Thursday, 12 January 2017

தேசிய இளைஞர் தினம்
விவேகானந்தரின் பொன் மொழிகளை பின்பற்றுங்கள்
நகராட்சி ஆணையாளர் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.


                     விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கி பேசுகையில்,மாணர்கள் விவேகானந்தர் கூறியவற்றை பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.நல்ல விசயங்களை  இளம் வயது முதலே வாழ்க்கையில் கற்று கொண்டு அதனை பின்பற்ற பழகி கொள்ள வேண்டும்.விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அப்போதுதான் உடல் வலிமை பெற்று மனது வலிமை பெறும் என்றார்.விழாவில் விவேகானந்தர் தொடர்பான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற முத்தையன்,திவ்ய ஸ்ரீ,சூரியபிரகாஷ்,கிஷோர் குமார்,சபரி ஆகியோர்க்கும், விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல் போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திகேயன்,ஜெனிபர்,ஜீவா ஆகியோர்க்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.நிறைவாக ஆசிரியை செல்வ மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடை பெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின் பொன்மொழிகள் சொல்லுதல்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி பரிசுகளை வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உடன் உள்ளார்.

No comments:

Post a Comment