Monday, 30 March 2020

பழக இனிமையானவருக்கு பணி நிறைவு வாழ்த்துக்கள் !

அகில இந்திய வானொலியின் நேயர்கள் விரும்பும் ஆளுமைக்கு இன்று பணி நிறைவு நாள் ! நீடூழி வாழ அனைத்து செல்வங்களும் பெற்று உங்கள் குடும்பம் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா ! 



Sunday, 29 March 2020

சமூக விலகலும்   தனிமையில் இருத்தலும்

சாமனியனின் அனுபவ பகிர்வு

ஐந்தாம் நாளாக தொடர்ந்து வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் 

அனுபவ பகிர்வு நாள் - 29-03-2020 இரவு மணி 10.30 PM

நண்பர்களே தயவு செய்து தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

ஒண்ணுமே புரியலே , உலகத்திலே- எது நடந்தாலும் நன்மைக்கே!

வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் அனுபவம் எப்படி?

*♦டேட்டாவை அள்ளி வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்..*

Saturday, 28 March 2020

          
*👆👆👆வங்கி கடன் குறித்த தெளிவான செய்தி*
*இல.சண்முகசுந்தரம் @சம்ஸ் அக்குஹீலர்:*
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா?
*கேஸ் 31 வாழ்ந்தது போன்று நீங்களும் வாழாதீர்கள்..*

பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?
இச்சந்தேகம்தான் எல்லோரையும் இப்போது வாட்டுகிறது. *கைகழுவினால் போதாது, மாஸ்க் போட்டாலும் போதாது, வீட்டைவிட்டே வெளியவே வரக்கூடாது* என்றளவிற்கு நிலைமை சிக்கலாகிக்கொண்டே போகிறது.

*ஆனால், பயம் துளியும் வேண்டாமென்கிறது இந்தக் கட்டுரை. வாசியுங்கள்.
 கிரடிட் கார்டுகளுக்கான EMI  நிலை என்ன ?

த்ருப்ட்,சொசைட்டி கடன்களுக்கு இது பொருந்துமா ?

மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் என்ன ஆகும்?

தனியார் வங்கி ,தனியார் நிதி நிறுவனங்களின் கடன்கள் நிலைமை என்ன ?

மாத சம்பளகார்களின் கடன் நிலைமை என்ன ? எப்போது கட்ட வேண்டும்?

EMI மூலம் செலுத்தும் வீட்டு கடன்,வாகன கடன் ,பர்சனல் கடன் போன்றவற்றின் நிலை என்ன ?

வங்கி அலுவலரின்  தெளிவான  விளக்கங்கள்
 

*•┈┈•🌿 _DAILYNEWS 24/7_🌿•┈┈•*

_*✍️⚡கடன் தவணைத் தொகைகளை 3 மாதங்கள் தள்ளி  கட்ட SBI அனுமதி*_
மாணவர்கள் மீதான அக்கறையும்,ஆரோக்கியத்தையும் சத்துணவில் காட்டும் பள்ளி 









Friday, 27 March 2020

*வீட்டுக்குள்ளேயே இருக்கும் நாட்களில் ஆரோக்கியம் பேணுதல் எப்படி?*

Wednesday, 25 March 2020

"மாஜி" எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் 25,000 ஆக உயர்வு 

 எம்.எல்.ஏ.க்கள் இறந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூபாய் 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு  

" மாஜி "எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படி 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்வு -  நாளிதழ் செய்தி




 மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக சுமை ஏற்படுத்தாமல் இருப்பது எப்படி? ஏன் வீட்டிலேயே இருக்க வேண்டும்? மருத்துவர் விளக்கம் 


Sunday, 22 March 2020

பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் - தேவகோட்டையில்  அசத்தும் நடுநிலைப்  பள்ளி மாணவர்கள்




Monday, 16 March 2020

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு - பொதுமக்களை உஷார்படுத்திய பள்ளி மாணவர்கள்- பொதுமக்கள் பாராட்டு

 விடுமுறை நாளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த வீதிகள்  தோறும் சென்ற   மாணவ தூதுவர்கள் 

 





Sunday, 15 March 2020

செட்டி நாட்டு வழக்கப்படி இரு கை கூப்பி வணக்கம் தெரிவியுங்கள் 
சுகாதார ஆய்வாளர் பேச்சு 

கொரோனா  வைரஸ் விழிப்புணர்வு 


தேவகோட்டை நகராட்சி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணர்வு 


தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகராட்சி சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடைபெற்றது. ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்குகொரோனா  வைரஸ் தொடர்பான விழிப்புணர்வும், கைகழுவும் முறைகளையும் விரிவாக விளக்கினார். உணவு பாதுகாப்பாக எவ்வாறு சாப்பிடலாம் என்கிற தகவலையும், கலர்  அதிகமான பொருட்களை கடைகளில் வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நகராட்சி பணியாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமு  ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர் .மாணவர்கள் அய்யப்பன், நதியா ஆகியோர் கை கழுவும் முறைகள் குறித்தும், வைரஸ் குறித்தும் விரிவான தகவல்களை வழங்கினார்கள் .நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

 படவிளக்கம் : தேவகோட்டை நகராட்சி சார்பாக சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் மாணவர்களுக்கு கைகழுவும் முறைகளையும் , பொது சுகாதாரம் குறித்தும் விரிவாக விளக்கினார். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

Saturday, 14 March 2020

 உலக மகளிர் தினத்தில் தேவகோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மாண்புமிகு முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அருமையான தருணம் .நன்றி கலந்த அன்புடன் லெ .சொக்கலிங்கம்,தலைமை ஆசிரியர்,சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,தேவகோட்டை.சிவகங்கை மாவட்டம்.






 

Thursday, 12 March 2020


கேள்வி : மாணவி நதியா : ஜிஎஸ்டி மக்களுக்கு எந்த வகையில் நன்மை செய்கிறது?'

பதில் :ஆர்.பாலசுப்ரமணியன் ஐ.ஆர்.எஸ்.:


                        ஜிஎஸ்டி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகத் தான் அமைந்துள்ளது .எப்படி என்றால் நீங்கள் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் பொழுது முன்பெல்லாம் ஒரு வரி விதிப்பார்கள். அதனை  சந்தைப்படுத்தும் பொழுது அதற்கு ஒரு வரி விதிப்பார்கள் .குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் நம்முடைய மற்ற மாநிலங்களில் இருந்து தயாராகி செல்லும் பொருட்களுக்கு நுழைவு வரி விதிப்பார்கள் .அந்த நுழைவு வரி  அதிகமாக இருக்கும் .அது போன்று இல்லாமல் ஒரே குடையின் கீழ் ஒரே வரி  என்கிற அடிப்படையில் இந்தியா முழுவதற்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு மூலமாக தற்போது உள்ளூரில் வாங்க கூடியவர்களுக்கு நன்மை செய்வதாக இந்த ஜிஎஸ்டி வரி அமைகின்றது. எனவே ஜிஎஸ்டி வரி நிச்சயமாக மக்களுக்கு நன்மை செய்வதாகவே அமைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி பொதுவாக 5%, 8%, 12 சதவிகிதம் ,18%, 28% என்கிற  முறைகளில் விதிக்கப்படும். 28 சதவீதத்துக்கும் மேலாக ஜி எஸ்.டி.வரி விதிக்கிறார் என்றால் அது நிச்சயமாக தவறான வரியாகத்தான் இருக்க வேண்டும் .விவசாயத்திற்கு ,வேளாண்மைக்கு ஜீரோ சதவிகிதம் ஜிஎஸ்டி என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா 

குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்-  அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் - ஐ.ஆர்.எஸ்.பேச்சு

சுங்கவரித் துறை துணை ஆணையாளர்  பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் 

மத்திய பெட்ரோலியத் துறை சான்றிதழ்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு 

Monday, 9 March 2020

 கைகளை சுத்தமாக கழுவும் முறை குறித்து பள்ளியில் விளக்கம் 

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு 





Sunday, 8 March 2020

அமெரிக்காவில் இருந்த அலைபேசியில் அழைத்து வாழ்த்திய 85 வயது பெண்மணி 

கடவுள் நம்பர் 1 அன்று,காசுதான் நம்பர் 1 இன்று

Friday, 6 March 2020

Wednesday, 4 March 2020

மாணவர்களுக்கு பாராட்டு 

வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

தொடர்ந்து ஐந்தாம்   ஆண்டாக பரிசுகளை குவித்த மாணவர்கள்

Sunday, 1 March 2020

  குதிர் பார்த்து வியந்த மாணவர்கள்

 சேற்றில் இறங்கி நாற்று  நடும்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 

  காளான் வளர்ப்பு பற்றி நேரில் செய்து கற்றுக்கொண்ட மாணவர்கள்


 
விவசாய கல்லூரிக்கு களப்பயணம் சென்ற மாணவர்கள்