மாணவர்களுக்கு பாராட்டு
ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி
தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி அறிவியல் மேம்பாட்டு துறை அமைச்சர் நந்தகுமார் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சிவகங்கையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய பாரதி விழாவில் பாரதியார் பாடல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற கீர்த்தியா,ஜனஸ்ரீ ,ஐயப்பன்,கார்த்திகேயன் ஆகியோருக்கும்,ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று சான்றிதழ் பெற்ற கிஷோர்குமார்,காயத்ரி,வெங்கட்ராமன்,கீர்த்திகா,நித்யகல்யாணி ஆகியோருக்கும்,விடுமுறை நாளன்று மாணவர்களை சிவகங்கை அழைத்து சென்ற ஆசிரியர் ஸ்ரீதர்க்கும்,பயிற்சி அளித்த முத்து மீனாள்,முத்துலெட்சுமி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக பள்ளி மாணவ சுகாதார துறை அமைச்சர் சபரி நன்றி கூறினார்.
பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு ஓவியம்,ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.பரிசுகளுடன் மாணவர்கள்.
No comments:
Post a Comment