Friday, 30 December 2016

                      ஓரிகாமி பயிற்சி 

 குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை நியூஸ் பேப்பர்,வெள்ளை தாள் கொண்டு செய்து மகிழ்ந்த மாணவர்கள்

 விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வவு 

 

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வில் தாங்களே குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை  செய்து மாணவர்கள் மகிழந்தனர்.


                      நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை காலவல்லி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் கவியரசு,முத்து செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு ஓரிகாமி பயிற்சி வாயிலாக நியூஸ் பேப்பர்,வெள்ளை தாள் கொண்டு குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை  செய்து மாணவர்கள் மகிழந்தனர்.குறைந்த செலவிலான பொருள்களின் வாயிலாக உபயோகமான பொருள்களை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.60க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயன் பட்டனர்.ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் நான்காம்  நாள் நிகழ்வில் தாங்களே குதிக்கும் தவளை ,குருவி,தொப்பி ஆகியவற்றை  செய்து மாணவர்கள் மகிழந்தனர்.   

No comments:

Post a Comment