Monday, 31 October 2016

மாநில போட்டிக்கு தேர்வு
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி  போட்டியில் வெற்றி
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி  மாவட்ட அளவிலான அறிவியல்  கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்று மெடல்,விருதுடன் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதற்கு பள்ளியில்  பாராட்டு விழா நடைபெற்றது.

Saturday, 29 October 2016

தினமலர் பட்டம் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பான படம் மற்றும் கணிதம் தொடர்பான கேள்வி வெளியாகி உள்ளது .அனைவரும் காணுங்கள் .

Wednesday, 26 October 2016

பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது எப்படி? 
தீயணைப்பு  அதிகாரி நேரடி  செயல் முறை விளக்கம் 

பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ? 

      தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு  நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

Tuesday, 25 October 2016

திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் திருமுருகாற்றுப்படை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Monday, 24 October 2016

தினமலர் பட்டம் பரிசுகள் வழங்குதல்

மாநில அளவில்  நடைபெற்ற இப்போட்டியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்  அளவில் வெற்றி பெற்றுள்ள ஒரே மாணவி பரமேஸ்வரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
மாநில்அளவில் கனவு ஆசிரியர்

போட்டியில் வெற்றி பெற்றதற்கு

தினமலர் சார்பாக பரிசு வழங்குதல்

மாணவி மகிழ்ச்சி 

Tuesday, 18 October 2016

குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ?

மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே எனது குறிக்கோள் என பத்து வயது மாணவர் பேச்சு 

400 மொழிகள் அறிந்த இஸ்ரேலில் பயிலும்  10 வயது மாணவர் பயற்சி அளித்தல்

இயற்கை உணர்வு மூளை வளர்ச்சியை அதிகரிக்கும்

கேழ்வரகு ,சாமை,சோளம்,கம்பு,குதிரைவாலி போன்ற இயற்கை உணவை உண்பதால் எந்த நோயும் அண்டவில்லை

இதுவரை தனது குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனை சென்றது கிடையாது என தகவல்

சர்க்கரையை தவிர்த்து , இனிப்புகளையும் தவிர்த்து இளம் வயது வாழ பழகி கொள்ளுங்கள்

சீதாப் பழம்,கொய்யா பழம்,சப்போட்டா பழம் அதிகம் சாப்பிடுங்கள் என வேண்டுகோள்

வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும்,வாழ்வதற்கு ஆறு  மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என தகவல்

கதைகளின் மூலம் மாணவர்களுக்கு அதிகமான பாடங்களை சொல்லி கொடுங்கள் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்

பதினைந்து ஆண்டுகளில் இருபத்தி எட்டு நாடுகள் சுற்றி ஆராய்ட்சி செய்த
உளவியாளரும், பன்மொழி அறிஞருமான மொழிப் பிரியன் பேச்சு

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.

Sunday, 16 October 2016

இன்றைய நிகழ்ச்சி 17/10/2016

மாணவர்களை  சாதனையாளராக மாற்ற பயிற்சி 

மாணவர்களின் புத்தி கூர்மையை (IQ ) மேம்படுத்துவது எப்படி ? அதற்கான ஆலோசனைகள்



இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.

நாள் : 17/10/2016

நேரம் : காலை 10.30 மணி

பயிற்சிஅளிப்பவர் :

*திரு.மொழிப் பிரியன் ,பன்மொழி அறிஞர் ,உளவியல் ஆராயாட்சியாளர்

* செல்வன் .அக்ரம் , இஸ்ரேல் நாட்டில் பயிலும் 10 வயது மாணவர்.

Saturday, 15 October 2016

இளைஞர் எழுச்சி நாள் 

 மாணவர்களுக்கு அப்துல் காலம் பொன்மொழிகள் எழுதும் போட்டி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

Friday, 14 October 2016


மூளை தொப்பி,உணவு சங்கிலி,பெரிஸ்கோப் போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்களை குறைந்த செலவில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தயாரிப்பது எப்படி பணிமனை பயிற்சி

ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி

தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

Tuesday, 11 October 2016


கல்விக் கண் திறப்பு விழா



மேளம்,நாதஸ்வர இசையுடன் பள்ளியில் சேரும் புதிய மாணவர்களை மாலையிட்டு  ஊர்வலமாக அழைத்து வருதல் 
நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை

தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி புதிய மாணவர்களை மேளம்,நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மாணவர் சேர்க்கை கல்வி கண் திறப்பு விழாவாக நடைப் பெற்றது.

Monday, 10 October 2016

தினமலர் பட்டம் நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பான படம் வெளியாகி உள்ளது .அனைவரும் காணுங்கள் .
 

Saturday, 8 October 2016

மத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவிலான தகுதி தேர்வு 


                              
                            சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய  போட்டிக்கு மாணவர்களை  பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.

Wednesday, 5 October 2016

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

                         கண்காட்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார்.அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி ,தேவகோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில் பெர்னோலி தியரம் ,பகல் – இரவு மாதிரி,தனி ஊசல் , மானோ மீட்டர், முழு அக எதிரொலிப்பு,கோணங்களின் பிம்பம்,ஒத்த அதிர்வுகள்,வளைவு பாதை மற்றும் நேர்கோட்டு பாதை ,மணி மற்றும் கயிறு மாதிரி,கோள்களின் இயக்கம்,ஆடிகளின் வகை,பல் மாதிரி,சிறுநீரகம்,நீர் மூழ்கி கப்பல் உட்பட எழுபதுக்கும்  மேற்பட்ட அறிவியல்  தொடர்பான உபகரணங்கள் செயல்பாட்டுடன்  செய்து காண்பிக்கப்பட்டது.கண்ணங்குடி ,தேவகோட்டை ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்கள்,தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவிகள், ஆறாவது வார்டு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்கள் உட்பட 7௦௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்கள்,பல பள்ளிகளின் ஆசிரியர்கள்  பார்வையிட்டு சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும்,அகஸ்தியா பவுண்டேசனும் இணைந்து செய்து இருந்தனர்.அகஸ்தியா பவுண்டேசன ஆசிரியர்கள் மகேஷ்,கவியரசு,முத்து செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு  பயற்சிகளை வழங்கினார்கள்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி  துவக்கி வைத்தார்.உடன் அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,அகஸ்தியா பவுண்டேசன மகேஷ்   உள்ளனர்.
சுட்டி விகடனை ஆர்வமுடன் படிக்கும் மாணவர்கள் 

இந்த மாத சுட்டி விகடன் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்களால் வாங்கி கொடுக்கப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் அதனை படிக்கும் காட்சி.




Monday, 3 October 2016

இன்றைய நிகழ்ச்சி 05/10/2016
மாபெரும் அறிவியல் கண்காட்சி
இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் ,தேவகோட்டை.
நேரம் : காலை 9.15 மணி முதல் மாலை 4 மணி வரை
நாள் : 05/10/2016 மற்றும் 06/10/2016

கண்காட்சியை துவக்கி வைப்பவர் : திருமதி .R .லெட்சுமி தேவி , உதவி தொடக்க கல்வி அலுவலர் ,தேவகோட்டை.

நிகழ்ச்சி ஏற்பாடு : அ .மு .மு.அறக்கட்டளை ,பள்ளத்தூர் மற்றும் அகஸ்தியா பௌண்டேஷன்
அனுமதி இலவசம் ,அனைவரும் வருக .

இக்கண்காட்சிக்காக 3ம் தேதி மற்றும் 4ம் தேதி அகஸ்தியா பவுண்டேசன் மூலம் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி அளித்த படங்கள் .

 
பள்ளிகள் திறப்பு 

மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட  புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள்   வழங்கும் விழா

தேவகோட்டை முதல் பருவ  விடுமுறைக்கு பின்பு இரண்டாம்  பருவத்தின் முதல் நாளான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.மாணவ,மாணவியர்க்கு விலையில்லா பாட  புத்தகங்கள், நோட்டுக்கள் ,சீருடைகள்  வழங்கப்பட்டன.மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர்.

Saturday, 1 October 2016

அகில இந்திய வானொலியான                  மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது