான பிராப்ளம் என்னவென்றால்  ட்ரான்ஸ்போர்மேஷன்தான் .

                                                 கடந்த   10 வருஷத்துல நிப்டி பீப்டி 11 பர்சன்டேஜ் கொடுத்து இருக்கு. என் எஸ் ஈ 500 வருமானம் .13 சதம்  கொடுத்திருக்கநிப்டி மிட் கேப்  15% கொடுத்திருக்கு, நிப்டி ஸ்மால் கேப் 23% கொடுத்திருக்கு, 

                                           அதிக வருமானம்  வேண்டும் எனில்  நீண்டகால நீங்கள்  சந்தையில் காத்திருந்து இருக்கணும். குரங்கு செடியை வைத்து விட்டு தோண்டி தோண்டி பார்த்த மாதிரி இருக்கக்கூடாது. ரொம்ப நாளா நம்ம காத்திருந்தால் தான் நம்மளால ஜெயிக்க முடியும். 

                                 கடந்த 10  வருட  தரவுகளை  பார்க்கும்போது, பல செக்டர்களில்  ரெட் இருக்கும் வருடங்களில் அடுத்த வருடம்  பாசிட்டிவாக  மாறுது . ஏழு வருடங்களுக்கு ஒரு முறை சரி செய்யப்படுகிறது.

                                                      சீனா பல ஆண்டுகளுக்கு முன்பு தனது தனி நபர் வருமானத்தை அதிகப்படுத்தியதுடன் , உள் நாட்டு வசதிகளையும் சரிப்படுத்தி உள்ளது. இந்தியாவில்  இனிமேல் தான் செய்யணும்.

                                                                                            பி/இ  ரொம்ப எளிதாக கண்டுபிடிக்கலாம். நீங்க ஒரு கோடிக்கு வீடு கட்டி அதை வாடகைக்கு 25 ரூபாய்க்கு விட்டீங்கன்னா, தோராயமாக 2 லட்சம் 50 ஆயிரம் வாடகை வரும். அதாவது 2.5 பெருக்கல் 40 என வைத்தல் கிடைக்கும் தொகை தான் அதனை எளிதாக சொல்லும்.

                                       வருங்காலத்துல ஏரோஸ்பேஸ் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம். டிபன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம். MEDTECH  இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம். கண்ணாடி தயாரிக்கும் நிறுவனங்கள் இன்வெஸ்ட்மெண்ட் பண்ணலாம். 

                                                                      ஐ கேர் ஏன் முதலீடு  பண்ணலாம் என்றால்  யாரெல்லாம் சட்டை போட்டு இருக்காங்களோ,  அவங்க எல்லாம் கண்ணாடியும் போடுவாங்க அப்படிங்கிற நிலைமைக்கேற்ப தள்ளப்பட்டிருக்கின்றோம்.  ஃபைனான்ஷியல் வெல்த் துறையிலும் இன்வெஸ்ட் செய்யலாம். பண்ணலாம் 

                                          எனர்ஜி டிரான்சிஷன்,டேட்டா ரிசர்வேஷன், டெலிகம்யூனிகேஷன் , நம்ம டேட்டா சென்டர், பவர்சென்டர் ,இதில்  எல்லாம் இந்தச் பண்ணலாம்.

                                                      பயோடெக், செமிகண்டக்டர், எலெக்ட்ரிக்கல்ஸ், ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.

                                              இந்தியாவுக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கு. அதனால நீங்க தொடர்ந்து இன்வெஸ்ட் பண்ணுங்க. மிகப்பெரிய வெற்றி அடையலாம். இவ்வாறு மிகுந்த நம்பிக்கையூயூட்டும் விதத்தில் பேசினார்.



சந்தை சரிவில் முதலீடு செய்யும் தைரியம் வேண்டும் – ஷியாம் சேகர்


ஷியாம் சேகர் பேசுகையில் , எப்பிஐ அதிகமா வித்துட்டு  போறாங்க. போர் நடந்த ஈரான் தாக்குதல் அதிகமாகும்போது வந்து நிதி தேவைகளுக்காக எடுத்துட்டு போறாங்க.

                                    எத்தனை நாளைக்கு தான் அவங்க சண்டை போட்டுட்டே இருப்பாங்க. 4 லட்சம் கோடி 18 மாஸ்டர் வெளியே போய் இருக்கு. 2 லட்சம் கோடி இந்த ஆண்டில் மட்டும் போயிருக்கு. கோல்டு, ஆயில் இறக்குமதி அதிகமா இருக்கு.

                                      அதனாலதான் அந்நிய செலவாணி கூடிக்கிட்டே போகுது. கோல்டு அதிகமாக வாங்குறாங்க. ரூபாயின் மதிப்பு அதனால குறையுது.

                                                                        2012 முதல்  2020.வரை மார்க்கெட்டில் நின்று வாங்கினவங்க  மிக அருமையா வந்திருப்பாங்க. குறைபாடு உடைய மார்க்கெட்டில் தான் இன்வெஸ்ட் அதிகமா செய்யணும். லார்ஜ் கேப்  கம்பெனி வாங்கினா அதிகமா பணம் பண்ண வாய்ப்பிற்கு.

                                                    பொருளாதார proxy ஏற்பட்டிருக்கு. எப் ஐ.ஐ. லார்ஜ் கேப் தன விற்கிறாங்க. ஆனால் டி.ஐ.ஐ. மிட் மற்றும் ஸ்மால் கேப் வாங்குறாங்க.

                                                   செமிகண்டக்டர் நன்றாக நல்லா செயல்பட்டது. எல்என்டி எந்த விலையில் வாங்கலாம். கடன் வளர்ச்சி ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ அதிகமா இருக்கு

                                        இன்றைக்கு ஸ்மால் கேப் பண்டு அனைத்துமே மிட் கேப் அளவுக்கு வளர்ந்து விட்டது.

                                                    எஸ்.எம்.இ  காம்பானிகளே    சுமார் 500 கோடியிலிருந்து இரண்டாயிரம் கோடிக்கு நிலைக்கு முதலீடு உள்ளது.

                                        . 2000 கோடிக்கும் மேலே உள்ள கம்பெனியை மட்டும்தான் மியூச்சுவல் ஃபண்ட் , பிஎம்எஸ்எம் வாங்க முடியும். 

                                                மிட்கேப் கேட்டகிரி பெரிதாகி கொண்டே செல்கிறது. லார்ஜ் கேப் அதைவிட பெரிதாகிறது. நாம் முன்பு முதலீடு செய்தது போலவே இப்பொழுதும் செய்து கொண்டு இருக்கக் கூடாது. அதே தவறை மீண்டும் மீண்டும் செய்யக்கூடாது .

                                                  லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் பார்த்து ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். தானே இன்வெஸ்ட் செய்வது சரிதான். ஆனால் காலத்திற்கு ஏற்ப தரவுகளை நன்றாக ஆராய்ந்து முதலீடு செய்யவேண்டும்.

                                                    ஆராய்ந்து செய்யவில்லையென்றால் இரண்டு வருடங்களில் காணாமல் போய் விடுவீர்கள். அப்புறம் ஷேர் மார்க்கெட்டை பற்றி தவறாக சொல்வீர்கள்.

                                                          எப்படி முதலீடு  செய்தாலும் லாபம் பார்க்கலாம் என்பது இல்லை. பிளைன்ட் இன்டெக்ஸின் அதாவது கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்வது வேலைக்கு ஆகாது.

                                                     இன்வெஸ்டார் முதலீடு செய்பவர் தனக்கு எது சரி என்று முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். முன்பு உள்ள தரவுகளை வைத்து முதலீடு வளர்ச்சிக்கு உதவாது.

                                                            சுதந்திரமான எண்ணங்கள் வளர்ச்சிக்கு உதவும். 2012ஆம் ஆண்டில் உள்ள நிலைதான் தற்போது தொடருகிறது என்பது எனது கருத்து. வட்டிவிகிதம் இந்தியாவில் கூடுதலாக இருந்தது. கச்சா எண்ணெய் விலையும் கூடுதலாக இருந்தது. 

                                                1994ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தரவுகளின் அடிப்படையில் ஈக்விட்டி முதலீட்டில் மொத்த வருமானம் ஜீரோ. அதற்கடுத்து வந்த ஐந்து ஆண்டுகள் 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை 30 சதவிகிதம் வருமானம் கிடைத்தது. 

                                              வருமானம் வந்தால்தான் முதலீடு செய்வேன் என்று கூறுவது தவறானது. அது சராசரியான இன்வெஸ்டர், சராசரியான முதலீட்டாளர் தான் அப்படிச் சொல்வார். மாற்றத்திற்கு யாரெல்லாம் வேண்டுமோ அவர்கள் சந்தை குறையும் பொழுது வாங்க வேண்டும்.

                                                   அப்பொழுது தான் பிற்காலத்தில் வருமானத்தை பார்க்கமுடியும். 2012ஆம் ஆண்டு இரவு பத்து முப்பது மணிக்கு  ஆர்பிஐ  கவர்னர் 3 சதவீதம் வட்டி கூடுகிறது என்று அறிவித்தார். அது திடீரென்று ஒரு பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

                                                       ஆனால் இப்பொழுது அப்படியில்லை. பிரதமர் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே வட்டி கூடலாம், கூடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. விலைவாசி கூடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

                                       கச்சா எண்ணெய் கிடைக்காமல் மிகக் குறைந்த அளவே கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மாற்றங்கள் நம்மை செம்மைப்படுத்த வேண்டும். மாற்றங்களின் போது நாம் வாங்க வேண்டும்.

                                                                                சந்தையில்  இப்போது தான் வாங்கி வைக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் வேளாண்மைத் துறை சார்ந்த பொருள்கள் கொடுத்த முடிவுகளின் வருமானம் மிக அதிகம். அவை ஐடி கம்பெனிகளின் உடைய வருமானத்தை விட அதிகமாக கொடுத்துள்ளன.

                                 உள்நாட்டு பொருட்களை வாங்குவோம். உங்களுடைய போர்ட்போலியோவை நன்றாக சரிசெய்து கொள்ளுங்கள்.

                                                        என்னைப்பொருத்தவரை 2020ஆம் ஆண்டு டொமஸ்டிக் போசிஷனிங் ஆக எனக்கு இருந்தது. எறும்புகள் எவ்வாறு சிறிது, சிறிதாக சேர்த்து  தங்களது முதலீட்டை அதிகரித்து கொள்கிறதோ, காலநிலைக்கு ஏற்ப நாமும் பொறுமையாக முதலீடு செய்து நம்முடைய வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

                                                       ஏஐ  கம்பெனிகள் அதனுடைய தாக்கம் என்ன என்று நீங்கள் கூகுளிடம் கேட்டுப் பாருங்கள். நல்ல நிறுவனம் அடிப்படை நன்றாக இருந்தால் அதை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம். அது உங்களது வருமானத்தைப் பாதிக்கலாம். பத்து வருடங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை கொடுத்துள்ள ஸ்மால் கேப் 280, லார்ஜ் கேப் ஐம்பத்தி ஏழு, மைக்ரோ கேப் 192, மிட் கேப்  90 ஆகும்.

                                                   நீண்ட கால முதலீடு என்பது நீண்ட கால முதலீடு தான். சினிமா பார்த்துவிட்டு முதலீடு செய்து உடனடியாக வருமானம் பெற முடியாது.

                                                       வரும் இரண்டு ஆண்டுகளுக்கு என்னுடைய கணிப்பின்படி 100 ரூபாய் இருந்தால் 30 ரூபாய் ஆவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அது போன்ற குறைந்தாலும் கவலைப்படக் கூடாது. எனவே தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். சந்தையில் பயணியுங்கள் .

                                    மார்க்கெட் பதட்டத்தில் இருக்கும்பொழுது நாம் முடிந்தளவு வாங்கி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நன்றாக வரும் பொழுது நமக்கு வருமானம் கிடைக்கும். இவ்வாறு சியாம் சேகர் பேசினார். 


சிறப்பாக நடைபெற்ற மேஜிக் மணி நிகழ்ச்சி

மொத்தத்தில் மேஜிக் மாணி நிறுவனத்தின் வாசு கார்த்திக் அவர்கள் மிக அருமையாக இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்து இருந்தார். காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை தொடர்ச்சியாக நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்தன .

மதிய சாப்பாடும் நல்ல முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டீயும் நல்ல முறையில் கொடுத்திருந்தார்கள். மாலை வேளையில் நல்ல முறையில் டீ ,காபி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வு நடந்த அறையும் மிக அருமையாக இருந்தது. ஸ்கிரீன் மிகப் பெரியதாக இருந்தது. அதனால் நாம் பார்க்க வேண்டிய தகவல்களை நல்ல முறையில் பார்க்க முடிந்தது.

ஒருங்கிணைப்பாளர் விஜய் மிக அருமையாக அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்வை நல்லா நடத்தினார். மாதங்கி என்பவர் மிக அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நிகழ்வின் மூலமாக சில தெரியாத விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

எப்பொழுதுமே நாம் பயணம் செய்து ஒரு நிகழ்விற்கு செல்லும் பொழுது ஏதேனும் புதிய தகவல்கள் கிடைக்கப் பெறும். அது போன்று இந்த நிகழ்விலும் எனக்கு மிக அதிகமான புதிய தகவல்கள் கிடைக்கப் பெற்றது.

இன்வெஸ்ட்மெண்ட் செய்வதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்கிற தகவல்களை என்னால் இதில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிகழ்வின் மூலமாக தெரியாத பல புதிய தகவல்கள் தெரிய வைத்ததற்காக வாசு கார்த்திக் அவர்களுக்கும், மேஜிக் மணி நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்வின் மூலமாக புதிய நட்புகளாக மதுரை ஆசிரியர் கிஷோர், கரூர் கனகராஜ், பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ராமையா ஆகியோர் சந்தித்து பேசினேன். மகிழ்வாக இருந்தது.

தோழமையுடன்,

லேணா ,

காரைக்குடி.



No comments:

Post a Comment