மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்
சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள்
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல்
ஆசிரியர் தின விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆசிரியர் தினவிழாவில் பேசினார்.
விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.சமூக ஆர்வலர்கள் கந்தசாமி,பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்து பேசும்போது ,இளம் வயதில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.நீங்கள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் .உங்கள் கருத்தை வெளி கொண்டு வாருங்கள்.சர் ஐசக் நியூட்டன் சிறிய வயதில் எவ்வாறு விஞ்ஞானி ஆனார் என்றும்,அடுத்தவர்களின் வலியை குறைக்க என்ன செய்யலாம் என யோசித்தார் என்றும் பேசினார்.பாரதியார் பாடல்களை எடுத்து கூறி நம்மை சுற்றி உள்ளவர்களிடம் சண்டை போட வேண்டாம் என்றும்,சமூகத்திற்கு பாதகம் செய்வோருடன் சண்டை போடுதல் வேண்டும் என்றும் பாரதியார் கருத்தை வலியுறுத்தி பேசினார்.மனித சமூகத்தில் ஜாதிகளை பார்ப்பதை அறவே ஒழிக்க வேண்டும் என்றும்,இளம் மாணவ பருவத்தில் இருந்து நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும்,அனைத்து விதத்திலும் உங்களின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் பேசினார்.
மாணவர்கள் காயத்ரி,வெங்கட்ராமன்,சக்தி,அஜய் பிரகாஷ் ஆகியோரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.ஆசிரியர் தின விழா ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யகல்யாணி,கிருத்திகா ,கிஷோர்குமார் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
பட விளக்கம் : தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அதிகம் கேள்விகள் கேட்கும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்.

No comments:
Post a Comment