எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள் அறிவியல் ஆய்வக
களப்பயணம்
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கல்லூரி ஆய்வகங்களுக்கு அறிவியல் ஆய்வக களப்பயணம் மேற்கொண்டனர்.இப்பள்ளி 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்ந்து நான்காம் ஆண்டாக கல்லூரி ஆய்வக சோதனை கூடங்களுக்கு நேரில் களப் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆய்வக களபயணம் வந்தவர்களை கல்லூரி விலங்கியல் துறை பேரா.
நாவுக்கரசர் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் (பொறுப்பு) விஜயன் தலைமை
தாங்கினர்.விலங்கியல் துறை தலைவர் பேரா.முகமது ரபீக் ராஜா,வேதியியல் துறை தலைவர்
பேரா.காஜா மொஹைதீன்,தாவரவியல் துறை பேரா.வீர லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விலங்கியல்,தாவரவியல் துறை பார்வையிடல்
களப்பயணத்தின் தொடக்கமாக மாணவ,மாணவியர் விலங்கியல் துறையில் ஒரு செல் உயிரியிகளிலிருந்து பல செல் உயிரிகள் வரையும்,முதுகெலும்பற்றவைகளான புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த அமீபா ,பாரமீசியம் ,பிளாஸ்மோடியம்,பவளப்பாறைகள்,
தாவரவியல் துறை
தாவரவியல் துறையில் மூலிகை தோட்டத்தில் டெரிடொ பைட்டுகள்,பிரையொ பைட்டுகள் என தாவரங்களின் வகைகளையும்,நுண்ணோக்கிகள் மூலம் தாவரத்தின் மகரந்தப்பை,சூல்பைகளையும் பார்வையிட்டும் அதன் பயன்பாடுகளையும் அறிந்து கொண்டனர்.
மூலிகை தோட்டம்
மூலிகை தோட்டம் சென்றுமலேசியன் திப்பிலி,அம்மான் பச்சரிசி,சிறுநங்காய்,முடக்கத்
வேதியியல் ஆய்வகம் பார்வையிடல்
இயற்பியல் ஆய்வகம் பார்வையிடல்
இயற்பியல் துறையில் காந்தங்கள்,வான்நோக்கி,மின்நோக்
கல்லூரி நூலகம் பார்வையிடல்
கல்லூரியின் நூலகத்தை நூலகர் உதவியுடன் மாணவர்கள் பார்வையிட்டனர்.எவ்வாறு ஒவ்வொரு புத்தகமும் பாட வாரியாக அடுக்கப் பட்டுள்ளது ,அதனை எவ்வாறு நாம் எளிதாக எடுத்து படிக்க இயலும், நூலகம் எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக எடுத்து கூறினார்.மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சிறிது நேரம் கல்லூரி நூலகதில் அமர்ந்து படித்து பார்த்தனர்.
பள்ளி மாணவியின் பேச்சு
ஆய்வக களப்பயணம் குறித்து நிறைவாக மாணவி தனலெட்சுமி பேசுகையில் கல்லூரியில் படித்தால் கூட ஒரு துறை பற்றி மட்டும்தான் அறிய முடியும்.ஆனால் 8ம் வகுப்பு படிக்கும்போதே நாங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து அறிவியல் துறைகளையும் அறியும் வாய்ப்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
மாணவர்கள்
ஜெனிபர்,விஜய்,செந்தில்,பார்கவி லலிதா ,ராஜேஷ், விக்னேஷ்,உமா மகேஸ்வரி,காவியா,ஜீவா,சங்கீதா,தனலெட்சுமி
ஆகியோர் பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.
களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் மற்றும் ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை ஆர்வமாக பார்வையிட்டனர்.
No comments:
Post a Comment