குடியரசு தின விழாவில் அனைவருக்கும் சாக்லேட்
தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கி கொண்டாடுதல்
தீபாவளி , பொங்கல் பண்டிகை போன்று குடியரசு தின விழாவையும் அனைவருக்கும்
வாழ்த்து சொல்லி கொண்டாடுங்கள்
மக்களக்கு உதவும் வகையில் உங்கள் இலக்குகளை
நிர்ணயித்து கொள்ளுங்கள்.
அரசு மருத்துவர் பேச்சு
குடியரசு தின விழா
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்
அரசு நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை
பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்
தலைமை தாங்கினார்.குடியரசு தின விழா தொடர்பாக மாணவர்கள் ஈஸ்வரன்,ரஞ்சித்,பரமேஸ்வரி,ஜெ கதீஸ்வரி,தனலெட்சுமி,சின்னம்மா ள்
ஆகியோர் பேசினார்கள்.திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது மருத்துவர்
சிவசங்கரி கொடி ஏற்றி சிறப்புரையாற்றுகையில், தீபாவளி , பொங்கல் பண்டிகை போன்று குடியரசு தின விழாவையும் அனைவருக்கும்
வாழ்த்து சொல்லி கொண்டாடுங்கள். காந்தியடிகளின் அகிம்சை வழியை அனைவரும் பின்பற்றுங்கள்.குடியரசு
தினத்தன்று மக்களக்கு உதவும் வகையில் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து கொள்ளுங்கள்.இவ்வாறு
பேசினார்.மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.இப்பள்ளியில் தொடர்ந்து பல
ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கு அவர்களே சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு
மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.விழா நிறைவாக மாணவி
காயத்ரி நன்றி கூறினார்.ஆசிரியர் ஸ்ரீதர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து
இருந்தார்.
No comments:
Post a Comment