குழந்தைகள் தின விழா: தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கல்!
தேவகோட்டை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, அனைத்து மாணவர்களுக்கும் கேக் மற்றும் தமிழக அரசின் வாழ்த்து அட்டைகளை வழங்கினார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கேக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.
வாழ்த்து அட்டை மிகவும் அழகாக இருப்பதாகவும், அதன் பின்புறம் இடம்பெற்றுள்ள கால அட்டவணை தங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அனைத்து மாணவர்களுக்கும் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்திருந்தார்.
video : https://www.youtube.com/watch?v=Urg7xuzCbGk
No comments:
Post a Comment