தி இந்து தமிழ் நாளிதழ் விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள்
தி இந்து தமிழ் நாளிதழ் சார்பாக மதுரையில் மகளிர் தின விழா நடைபெற்றது.அதனில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவிகள் விடுமுறை நாளன்று ஆசிரியை உதவியுடன் ( பெற்றோர் கூலி வேலை பார்ப்பதால் மாணவிகளை அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில்) தேவகோட்டையில் இருந்து காலையில் 5.45 மணிக்கெல்லாம் கிளம்பி மதுரை சென்றனர்.விழாவில் இறை வணக்க பாடலை மாணவிகள் பாடினார்கள்.மாணவிகளின் பாடலை பாராட்டி தி இந்து தமிழ் நாளிதழின் விளம்பர பிரிவு முக்கியஸ்தர் திரு.வேங்கட சுப்ரமணியன் அவர்கள் ரூபாய் 600 பரிசு வழங்கி பாராட்டினார்கள்.அருமையான வாய்ப்பை வழங்கிய தி இந்து தமிழ் நாளிதழுக்கு நன்றி.
இந்த நிகழ்வு குறித்து காலை வழிபாட்டு கூட்டத்தில் பள்ளியில் மாணவி நித்ய கல்யாணி பேசுகையில், மிக பெரிய கூட்டத்தினர் இடையே நாங்கள் நிற்கும்போது லேசான பயமாக இருந்தது.கண்ணை மூடி கொண்டு பாட ஆரம்பித்தேன்.நன்றாக பாடி முடித்ததும் என்னிடம் அனைவரும் நன்றாக பாடினீர்கள் என சொல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.நான் மதுரை வருவதும் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

No comments:
Post a Comment