கரோனா வைரஸ் பற்றி பயம் தேவையில்லை
தமிழர் மரபுபடி இருகை கூப்பி வணக்கம் சொல்லுங்கள்
அரைகுறையாக வேகவைத்த அசைவ உணவு வகைகளை தவிருங்கள்
பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை
மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை சில நாட்களுக்கு தவிருங்கள்
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்து வடிவு கரோனா வைரஸ் தொடர்பாக பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசுகையில் , தமிழ்நாட்டில் இன்னும் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஒவ்வொரு முறையும் காய்ச்சல் ஒவ்வொரு மாதிரியாக வருகிறது .2009ம் ஆண்டு ஒரு மாதிரி வந்தது. 2011, 2014 ஆண்டுகளில் பல வகைகளில் பல்வேறு விதங்களில் வருகிறது .இதற்கு முக்கிய அறிகுறிகள் சளி , இருமல், தும்மல் ,காய்ச்சல் இவைகள்தான் .இவை அதிகமானால் மூச்சுத்திணறல் வந்து சிரமப்படுவார்கள்.
தமிழத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை :
இந்த கரோனா வைரஸ் நோய் மிக வேகமாக பரவி விடும். அதனால் தான் பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறார்கள். கரோனா வைரஸ் பாதித்த பிறகு அறிகுறிகள் தகவல் 14 நாட்களுக்குள் தெரியவரும். எனவே சீனாவில் இருந்து வரும் தமிழ்நாட்டுக்கு வரும் மக்களை 28 நாட்கள்அரசு மருத்துவர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் தினமும் தொடர்ந்து வீட்டில் சென்று பரிசோதித்து வருகிறோம். இதுவரை தேவகோட்டைக்கு சீனாவில் இருந்து எட்டு பேர் வந்து உள்ளனர். அவர்களை நான் தினமும் சென்று தொடர்ந்து பரிசோதித்து வருகின்றேன். யாருக்கும் இந்த காய்ச்சல் இல்லை.
வரும்முன் காத்து கொள்வது எப்படி ?
நாம் இந்த நேரங்களில் மக்கள் நெருக்கடியான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் .சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் அவசியம் கைக்குட்டை, டிஷ்யூ பேப்பர் ஏதாவது பயன்படுத்த வேண்டும். சளி, இருமல் உள்ளவர்கள் அருகில் மிக நெருக்கமாக நெருங்குதல் கூடாது. நாம் சந்திக்கும் நபர்களை பார்த்தால் தமிழ் மரபுப்படி வணக்கம் சொல்வதே நல்லது .கைகுலுக்குதல் வேண்டாம் .தினமும் 15 முறை கை கழுவினால் ஓரளவு இதன் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பிக்கலாம்.இருமல்,தும்மல் வந்தால் கையைக் கொண்டு மூடுவதை தவிர்க்க வேண்டும். தும்மல் வரும்பொழுது இருமல் வரும் பொழுது முழங்கையை வைத்து மூடலாம். அசைவ வகை உணவுகளை அரைகுறை வேக்வைத்து சாப்பிடக்கூடாது .அரைவேக்காடாக சாப்பிடும் பொழுது இந்த வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. இந்த காய்ச்சல் ஒருவரிடம் இடம் இருந்துதான் மற்றவருக்கு பரவும். எனவே நாம் மாஸ்க் அல்லது வேறு உடைகள் அணிந்து கொள்வது நல்லது. இதுவரை தமிழகத்தில் யாருக்கும் காய்ச்சல் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை நன்றாக கழுவுங்கள் என்று கூறினார் . ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி மாணவர்களுக்கு பல்வேறு தகவல்களை எடுத்துக்கூறினார் . மாணவர்களும் ஆசிரியர்களும் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
படவிளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் தொடர்பான நிகழ்ச்சியில் தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

No comments:
Post a Comment