Thursday, 8 December 2016

தமிழகம் முழுவதும் தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் புத்தகத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின்  சாதனைகளை நாளை 09/12/2016 இதழில் காணுங்கள்.


 


   தினமலர் சிறுவர் மலர் பகுதியில் தமிழகம் முழுவதும் வெளிவரும் புத்தகத்தில் நாளை 09/12/2016 அன்று வெளியாக உள்ள இதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயின்று வரும் 8ம் வகுப்பு மாணவி தனலெட்சுமியின்  சாதனைகள் படத்துடன் வெளியாக உள்ளது.அனைவரும் படியுங்கள்.அது தொடர்பாக இன்றைய தினமலர் நாளிதழில் மாணவிக்கு மகுடம் வைத்து  உள்ள படத்துடன் 3ம் பக்கம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி உள்ள தகவலை காணுங்கள்.இந்த தகவல் வெளியாவதற்கு பத்திரிக்கையின் சார்பில் மாணவிக்கு பரிசு பணமும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.மாணவியின் திறமையை பள்ளியின் சார்பாக பத்திரிக்கைக்கு தெரியப்படுத்தி அன்னாரது திறமையை வெளிப்படுத்தி உள்ளோம்.கடந்த 3 வருடங்களில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளுடன்  40க்கும் மேற்பட்ட சான்றித்தாள்களையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
                     நாளை சிறுவர் மலர் புத்தகத்தை படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.தாயார் வீட்டு வேலை செய்பவர்.தந்தை கூலி வேலை செய்பவர். தாய்,தந்தை பல ஊர்களுக்கு போட்டிகளுக்கு அழைத்து செல்ல இயலாத சூழ்நிலையில், தலைமை ஆசிரியரின் வழிகாட்டுதோலோடு, ஆசிரியர்களின் உதவியோடு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும்,சான்றிதல்களையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment