Wednesday, 4 January 2017

உடலின் உள்பகுதிகளில் தேய்த்து குளிக்கவும்

பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை



காலை உணவை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவர் அறிவுரை





தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் உடலின் உள்பகுதிகளில் தேய்த்து குளிக்குமாறு அரசு மருத்துவர் பேசினார்.



                             முகாமிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசங்கரி,பல் மருத்துவர் சண்முகபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் மாணவர்களிடம் பேசுகையில் , உங்கள் உடலின் உள்பகுதிகளில் தேய்த்து குளிக்கவும்.வெளிதோற்றத்தை மட்டும் பார்க்காமல் உள்ளே தொடை பகுதிகளில் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.அதிகமான மாணவர்கள்  காது சுத்தமாக வைத்து கொள்வதில்லை.வாரம் ஒரு முறை ,மாதம் இருமுறை காதை சுத்தம் செய்ய வேண்டும்.கைகளை நன்றாக கழுவ வேண்டும்.கை சுத்தமாக வைத்து கொண்டாலே பல நோய்கள் சரியாகி விடும்.நம்மை நோய்கள் தாக்காது.சுத்தமாக நாம் இருப்பதோடு நம்மை சுற்றி உள்ளவர்களையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் நன்மை கிடைக்கும்.இவ்வாறு பேசினார்.

                        மருத்துவ முகாமில் கண் நோய் கண்டறிதல்,பல் மருத்துவம்,பொது மருத்துவம் என அனைத்தும் இணைந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.உடலில் காணப்படும் பல்வேறு நோய்கள் குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டது.மாணவர்கள் ஜெனிபர் ,ஜெகதீஷ்,தனலெட்சுமி,வெங்கட்ராமன்,ராஜேஸ்வரி,ஜீவா ஆகியோர் கேள்விகள் கேட்டனர்.சில நோய்களுக்கு மதுரை ,சிவகங்கை ஆகிய ஊர்களுக்கு பரிந்துரை செய்யபட்டது.அனைத்து விதமான மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.மாணவர்களுக்கு உடல் எடை,ரத்தஅழுத்தம் ஆகியவற்றை செவிலியர்கள் பாண்டி செல்வி, ரேவதி,சுமதி, மருந்தாளுனர்  ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிசோதனைகளை செய்தனர்.



             முகாமில் கண் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கண் நிபுணர் ஸ்டெல்லா ஆரோக்கிய மேரி கண் பரிசோதனை செய்து தமிழக அரசின் அம்மா திட்டத்தில் கண்ணாடிகளை வழங்கினார்.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.



பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கண் குறைபாடு உடைய மாணவர்களுக்கு கண்ணாடிகளை தேவகோட்டை மருத்துவர் கமலேஸ்வரன் வழங்கினார்.உடன் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசங்கரி,பல் மருத்துவர் சண் முகபிரியா ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், கண் நிபுணர் ஸ்டெல்லா மேரி ஆகியோர் உள்ளனர்.











மாணவர்களின் கேள்விகள் மற்றும்  மருத்துவரின் பதில்கள் :

ஜெனிபர் : மாலை கண் நோய் எத்துனை வயதில் வருகிறது ?



டாக்டர் கமலேஸ்வரன் : மாலை கண் நோய் வைட்டமின் எ குறைவினால் வருகிறது.முன்பெல்லாம் உணவு சத்து குறைவினால் இந்த நோய் வரும்.தற்காலத்தில் இது அதிகமாக இல்லை.காரணம் நடைமுறை வாழ்க்கை.இதனை தடுப்பதற்காக பிப்ரவரி மாதம் வைட்டமின் எ திரவம்  வழங்கபடுகிறது.சில பேருக்கு பரம்பரை காரணமாகவும் இந்த நோய் வரலாம் .பச்சை காய் கறிகள் ,கீரை வகைகள்,காரட்,பொன்னாங்கண்ணி,அனைத்து வகை பழங்கள்  ஆகியவை அதிகமாக சாப்பிட பிராய்ளர் கோழி சாப்பிடகூடாது.சதை வளர்ந்து அதனால் கண் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது.



வெங்கட்ராமன் : மாரடைப்பு வர காரணம் என்ன?

டாக்டர் : நடைமுறை வாழ்க்கை சரியில்லாமல் போனால் மாரடைப்பு வருவதற்கு வழிகோலும்.இலவசங்கள் அதிகமாக வருவதால் நாம் நிறைய வேலைகளை மறந்து விட்டோம். அதனால் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு வருகிறது.ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருகிறது.அதன் தொடர்ச்சியாக பக்கவாதம்,சிறுநீரக உறுப்புகள் என அனைத்தும் பாதிக்கபடுகிறது.சரியான உடல் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் காலை நடக்க வேண்டும்.சரியான உணவு முறை இருந்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்.



ராஜேஸ்வரி : வாயில் புண் வருதல் ஏன்?



டாக்டர் : பக்டீரியா பாதிப்பினால் வருகிறது.தோல் நோய் பொதுவாக பரவகூடியது.இரண்டு தடவை குளித்தல்,நன்றாக துடைத்து விடுதல்,சத்தான உணவு கொடுத்தல்,நல்ல சோப்பு போட்டு குளித்தல் மூலமாக இதனை தவிர்க்கலாம்.ஒரே சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.சோப்புகளை மாற்ற கூடாது.ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றவர் பயன்படுத்த கூடாது.





ஈஸ்வரன் : ஆஸ்துமாவை எப்படி தடுப்பது ?



டாக்டர் : இது பெரிய நோய் .தற்காலிகமாக குணபடுத்தலாம்.அதிகமாக சளி பிடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.குளிர் காலங்களில் ஆஸ்துமா உள்ளவர்கள் முன்கூட்டியே தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.சுடு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.காற்று மாசுபடுவதேஇதற்கு முக்கிய காரணம்.கிருமி பரவுவதும் காரணமாகும்.



ஜீவா : பற்பசையில் எது நல்லது ?



பல் டாக்டர் : பற்பசைகளில் அதிகம் எதனில் வேதி பொருள்கள் கலக்க வில்லையோ அதுவே நல்ல பற்பசை ஆகும்.பல் துலக்குதல் தான் முக்கியம்.மேல் இருந்து கீழ் ,கீழ் இருந்து மேல் என பல் துலக்கினால் பல்வேறு பல் நோய்கள் சரியாகும் .



ரஞ்சித் : குடல் வால்வு நோய் என்றால் என்ன ?



டாக்டர் : இது பொதுவாகவே பிறப்பில் இருந்து எல்லோர்க்கும்  இருக்கும். அதிகமான எண்ணெய் பொருள்கள் சாப்பிடும்போது உடலில் சீரண சக்தி குறையும்.வீக்கம் அதிகமாகும்.காய் கறிகள் ,பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.



ஜெகதீஸ்வரன் ; சர்க்கரை நோய் என்றால் என்ன ?





டாக்டர் : சரியான உணவு பழக்க வழக்கங்களை மேற்கொள்ளாதபோது உடல் பாதிக்கபடும்.புரோடீன் அதிகம் இருந்தால் இந்த பாதிப்பு வரும்.உடல் உழைப்பு அதிகம் வேண்டும்.ஓரளவு வயதனவர்களுக்குதன் இந்த நோய் முன்பெல்லாம் வந்தது.ஆனால் இப்போது குறைந்த வயதில் சுமார் 20 வயதில் 30 வயதில் வருகிறது.தாய் ஆரோக்கியமாக உணவுகளை நல்ல முறையில் உண்ண வேண்டும். வேலை நன்றாக செய்தால் மட்டுமே இந்த நோய் சரியாகும்.உடல் உழைப்பு குறைந்ததே இதற்கு காரணம்.வயது ஆக,ஆக திசுக்கள் முதிர்ந்து இறந்து போகும்.எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை மேற்கொண்டு உடலை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள் என்றார்.



                      மேலும் மாணவர்களாகிய நீங்கள் சிப்ஸ்,லேஸ் போன்ற பொருள்களை அதிகம் தவிருங்கள்.அப்போது தான் உடலுக்கு நன்மை ஏற்படும்.


முகாமில் திருவேகம்பத்துர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசங்கரி பேசுகையில் ,
 
மாணவர்கள் உடலுக்கு நல்லது செய்ய கூடிய இரும்பு சத்து நிறைந்தகீரை, பேரீச்சம்பழம்,அத்திபழம்,கடலை மிட்டாய்,கம்பு போன்ற சத்து நிறைந்த பொருள்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும். பருப்பு வகைகள்,மீன்,வேர்க்கடலை,காய்கறிகள்,குட மிளகாய்,வெள்ளரிக்காய் ஆகியவற்றில் புரோடீன் சத்து அதிகமாக உள்ளது.சாம்பார் சாப்பிடும்போது அதில் உள்ள பருப்பை அவசியம் சாப்பிட வேண்டும்.அதை தனியாக சாப்பிடாமல் ஒதுக்க கூடாது.பருப்பு சாப்பிடுவதால் உடல்  குண்டாகாது.தூதுவளை போன்ற மூலிகை தாவரங்களை உணவில் துவையலாக சேர்த்து கொண்டால் வளரிளம் பெண்களுக்கு உடல் நன்றாக இருக்கும்.வைட்டமின்கள் எ  அதிகம் கண்ணுக்கு தேவைப்படும்.வைட்டமின் பி  வெந்தயத்தில் அதிகம் உள்ளது.அது உடல் சூட்டை நன்றாக குறைக்கும் .வைட்டமின் சி  கொய்யா,ஆரஞ்சு பழத்தில் அதிகம் இருக்கும்.இந்த சத்து குறைவதால் அடிக்கடி பல் ஈறுகளில் ரத்தம் வரும்.வைட்டமின் டி  பாலிலும்,அதிகமாக வெயிலிலும் இருக்கும்.செலவே இல்லாமல் இயற்கையில்  கிடைக்க கூடியது வெயில் இருந்து அதிகமாக எளிதாக கிடைக்கும். கால்சியம் வளரிளம் பெண்களுக்கு அதிகமாக தேவைப்படக்கூடியது ஆகும்.வைட்டமின் இ  ,கே  யும் உடலுக்கு முக்கியமானது ஆகும்.வைட்டமின் கே குறைவால் உடலில் ரத்தம் உறைதல் தடைபடும்.தைராய்டு குறைவாக இருக்கும் குழந்தைகள் மந்தமாகவே இருப்பார்கள்.அரசு மருத்துவ மனைகளில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் இதற்கான மாத்திரைகள் தேவைப்படுவோருக்கு அவரகளது உடலை சோதனை செய்து இலவசமாகவே வழங்கப்படுகிறது.இதனை அனைத்து மக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.கொழுப்பு சத்து நல்லது,கேட்டது என உள்ளது.அதனை பார்த்து சரியான கொழுப்பு நல்ல கொழுப்பு சத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.சோப்புகளில் அதிகம் வேதி தன்மை இல்லாத சோப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.மண்ணில் விளையாடினால் நன்றாக கைகளை கழுவி விட்டு பிறகு தான் வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டும்.இல்லை எனில் கைகளில் புண்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும்,குடற்புழுக்கள் வயிற்றில் சென்று சேர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

அனைத்து வகையான கண்,பல் ,பொது மருத்துவத்துக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வாய்ப்பாக இது அமைந்தது.மேலும் அரசு மருத்துவர்கள் நல்ல முறையில் மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து மாணவர்களின் சந்தேகங்களை போக்கினார்கள்.இது பாராட்டுதுலக்குரியது.

No comments:

Post a Comment