Thursday, 27 February 2020

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்



 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
                              விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல்  சோதனைகளை நேரடியாக மாணவர்களே  செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.மாணவர்கள் அய்யப்பன்,கிருத்திகா ,நதியா,ஜோயல் ரொனால்ட் ,கீர்த்தியா ஆகியோர் அறிவியல் தினம் தொடர்பாக பேசினார்கள்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்,கருப்பையா செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment