புதைந்து கிடைக்கும் திறமைகளை
வெளி கொண்டு வருபவரே ஆசிரியர்
கல்லூரி முதல்வர் பேச்சு
விடுமுறை கால 5 நாள் இலவச
பயிற்சி முகாமின் நிறைவு நாள்விழா
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், தேவகோட்டை அரசு வட்டார மருத்தவ அலுவலர் கமலேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை தாலுகா வட்டாட்சியர் மங்களேஸ்வரி தலைமை தாங்கினார்.ஆனந்தா கல்லூரி முதல்வர் பேரா.ஜான் வசந்த குமார் சிறுப்புரையாற்றி பேசும்போது,மாணவர்களிடம்
புதைந்து கிடைக்கும் திறமைகளை வெளி கொண்டு வருபவரே ஆசிரியர்.கல்வி என்பது அனைவரிடமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.நாம் பயிலும் கல்வியில் அக்கறையோடு கூடிய ,கவனம்,விடா முயற்சி ,ஆசிரியரின் வழிகாட்டுதல் இருந்தால் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடையலாம்.நமது திறமைகளை இது போன்ற பயிற்சிகளின் வாயிலாக வெளிக்கொண்டு வந்து மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க வேண்டும்.கழுகு,மீன் கதையின் மூலம் ஒற்றுமை,உழைப்பு,தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயமாக நாம் நமது திறமைகளை வெளி கொண்டு வந்து வெற்றி பெறலாம் என பேசினார்.பயிற்சியில் பங்கேற்ற 60க்குமேற்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.மாணவர்கள் 5 நாள் பயிற்சியில் பங்கேற்று செய்த நியூஸ் பேப்பர் ஆல்பம்,வரைந்த ஓவியங்கள்,குதிக்கும் தவளை,குருவி ,தொப்பி,ஆகியவை பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.நிறைவு நாள் நிகழ்வில் மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.நிறைவாக அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்றுனர் முத்து செல்வன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளத்தூர் அ மு மு அறக்கட்டளை மற்றும் பெங்களூர் அகஸ்தியா அறிவியல் நிறுவனமும் இணைந்து செய்து இருந்தனர்.
மேலும் சில தகவல்கள் :
முதல் முறையாக தென் தமிழகத்தில் இது போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை நாளாக இருந்த போதிலும் பல்வேறு பள்ளிகளில் இருந்தும்,எங்கள் பள்ளியில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் ஐந்து நாள் தொடர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு குறித்து மாணவி ராஜி கூறுகையில் , பள்ளி விடுமுறை நாளாக இருந்த போதும் இது போன்று வாழ்க்கைக்கு உதவும் பயிற்சி எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.இந்த 5 நல்ல நிகழ்வில் பயிற்சியாளர்கள் நன்றாக பயிற்சி அளித்தனர்.எங்களுக்கு நேரம் போனதே தெரிவியவில்லை.நன்றாக இருந்தது.
முதல்வர் கூறிய கதை :
கழுகு,மீன் கதையின் வாயிலாக :::::::
கழுகு ஒன்றிடம் மீன் சிக்கி கொண்டது.அப்போது மீன் கழுகிடம் தன்னை விட்டு
விடுமாறு கெஞ்சியது.கழுகு ஒரு போட்டி வைப்பது என்றும்,அந்த போட்டியில் யார்
வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சொவ்லதே முடிவு என்றும் கூறியது.மீனும்
ஒத்து கொண்டது.போட்டி என்னவெனில் யார் விரைவாக குறிப்பிட்ட தூரத்தை
கடப்பது என்பதே ஆகும்.கழுகுக்கு எப்படியும் தான் ஜெயிப்போம் என்று
நம்பிக்கை.ஏனெனில் கழுகால் நன்றாக விரைவாக பறக்க முடியும்.ஆனால் மீனால்
பறக்க முடியாது.ஆனால் மீன் தன்னுடைய நண்பர்களான மீன்கள் அனைவரின்
ஒத்துழைப்புடனும் தண்ணீருக்குள் ஒரு குழு அமைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டு
,எப்போது கழுகு பறந்து வருகிறாயா என கேட்கும்போதெல்லாம் , ஆம் வருகிறேன் என
கூற சொல்லி நிறைவாக மீன் கழுகு சொன்ன இடத்தில் வந்து விட்டதாக குழு
உதவியுடன் சென்று அடைந்தது.வெற்றியும் பெற்றது.குழுவினரின் உதவியுடன்
நீருக்குள் ஒரு வியூகம் அமைத்து மீன் வெற்றி பெற்று கழுகிடம் இருந்து
தப்பிப்பதாக கதை முடிகிறது.இந்த கதையின் மூலம்
ஒற்றுமை,உழைப்பு,தன்னம்பிக்கை இருந்தால் நிச்சயமாக நாம் நமது திறமைகளை வெளி
கொண்டு வந்து வெற்றி பெறலாம் என பேசினார்.
No comments:
Post a Comment