Tuesday, 10 November 2026


பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – தேவகோட்டை பள்ளிக்கு கேக் பெட்டிகள் வழங்கல்!



தேவகோட்டை: தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தின் கீழ், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு கேக் பெட்டிகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர் முனியாண்டி, கேக்குகள் அடங்கிய பெட்டிகளை பள்ளித் தலைமையாசிரியர் சொக்கலிங்கத்திடம் வழங்கினார்.

தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படுவது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் இத்தகைய மாணவர் நலத்திட்டங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.

 







No comments:

Post a Comment