ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் பள்ளி மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அட்டையுடன் அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி அசத்திய பள்ளி
பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா
பேப்பர் ,பேனா இல்லாமல் வங்கி கணக்கு துவக்கலாம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி , அஞ்சல் வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.அஞ்சலக அலுவலர்கள் கௌதம்,இருளாண்டி,கதிரேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.மாணவர்கள் ஜோயல் ரொனால்ட் ,ஐயப்பன்,நதியா,ஜனஸ்ரீ , ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
மேலும் விரிவாக :
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்து கூறியதாவது :
இணையதளம் வருகைக்கு பின்னா் அஞ்சல் துறையின் பயன்பாடு குறைந்து போனது. இதனால் இந்திய அஞ்சல் துறை காப்பீடு, வங்கிச் சேவை, தொழிலாளா் வைப்புநிதி திட்டம், பதிவு அஞ்சல், அஞ்சல் மூலம் பொருள்களை அனுப்புதல், தபால் தலை சேகரிப்பு, எனது தபால் தலை என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு தங்களின் வீடுதேடி வரும் வங்கி சேவை வசதி கிடைக்கும். இதில் குறைந்த பட்ச வைப்புத் தொகை தேவையில்லை. கணக்கு தொடங்குவதற்கு ஆதாா் அட்டை போதுமானது என்பன போன்ற அம்சங்களால் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள்
எதுவும் தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இருந்தால் போதும்.
குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவை இல்லை. அதிகபட்சம் ரூ.1 லட்சம்
வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கேற்ப 4
சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும்
சிறு,குறு தொழில் உள்பட எந்த ஒரு தொழிலுக்கும் நடப்பு கணக்கை தொடங்கி
கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்குதல் விழா
பேப்பர் ,பேனா இல்லாமல் வங்கி கணக்கு துவக்கலாம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் மாணவர்களுக்கு ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி , அஞ்சல் வங்கி தொடர்பாகவும்,மாணவர்களின் சேமிப்பு தொடர்பாகவும் விளக்கினார்.அஞ்சலக அலுவலர்கள் கௌதம்,இருளாண்டி,கதிரேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.மாணவர்கள் ஜோயல் ரொனால்ட் ,ஐயப்பன்,நதியா,ஜனஸ்ரீ , ஆகியோர் பேசினார்கள்.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.
பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார் . பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
மேலும் விரிவாக :
அஞ்சல் வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் வங்கி செல்லாமல் வங்கி பாஸ்புக் அல்லது ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும்
வங்கிக்கு செல்லாமல் வீட்டுக்கே வந்த பணம் தரும் தபால்காரர்கள்
இளம் மாணவர்களுக்கு அஞ்சல் வங்கி கணக்கு துவக்கி கணக்கு அட்டை பெற்று கொடுத்து அசத்திய பள்ளி
ஆதார் எண் மட்டுமே வைத்து வங்கிக்கு செல்லாமல் கணக்குகளில் இருந்து பணம் பெறும் புதிய முறை
உங்கள் வங்கி உங்கள் வாசலில்
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்கணிப்பாளர் ஜீரோ ரூபாய் டெபாசிட்டில் மாணவர்களுக்கு கியூ.ஆர். கோடு கொண்ட அஞ்சல் வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்து கூறியதாவது :
இணையதளம் வருகைக்கு பின்னா் அஞ்சல் துறையின் பயன்பாடு குறைந்து போனது. இதனால் இந்திய அஞ்சல் துறை காப்பீடு, வங்கிச் சேவை, தொழிலாளா் வைப்புநிதி திட்டம், பதிவு அஞ்சல், அஞ்சல் மூலம் பொருள்களை அனுப்புதல், தபால் தலை சேகரிப்பு, எனது தபால் தலை என்பன உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளா்களுக்கு தங்களின் வீடுதேடி வரும் வங்கி சேவை வசதி கிடைக்கும். இதில் குறைந்த பட்ச வைப்புத் தொகை தேவையில்லை. கணக்கு தொடங்குவதற்கு ஆதாா் அட்டை போதுமானது என்பன போன்ற அம்சங்களால் மக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
No comments:
Post a Comment