Friday, 1 September 2017

 காசு வாங்கி ஏமாற்றும் செல் நிறுவனங்கள் - விழிப்புணர்வுடன் இருங்கள் 


மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க காசு கொடுக்க வேண்டாம்.காசு கேட்கும் கடையை பற்றி கஸ்டமர் கேரில் உங்கள் தகவலை பதிவு செய்து காசு இல்லாமல் இணையுங்கள்.


                       சமீபத்தில் காரைக்குடியில் பெரியார் சிலை அருகில் உள்ள சேனா என்டர்ப்ரைஸிஸ் நிறுவனத்தில் வோடபோன் மொபைல் என்னுடன் ஆதார் எண் இணைக்க சென்றேன்.கடையில் இருந்த ஊழியர் 50 ரூபாய் வேண்டும் என்று கேட்டார்.இரண்டு எண்கள் இணைத்து விட்டு ரூபாய் 100 கேட்டார்கள்.அப்போது நான் கேட்டேன் ,இப்போதுதான் ஏர்டெல் எண்ணுடன் ஆதார் இணைத்தேன்.அவர்கள் காசு எதுவும் கேட்கவில்லை என தெரிவித்தேன்.அதற்கு கடையில் உள்ளவரோ ,அவர்கள் முன்பு வாங்கினார்கள் .இப்போது வாங்கவில்லை.நாங்கள் முன்பு வாங்கவில்லை.இப்போது வாங்குகிறோம்.கம்பெனியில் சொல்லி உள்ளனர் என்று சொன்னார்.காசை கொடுத்து விட்டு ,எனது மொபைலில் இருந்து வோடபோன் மூலம் 198 என்கிற என்னை அழைத்து விவரம் கேட்டேன்.அதற்கு கஸ்டமர் கேரில் உள்ளவர் ,":சார், ஆதார் எண் இணைக்க காசு எதுவும் கொடுக்க வேண்டாம்.உங்களை ஏமாற்றி உள்ளனர்.நீங்கள் போனை கடையில் உள்ளவர்களிடம் கொடுங்கள் என்று தெரிவித்தார்.கஸ்டமர் கேரில் உள்ளவர் கடையில் உள்ளவர்களிடம் கடை உரிமையாளர் பெயர்,கடை உள்ள பகுதியின் பின்கோடு எண் ஆகியவற்றை கேட்டு கொண்டு,என்னிடம் மீண்டும் பேசும்போது சார்,காசு வாங்கியது தவறு.நாங்கள் அந்த கடைக்காரரிடம் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்.என்றார்.
                                   என்னிடம் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போதே கடைக்காரர் என்னிடம் வாங்கிய பணத்தை என்னிடமே மீண்டும் கொடுத்து விட்டார்.இருந்தபோதும் நான் வோடபோன் கம்பெனியில் புகார் அளித்துள்ளேன்.
                         எனக்கு முன்பு சுமார் 4 பேரிடம் இவர்கள் இது போன்று காசு வாங்கினார்கள்.இன்னும் எத்துணை பேரிடம் இப்படி காசு வாங்கி உள்ளனர் என்று தெரியவில்லை.கம்பெனியே காசு வாங்க கூடாது என்று சொல்கிறது.ஆனால் இவர்கள் ஏமாற்றி காசு வாங்கி கொள்கின்றனர்.
                              இந்த நிகழ்வை படிக்கும்போது சிலருக்கு  தோணலாம் . காசை கொடுத்து விட்டு 198க்கு போன் செய்யும்போது ,ஏங்க இந்த வேலை? விட்டு,விட்டு வாங்க.50 ரூபாய்தானே.இதுக்கு போய் கேட்டுகிட்டு என்று நினைக்கலாம்.( என் மனைவி என் அருகில் நின்று கொண்டு இப்படித்தான் சொன்னார்கள் ) . பெரும்பாலானோர் இது போன்று எண்ணுவதனால்தான் பலர் கொள்ளை அடிக்கின்றனர்.தவறாக இருந்தால் கேள்வி கேட்கலாம்.

எனவே ,நண்பர்களே மொபைல் என்னுடன் ஆதார் இணைப்பிற்கு காசு கொடுக்க வேண்டாம்.

No comments:

Post a Comment