அறிவியல் சோதனைகள்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி சிரேகா
வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை
தாங்கினார். அ .மு.மு. அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் மகாதேவி
மற்றும் அரங்குலவன் ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த
விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து
விளக்கினார்கள்.நிகழ்வில் அமிலம் மற்றும் காரத்தின் சுவையினை அறிதல்,லிட்மஸ் தாளினை கொண்டு அமிலம் மற்றும் காரம் தன்மையை அறிதல்,நீரின் பயன்பாடு,பலபடி வேதியியல் தொடர்பான
சோதனைகளை நேரடியாக மாணவர்களே
செய்து கற்று கொண்டனர். நிறைவாக மாணவர் அய்யப்பன் நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல் வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை செய்து கற்று கொண்டனர்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டாக அறிவியல் கற்றல் வாயிலாக மாணவர்கள் நேரடியாக அறிவியல் சோதனைகளை செய்து கற்று கொண்டனர்.
No comments:
Post a Comment