Wednesday, 5 October 2016

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

                         கண்காட்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கி கண்காட்சியை துவக்கி வைத்தார்.அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி ,தேவகோட்டை கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்காட்சியில் பெர்னோலி தியரம் ,பகல் – இரவு மாதிரி,தனி ஊசல் , மானோ மீட்டர், முழு அக எதிரொலிப்பு,கோணங்களின் பிம்பம்,ஒத்த அதிர்வுகள்,வளைவு பாதை மற்றும் நேர்கோட்டு பாதை ,மணி மற்றும் கயிறு மாதிரி,கோள்களின் இயக்கம்,ஆடிகளின் வகை,பல் மாதிரி,சிறுநீரகம்,நீர் மூழ்கி கப்பல் உட்பட எழுபதுக்கும்  மேற்பட்ட அறிவியல்  தொடர்பான உபகரணங்கள் செயல்பாட்டுடன்  செய்து காண்பிக்கப்பட்டது.கண்ணங்குடி ,தேவகோட்டை ஒன்றிய பள்ளிகளில் உள்ள மாணவர்கள்,தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல் நிலை பள்ளி மாணவிகள், ஆறாவது வார்டு நகராட்சி உயர் நிலை பள்ளி மாணவர்கள் உட்பட 7௦௦ க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்கள்,பல பள்ளிகளின் ஆசிரியர்கள்  பார்வையிட்டு சென்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும்,அகஸ்தியா பவுண்டேசனும் இணைந்து செய்து இருந்தனர்.அகஸ்தியா பவுண்டேசன ஆசிரியர்கள் மகேஷ்,கவியரசு,முத்து செல்வன் ஆகியோர் மாணவர்களுக்கு  பயற்சிகளை வழங்கினார்கள்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.கண்காட்சியை தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி  துவக்கி வைத்தார்.உடன் அறிவியல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பெரியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம்,அகஸ்தியா பவுண்டேசன மகேஷ்   உள்ளனர்.

No comments:

Post a Comment