IPPB - INDIA POST PAYMENTS BANK சிறப்பம்சங்கள்
1) ஜீரோ பேலன்ஸ்ல் கணக்கு துவக்கலாம்
2) ஆண்டிற்கு 4% வட்டி
3) 5 நிமிடங்களில் கணக்கு ஓபன் செய்து விடலாம்
4) காகிதமற்ற உடனடி கணக்கு
5) பணப் பரிமாற்றம் (NEFT /RTGS /IMPS ) செய்து கொள்ளலாம்
6) இந்தியாவில் எங்கிருந்தும் கைரேகை மட்டும் வைத்து அக்கவுண்ட்டை ஆப்ரேட் செய்யலாம்
7) ஏடிஎம் கார்டு /டெபிட் கார்டு தேவையில்லை பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
8) மொபைல் அப்ளிகேஷன் வசதி உள்ளது
9) உங்கள் வங்கி உங்கள் வாசலில்
10) மின்/ தொலைபேசி, டிடிஎச்/மொபைல் ரீசார்ஜ், பில் பேமென்ட் வசதி உள்ளது
11) அனைத்து தொழில்களுக்கும் நடப்பு கணக்கு வைத்துக் கொள்ளலாம்
12) அஞ்சலக திட்டங்களுக்கு SSA,RD,PPF,POSA ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்
13) ஸ்டூடண்ட் ஸ்காலர்ஷிப் பணத்தை IPPB அக்கவுண்ட் மூலம் வரவு வைத்து கொள்ளலாம்.
14) மற்ற வங்கிகளிலிருந்து பணம் அனுப்பவும் பெறவும் இயலும்.
15) அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிப்பில் வைத்துக் கொள்ளலாம்
16) அனைத்து விதமான சப்சிடீஸ், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கேஸ் சப்சிடீஸ், உட்பட அனைத்தும் ஐபிபிபி அக்கவுண்ட் வழியாக பெறலாம்.
அஞ்சல் வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் வங்கி செல்லாமல் வங்கி பாஸ்புக் அல்லது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்
வங்கிக்கு செல்லாமல் வீட்டுக்கே வந்த பணம் தரும் தபால்காரர்கள்
இளம் மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கணக்கு அட்டை பெற்று கொடுத்து அசத்திய பள்ளி
ஆதார் எண் மட்டுமே வைத்து வங்கிக்கு செல்லாமல் கணக்குகளில் இருந்து பணம் பெறும் புதிய முறை
உங்கள் வங்கி உங்கள் வாசலில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்து கூறியதாவது :
இணையதளம் வருகைக்கு பின்னா் அஞ்சல் துறையின் பயன்பாடு குறைந்து போனது. இதனால் இந்திய அஞ்சல் துறை காப்பீடு, வங்கிச் சேவை, தொழிலாளா் வைப்புநிதி திட்டம், பதிவு அஞ்சல், அஞ்சல் மூலம் பொருள்களை அனுப்புதல், தபால் தலை சேகரிப்பு, எனது தபால் தலை என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு தங்களின் வீடுதேடி வரும் வங்கி சேவை வசதி கிடைக்கும். இதில் குறைந்த பட்ச வைப்புத் தொகை தேவையில்லை. கணக்கு தொடங்குவதற்கு ஆதாா் அட்டை போதுமானது என்பன போன்ற அம்சங்களால் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள்
எதுவும் தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இருந்தால் போதும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவை இல்லை. அதிகபட்சம் ரூ.1 லட்சம்
வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கேற்ப 4
சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும்
சிறு,குறு தொழில் உள்பட எந்த ஒரு தொழிலுக்கும் நடப்பு கணக்கை தொடங்கி
கொள்ளலாம்.
இந்த வங்கி சேவை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் எளிமையாக
வடிவமைக்கப்பட்டு உள்ளது. கியூ.ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு
செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக
செயல்படுத்தப்படும். மேலும் அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே
வந்து வங்கி சேவை அளிப்பார்கள். மேலும் இந்தியாவின் எந்தவொரு வங்கி
கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.
இதுதவிர மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், காப்பீடு பிரீமியம் தொகை போன்ற
பல்வேறு சேவைகளுக்கு இந்த வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்த முடியும்.
அஞ்சல்துறையின் அனைத்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு தங்களுடைய கணக்கின்
மூலம் எளியமுறையில் பணம் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
திட்டம் குறித்து மேலும் விரிவாக அறிய :
இந்தத் திட்டம் தொடர்பாக மேலும் பல்வேறு தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க் வழியாகச் செல்லவும் நன்றி
No comments:
Post a Comment