Saturday, 31 December 2016

புதைந்து கிடைக்கும் திறமைகளை 
வெளி கொண்டு வருபவரே ஆசிரியர் 

கல்லூரி முதல்வர் பேச்சு 
விடுமுறை கால 5 நாள் இலவச பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால 5 நாள் இலவச பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா நடைபெற்றது.


Friday, 30 December 2016

                      ஓரிகாமி பயிற்சி 

 குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை நியூஸ் பேப்பர்,வெள்ளை தாள் கொண்டு செய்து மகிழ்ந்த மாணவர்கள்

 விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வவு 

 

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வில் தாங்களே குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை  செய்து மாணவர்கள் மகிழந்தனர்.

Thursday, 29 December 2016



பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது

அரசு மருத்துவர் தகவல்



விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் மூன்றாம் நாள் நிகழ்வில்

அரசு மருத்துவருடன் மாணவர்கள் கலந்துரையாடல்


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயிற்சி முகாமில் பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது என அரசு மருத்துவர் பேசினார்.

Wednesday, 28 December 2016

   முதல் முறையாக தென் தமிழகத்தில் இது போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.                     விடுமுறை நாளாக இருந்த போதிலும்   பல்வேறு பள்ளிகளில் இருந்தும்,எங்கள் பள்ளியில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் இரண்டாவது நாள் தொடர் பயிற்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வு 


 செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வாக செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.

Tuesday, 27 December 2016

மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்ள
பயிற்சிகள் அவசியம்

நகராட்சி ஆணையாளர் பேச்சு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 5 நாள் இலவச விடுமுறை கால பயிற்சி முகாமை தேவகோட்டை  நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.


Saturday, 24 December 2016

இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 7மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.

Tuesday, 20 December 2016




எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள்  அறிவியல் ஆய்வக களப்பயணம்
 
                     தேவகோட்டை -   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள்  கல்லூரி ஆய்வகங்களுக்கு  அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி  8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து நான்காம்  ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 16 December 2016

வாழ்க்கைக்கு உதவவும்  கல்வியே சிறந்த கல்வி

ஜெர்மன் நாட்டு அறிஞர் பேச்சு


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜெர்மன் நாட்டை சார்ந்த அறிஞரும்,தமிழ் மரபு அறக்கட்டளை தலைவருமான முனைவர் சுபாஷினி மாணவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.

Wednesday, 14 December 2016

நாளிதழ்களில் செய்திகளை படிப்பது சுகமான அனுபவம்

பத்திரிக்கை ஆசிரியர் பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பத்திரிக்கை ஆசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.

Monday, 12 December 2016

தினமலர் பட்டம் ( 12/12/2016) நாளிதழில் இன்று தமிழகம் முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கலர் படம் மற்றும் செய்தி வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்.



சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவ,மாணவியர்


          இந்த மாத சுட்டி விகடனில் தங்கள் படம் வந்துள்ளதை ஆர்வத்துடன் பார்க்கும்,படிக்கும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ , மாணவியர் . பள்ளியிலேயே 13மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் புத்தகங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.




Friday, 9 December 2016

தினமலர் நாளிதழின் பரிசு ரூபாய் 1000 பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி 

Thursday, 8 December 2016

தமிழகம் முழுவதும் தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின்  சாதனைகளை நாளை 09/12/2016 இதழில் காணுங்கள்.

சுட்டி விகடனின் ஜப்பான் புத்தர் கோவில்
சுட்டி கிரியேசன்ஸ் ஜப்பான் புத்தர் கோவில் வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சுட்டி விகடன் இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான ஜப்பான் புத்தர் கோவில் வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

Sunday, 4 December 2016

தினமலர் பட்டம் இதழில் தமிழ்நாடு முழுவதும் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செயல்பாடு வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள்

Friday, 2 December 2016

  தி இந்து ஆங்கில நாளிதழின் ஓவிய போட்டியில் பங்கேற்று தேர்வான  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 

Thursday, 1 December 2016

 உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள்

அறிகுறியே இல்லாத நோய் எய்ட்ஸ் நோய் 

 எய்ட்ஸ் பாதிப்பு அதிக அளவில் மனிதர்கள் இடம்பெயரும் இடங்களில் காணப்படுகிறது 

தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுப்படுத்துனர் தகவல் 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது.
தமிழ் இலக்கிய பேரவை போட்டியில்  வெற்றி பெற்ற மாணவிக்கு  பள்ளியில் பாராட்டு
தேவகோட்டை- தேவகோட்டைசேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தமிழ் இலக்கிய பேரவை நடத்திய பேச்சு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது.