மத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவிலான
தகுதி தேர்வு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் வாருங்கள் ஒன்றிணைந்து
மின்சாரம் தயாரிக்கலாம் என்ற தலைப்பில்
4,5,6 வகுப்பு மாணவர்களுக்கு
ஒரு பிரிவாகவும், போலரை பாதுகாக்க சோலாரை பயன்படுத்துங்கள் என்ற
தலைப்பில் 7,8 பிரிவு
மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள்
நடைபெற்றது. இந்த
போட்டியில் பள்ளி அளவில்
கலந்துகொண்ட 80க்கும்
மேற்பட்ட மாணவர்களில்
மாநில அளவில்
கலந்துகொள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.போட்டிக்கான நிகழ்ச்சியில் மாணவர்
ராஜேஷ் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்
தலைமை தாங்கினார் .ஆசிரியர் ஸ்ரீதர் போட்டிகளை நடத்தினார்.போட்டியில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளில்
இரண்டு பிரிவுகளிலும் இருவரை தேர்வு செய்து பரிசு
வழங்கப்பட்டது.
பிரிவு எ வில் 4ம் வகுப்பு மாணவர் கிஷோர் குமார் முதல் பரிசும்,6ம் வகுப்பு மாணவி காயத்ரி இரண்டாம் பரிசும் பெற்றனர். பிரிவு பி யில் 8ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் முதல் பரிசையும்,அதே வகுப்பு மாணவர் பரத்குமார் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் சபரி நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள மாநில ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடத்த பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள தேசிய போட்டிக்கு மாணவர்களை பள்ளி அளவில் தேர்வு செய்யும் தகுதி போட்டி நடைபெற்றது.
பிரிவு எ வில் 4ம் வகுப்பு மாணவர் கிஷோர் குமார் முதல் பரிசும்,6ம் வகுப்பு மாணவி காயத்ரி இரண்டாம் பரிசும் பெற்றனர். பிரிவு பி யில் 8ம் வகுப்பு மாணவர் விக்னேஷ் முதல் பரிசையும்,அதே வகுப்பு மாணவர் பரத்குமார் இரண்டாம் பரிசையும் பெற்றனர்.நிறைவாக மாணவர் சபரி நன்றி கூறினார்.
பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் எரி சக்தி துறை அமைச்சகத்தால் நடத்தப்படவுள்ள மாநில ஓவிய போட்டிக்கு தகுதி போட்டி பள்ளி அளவில் நடத்த பட்டது.
No comments:
Post a Comment