Saturday, 30 January 2016

 சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர் கட்டுரை போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்கு பாராட்டு 


Thursday, 28 January 2016

எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான பொது  மருத்துவ  முகாம் 

 தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.ஐ.சி.யின் பள்ளி  மாணவர்களுக்கான மாதந்திர  பொது  மருத்துவ  முகாம்  நடை பெற்றது.

Tuesday, 26 January 2016

 குடியரசு தின விழா 

அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் உள்ள நாடு இந்தியா 

பேராசிரியர் பேச்சு


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.ஆசிரியை வாசுகி வரவேற்றார்.

Monday, 25 January 2016

தேசிய வாக்காளர் தின விழா 

தேவகோட்டை பள்ளியில் மாணவர்களுடன் சப் கலெக்டர் கலந்துரையாடல் 
                     சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில்  நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் 100 சதவிகிதம் வாக்களிக்க ஆவண செய்வதே  தேசிய வாக்காளர் தினத்தின் நோக்கம் என தேவகோட்டை சப் கலெக்டர் பேசினார்.

Thursday, 21 January 2016

மாநில அளவிலான கணிதத்திறன் போட்டி

தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
தேவகோட்டை :
திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான கணிதத்திறன் போட்டிகள் நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.

Sunday, 17 January 2016

திருக்குறள் பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்வில் திருக்குறள் நடனம் ஆடிய  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் 


Saturday, 16 January 2016

 தேசிய இளைஞர் தின விழா 

பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு.

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு அரசு உதவி பெறும் பள்ளியின் முதல் வகுப்பு மாணவி மாவட்ட அளவில் முதலிடம் 

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழா நடைபெற்றது.இதனில் பாவை விழா ஒப்புவித்தல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முதல் வகுப்பு மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.




சுட்டி விகடனின் அழகான கேமரா 
சுட்டி கிரியேசன்ஸ் அழகான கேமரா   வடிவத்தை உருவாக்கிய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சுட்டி விகடன் 15/01/2016 இதழில் சுட்டி கிரியேசன்ஸ் பகுதியில் வெளியான அழகான கேமரா  வடிவத்தை உருவாக்கி செய்து காண்பித்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் .

Sunday, 10 January 2016

அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ .எஸ். ஆனேன்
வேளாண்மை துறை இணை செயலர்  செ .ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பெருமிதம் 


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ்.  தான் அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனது குறித்து  பெருமிதம் கொள்வதாக மாணவர்களிடம் பேசினார்.

Thursday, 7 January 2016

 தாய் மொழியில் பயின்றால்தான் மக்கள் வளம் பெறுவார்கள் 

ஜெர்மனில் அனைத்து பள்ளிகளும் அரசு பள்ளிகளே 

தங்க நகையே அணியாத நாடு ஜெர்மன்

 வாழ்க்கையில் கல்வி தான் நண்பன்

ஜெர்மன் பெண் ஆராய்ச்சியாளர் பேச்சு

தேவகோட்டை:"வாழ்க்கை முழுவதும் கல்வி தான் சிறந்த நண்பனாக இருக்கும்,' என ஜெர்மனி பெண் ஆராய்ச்சியாளர் சுபாஷினிட்ரெம்மல் பேசினார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் வாழ் வியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். 

Monday, 4 January 2016

       ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியை 

தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஓய்வறியா கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.