மூளை தொப்பி,உணவு சங்கிலி,பெரிஸ்கோப் போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்களை குறைந்த செலவில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தயாரிப்பது எப்படி ? பணிமனை பயிற்சி
ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி
தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அகஸ்தியா பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார்.பயிற்சியாளர்கள் மகேஷ்,கவியரசு,முத்துச்செல்வன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு மூளை தொப்பி,உணவு சங்கிலி,பார்வை நீட்டிப்பு திறன்,பெரிஸ்கோப்,கலைடாஸ் கோப் ,ஆழ்துளை கிணறு மாதிரி போன்ற அமைப்பு,ஊசி துளை கேமரா,பாஸ்கல் விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்களை நேரடியாக செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்ததுடன், ஆசிரியர்களே செய்வதற்கும் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கீளகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியசாமி,செவல்புஞ்சை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர்,1வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி , பணிபுலான்வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கார்த்திகேயன் , காரைக்குடி இந்திய ஆயுள் காப்பிட்டு கழக வளர்ச்சி அதிகாரி முருகப்பன்,ஆரோவில் சுந்தரவள்ளி, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லுரி இயற்பியல் துறை மாணவ,மாணவியர் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அகஸ்தியா அறிவியல் நிறுவனமும்,பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும் இணைந்து செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment