Friday, 22 September 2017

பகுதி - 2

புதிய நட்புகளும்,ஒன்பது நாள் போராட்டமும்

28 வருட பணிக்காலத்தில் முதன்முறையாக கைதான ஆசிரியை


சம்பளம் அதிகம் கேட்டு போராட்டமா? மாணவர் மற்றும் பெற்றோரின்  கேள்விக்கு பதில்



நீங்கள் போராடுவதை நான் ஏற்று கொள்ளும்  வகையில் எப்படி சொல்வீர்கள்? பத்திரிக்கை ஆசிரியரின் கேள்விக்கு அவருக்கு  புரியும்  வகையில் பதில்



தினமும் போராட்ட களத்துக்கு வந்து ஆச்சரியப்படுத்திய  ஆசிரிய ஜோடி


 புதிய நண்பர்கள் பழகும் வாய்ப்பு - முதல் நாள் கைதானபோது :
                                            போராட்டத்தின் முதல் நாளன்று தேவகோட்டையில் மறியல் நடைபெற்றது.அப்போது இது வரை தொலைபேசியில் அதிகம் பேசியும்,நேரில் சில நாட்கள் மட்டுமே பார்த்து பேசியிருந்த தோழர்கள் சுப்பிரமணியன் ஆசிரியர்,புரட்சி தம்பி ஆசிரியர்,மாணிக்க வாசகம் தாசில்தார் ஆகியோரையும்,சத்துணவு அமைப்பாளர்களின் தலைவர்களையும் சந்திக்கும் வாய்ப்பும்,அவர்களுடன் உரையாற்றும் வாய்ப்பும் கிடைத்து.கைதாகி உள்ளே சென்றதும் உருவாட்டி அறிவியல் ஆசிரியர்,கைக்குறிச்சி கணித ஆசிரியர்,தோழர் அருளானந்து ஆசிரியர்,வெடிமுத்தி அறிவியல் ஆசிரியர் ராஜ்குமார் ,தனிஸ்லாஸ் ஆசிரியர்,மாணிக்கம் பள்ளி கார்த்திகை ஆசிரியர் ,தேவகோட்டை மாணிக்கம் பள்ளி திருநாவுக்கரசு ஆசிரியர் ,மருத்துவ துறையில் உள்ள நண்பர்கள்,சத்துணவு அமைப்பில் தேவகோட்டை,கண்ணங்குடி தலைவர்கள் ,வடிவேல் ஆசிரியர் என பலரை திருமண மண்டபத்தில் உள்ளபோது சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.இன்னும் பெயர் சொல்லாத பல ஆசிரியர் தோழர்களை சந்திக்கும் வாய்ப்பும்,பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.அது மிகப்பெரிய அளவில் என்னுள் பல அனுபவங்களை ஏற்படுத்தி கொடுத்தது.முதல் நாள் கைதானபோது தேவகோட்டை அளவில் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முழுவதும் கலந்து கொண்டனர்.எங்களுடன் தேவகோட்டை டி பிரிட்டோ மேல்நிலைப் ஆசிரியர்கள் பெரும்பான்மன்மையோனூர்  பங்கு எடுத்து கொண்டனர்.கண்ணங்குடி ஆசிரியர்கள் யாரும் பங்கு எடுத்து கொள்ளவில்லை என அதிகமானோர் அங்கு பேசும்போது குறிப்பிட்டனர்.இப்படியாக பல புதிய நட்புக்களை சந்திக்கும்,பழகும் வாய்ப்பு கிடைத்தது .

மனித ஆளுமைகளை சந்தித்த இரண்டாம் நாள் :
                                           இரண்டாம் நாள் மாறியலுக்காக சிவகங்கை சென்றபோது    தேபிரிட்டோ மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் கஸ்பார் சார் அவர்கள் அன்று காலை ட்ரெயினில் என்னிடம் பேச,பழக ஆரம்பித்தார்.ட்ரெயினில் நாங்கள் நின்று கொண்டே சென்றோம்.பேசிக்கொண்டும் சென்றோம்.ஆர்வத்துடன் போராட்டத்துக்கு வராத ஆசிரியர்களை என்ன செய்யலாம் என கலந்தாலோசித்து கொண்டு சென்றோம்.பிறகு மறியல் நடைபெறும் என்று சொன்ன சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் கஸ்பார் ஆசிரியர் அவர்கள் ஒரு லிஸ்ட் வைத்து கொண்டு அவர்கள் பள்ளியில் வந்தவர்கள் குறித்து கணக்கு எடுத்து கொண்டு இருந்தார்.இது எனக்கு புதுமையாக இருந்தாலும்,அருமையான முடிவு என்றும் பாராட்டினேன்.(இது தொடர்பாக அரசு ஊழியர் சங்க தலைவர் ஒருவர் சொன்ன தகவலை பின்னர் பதிவிடுகிறேன் ).
                                        அங்கேயே இன்னொரு நண்பர் அவர்களையும் சந்தித்தேன்.அவர் காரைக்குடி கல்லூரியில் பணியாற்றும் வரலாற்று பேராசிரியர்.அன்று முதல் கல்லூரி ஆசிரியர் சங்கமும் போராட்டத்தில் பங்கேற்றதாக அவர் சொன்னார்.அவர்கள் கல்லூரி சார்பாக வந்திருந்த அனைவரிடமும் ஒரு நோட்டு கொடுத்து கையெழுத்து வாங்கினார்.இதனை கடைசி நாள் போராட்டம் வரை நோட்டை கொடுத்து கையெழுத்து வாங்கினார்.என்னிடமும் நன்றாக பேசிக்கொண்டார்.
                                 கஸ்பார் ஆசிரியர் அவர்கள் சொன்னார்கள், எங்கள் பள்ளியில் சங்கம் பற்றியெல்லாம் கவலை இல்லை.சில சங்க உறுப்பினர்கள் யோசித்தனர்.ஆனால் எங்கள் பள்ளியை பொறுத்த வரை பள்ளி தான் முதல் சங்கம்.பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒட்டு மொத்தமாக முடிவெடுத்து விட்டோம்.எனவே அனைவரும் கலந்து கொள்வோம் என்று சொன்னார்கள்.அருமையான முடிவு.சங்கத்தை பற்றி கவலை இல்லை,எனக்கு கோரிக்கை தான் முக்கியம் என்று சொன்னது சூப்பர்.

                                        பிறகு கஸ்பார் சார்,சேவியர் சார்,ஜெயசீலன் சார் ஆகியோருடன் ஒன்றாக இணைந்து ஆர்ப்பாட்டம் செய்த இடத்தில மதியம் 11 மணி வெய்யிலில் ஒன்றாக அமர்ந்து சுமார் 1 மணி நேரம் கோசம் எழுப்பினோம்.உடம்பு முழுவதும் நல்ல வியர்வை .அதன் பிறகு அங்கிருந்து கிளம்பினோம்.
 ராம் நகர் ஜோசப் பள்ளி பங்கேற்பு :
                                இரண்டாம் நாள் போராட்டத்தில் தேவகோட்டை ராம் நகர் ஜோசப் பள்ளி ஆசிரியைகள்,ஆசிரியர்கள் பெரும்பாலோனோர் பங்கேற்றனர்.போராட்டம் ஆரம்பிக்கும் முதல் நாள் முதலே இப்பள்ளியின் ஆசிரியர் திரு.தாஸ் அவர்கள் என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.ஆனால் போராட்டம் ஆரம்பிக்கும் அன்று அவரால் பள்ளியில் இருந்து வர இயலவில்லை.இரண்டாம் நாள் போராட்டத்தில் இருந்து அவர்கள் பள்ளி  ஆசிரியர்கள் பாஸ்கர்,சின்னப்பன் ஆகியோருடன் பெண் ஆசிரியைகளும் உடன் வந்தனர்.எனக்கு சில நாட்கள் ட்ரெயின் டிக்கெட் திரு.தாஸ் அவர்கள் எடுத்து உதவினார்.
                                திரு.தாஸ் அவர்களுடனான பழக்கம் எனக்கு இன்னும் அதிகமானது.போராட்ட காலத்தில் தினமும் ஒன்றாக ட்ரெயினில் செல்வது அங்கு அமர்ந்து பல்வறு தகவல்களை பேசுவது என அனைத்துமே புதிய அனுபவமாக இருந்தது.

கஸ்பார் சார்,ஜோசப் பள்ளி ஆசிரியர்களின் பாராட்டு :
                                 இப்பள்ளியின் ஆசியர்கள் என்னிடம் பேசும்போது சார் ,உங்கள் பள்ளி போராட்டத்தில் பங்கேற்ற பிறகுதான் நாங்கள் உங்கள் பள்ளியை சொல்லி போராட்டத்தில் பங்கு கொண்டோம் என்று சொன்னார்கள்.கஸ்பார் சார் ,பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.நமது செயல்பாடுகள் உண்மையாக இருக்க வேண்டும்.மேலும் அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று சொன்னது ஞாபகம் வந்தது.இது உண்மை.ஏனென்றால் ,போராட்டத்தின் நிறைவு நாள் அன்று திரு.கஸ்பார் சார் அவர்கள்,என்னிடம் சொன்ன வார்த்தைகள் :சார் உங்களது செயல்பாடுகளை முதல் நாள் முதலே பார்த்து வந்தேன்.மிக நன்றாக இருந்தது.அதனால்தான் உங்களுடன் ஒன்றாக பழக ஆரம்பித்தேன்.மிக நல்ல செயல்பாடுகளை கொண்டு உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் என்று சொன்னார்கள்.இதனை ஏன் சொன்னார்?எப்போது சொன்னாரென்றால் , இரண்டு நாட்கள் என்னிடம் ட்ரையினில் டிக்கெட் எடுக்கட்டுமா துன்று கேட்டார் கஸ்பார் சார் அவர்கள்.நான் சொன்னேன் இல்லை திரு.தாஸ் அவர்கள் எடுத்து விட்டார் என்று.மூன்றாவது நாள் சீக்கிரமே ஸ்டேஷன் சென்றதால் ,நானே கஸ்பார் சறுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்து விட்டேன்.அப்போது கேட்டார் இன்று தாஸ் சார் டிக்கெட் எடுக்கவில்லையா என்று? அப்போதுதான் நான் சொன்னேன் .இல்லைங்க சார்,நான் ட்ரெயின் கிளம்பும் நேரத்திற்கு சரியாக வரும் சூழ்நிலையில் மட்டுமே அவரை எடுக்க சொன்னேன்.இன்று நான் சீக்கிரம் வந்து விட்டதால் நானே எடுத்து விட்டேன் என்று சொன்னபோதுதான் மேற்கண்ட பாராட்டுதலை சொல்லி,என்னுடன் பழகுவதற்கான காரணத்தையும் சொன்னார்.எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

மாணிக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திரு.கார்த்திகை அவர்களுடன் பழகும் வாய்ப்பு :
                                    போராட்டத்தின் ஆரம்ப நாள் முதலே அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.நன்றாக அன்புடன் பேசி கொண்டார்.போராட்டத்தின் அனைத்து நாட்களும் சரியான நேரத்தில் கலந்து கொண்டு என்னுடன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

திருப்பத்தூர் ஒன்றிய ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு :
                             திருப்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தோழர் முத்து மாரியப்பன்,சக்திவேல்,சேகர் மற்றும் பெயர் தெரியாது பல்வேறு ஆசிரியர்களுடன் நன்றாக பழகும் வாய்ப்பு கிடைத்தது .தோழர் முத்து மாரியப்பன் பல முறை என்னிடம் போன் வழியாகவும்,நேரிலும் வாழ்த்து சொன்னதுடன் போராட்டம் தொடர்பாக மிக எளிதாக விளக்கினார்கள் .

ஊக்கப்படுத்திய தோழர்கள் :
                                 பல்வேறு சூழ்நிலைகளில் போராட்டம் தொடர்பாக தோழர்கள் புரட்சி தம்பி.சிங்கராயர்,தமிழ் அரசன் ,செல்வகுமார்,முத்துப்பாண்டி,அருளானந்து ,சுப்பிரமணியம் ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.அவர்களுக்கும்,தூத்துக்குடி தோழர் மயில் போன்றோரும் எனக்கு பல்வேறு தகவல்களை எடுத்து சொல்லி உதவினார்கள்.

போராட்டத்திற்கான மாற்று சங்கத்தில் இருந்தாலும் அன்புடன் ஊக்கப்படுத்திய நண்பர் :
                                   சிவகங்கை நடேசன் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.பாண்டியராஜன் அவர்கள் என்னிடம் போராட்டம் தொடர்பாகவும்,அலுவலக ரீதியாக நான்  சில தகவல்கள் கேட்கும்போதும் எனக்கு பல்வேறு தகவல்களை வழங்கி உற்சாகப்படுத்திய அன்னார்க்கும் எனது நன்றிகள் பல.

மூன்றாம் நாள் போராட்டம் :
                     இன்று சனிக்கிழமை என்பதால் போராட்டத்தின் தொடர்ச்சி மட்டுமே.எனக்கு கடுமையான கண் வலி .அதற்காக மருத்துவரை சந்தித்தேன்.

நான்காம் நாள் போராட்டம்:
                            இன்று விடுமுறை நாள்.எனக்கு கடுமையான வைரல் காய்ச்சல்.மருத்துவர் மறுநாள் என்னை ஓய்வு எடுக்க சொன்னார்.ஆனால் நான் போராட்ட ஆர்வத்தின் காரணமாக சிவகங்கை சென்றேன்.

ஐந்தாம் நாள் போராட்டம் :
                                       ஐந்தாம் நாள் போராட்டத்தின் ஆரம்பமாக நானும் கஸ்பார் சார் அவர்களும் வழக்கம்போல் ட்ரெயினில் ஒன்றாக சென்றோம்.இந்த மூன்று நாட்களும் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள TNEB கேண்டினில் உணவு சாப்பிட்டோம்.என்னுடன் மிகவும் அன்பாக கஸ்பார் சார் பழகினார்கள்.ஆர்ப்பாட்ட களத்தில் இளையான்குடியில் பணியாற்றும் தோழர் அருள்சாமி,சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர்கள்,பல்வேறு ஆசிரிய,அரசு ஊழிய நண்பர்களை சந்திக்கும்,பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆறாம் நாள் போராட்டம் :
                                                   வழக்கம்போல் இன்றும் ட்ரெயின் வழியாக சென்றேன். விட இன்று கூட்டம் அதிகம் .மிக அதிகமான எண்ணிகையில் போராட்டக்காரர்கள் வந்தார்கள்.பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .பல துறைகளில் உள்ள அரசு ஊழியர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .இன்று கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்க பட்டோம்.

வட்டாட்சியர் பெயரை பார்த்து ஆச்சரியப்பட்ட தாசில்தார் : 
                        மாட்டு வண்டி ஓட்டிய வட்டாட்சியர் என்கிற தலைப்பை தயார் செய்து அது தொடர்பான தகவலை எனது வலைதளத்தில் வெளியிட்டேன்.அப்போது எனக்கு போன் செய்த வட்டாட்சியர் தோழர் தமிழரசன் அவர்கள் , தனக்கு வட்டாட்சியர் என்று பதவி பெயர் மறந்து நீண்ட நாள் ஆகி விட்டதாகவும்,தாசில்தார் என்கிற பெயரே ஞாபகம் இருப்பதாகவும் தனக்கு இந்த பதிவு மிகவும் பிடித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
போராட்டத்தில் தாசில்தாரா?
                                 போராட்ட களத்தில் தாசில்தார் உள்ளாரா? என்று கேள்வி கேட்டு பல பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் இந்த பதிவு உதவியது குறிப்பிடத்தக்கது.

பாராட்டுக்குரிய பெண் அரசு ஊழியர்கள்,ஆசிரியைகள் :
                                                     ஆறாம் நாள் போராட்டத்தில் அதிகமான எண்ணிக்கையில் பெண் ஊழியர்கள் கைது ஆனார்கள்.எனக்கு தெரிந்து ராம் நகர் ஜோசப் பள்ளி ஆசிரியைகள் , காரைக்குடியில் இருந்த வந்திருந்த ஆசிரியைகள் வனிதா உட்பட பலரை சொல்லலாம்.

திருமண மண்டபத்தின் உள்ளே பல ஆசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு :
                    கைதாகி நாங்கள்      உடன் தேபிரிட்டோ பள்ளி ஆசியர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து பேசி கொண்டு இருந்தேன்.சில ஆசிரியர்கள் கைதாகி வராமல் ஆர்பாட்டத்துடன் ஏமாற்றி விட்டு ஓடி விட்டதை தொடர்பாக பேசி கொண்டு இருந்தோம்.
                            பின்பு சாக்கோட்டை ஆசிரியர்கள் சிங்காரவேலன்,சண்முக வடிவேல்,திருப்பதி,பாலகிருஷ்ணன்,டேவிட்,கார்த்திக் சங்கர்,முத்து  ஆகியோருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.மாலை ஜோசப் பள்ளி ஆசிரியர்கள் தாஸ் ,பாஸ்கர்,சின்னப்பன் ஆகியோருடன் ட்ரெயின் வழியாக காரைக்குடி வந்து சேர்ந்தோம்.எங்களுடன் ஜோசப் பள்ளி ஆசிரியைகள் கைதாகி வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன்.

ஏழாம் நாள் காத்திருப்பு போராட்டம் :(தோழர் ஜேக்கப் உடன் பழகும் வாய்ப்பு )
                                இன்று கண்ணங்குடி    ஆசிரியர் சார்லஸ் கண்ணன்,ராஜா ஆகியோர் தோழர்கள் 13 பெண் ஆசிரியர்களுடன் போராட்ட களத்துக்கு வந்து எங்களை ஆச்சிர்யப்படுத்தினார்கள்.அவர்கள் அனைவரும் மாற்று சங்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களது தகவலை உடைத்துஎறிந்து போராட்டத்துக்கு வந்து சேர்ந்தனர்.தோழர் ராஜா அவர்கள் என்னிடம் அன்புடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.   


                    இன்று சாக்கோட்டை ஆசிரியர் பிச்சுமணி அவர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.இன்று மாலை ட்ரெயின் வழியாக செல்லும்போது அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி தோழர் ஜேக்கப் அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது .அப்போது அவர் தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானது.
                                      தோழர் அரசு போக்குவரத்து கழகத்தை பாருங்கள், போராட்டம் என்றால் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.யாரவது மீறி பேருந்தை இயக்கினால் கருங்காலி என்று சொல்லி 10 ஆண்டுகள் ஆனாலும் பேசாமல் ,குடும்ப விழாக்களுக்கு செல்லாமல் இருந்து விடுவார்கள்.
                           வங்கி  ஊழியர்கள் ஒரு நாடு முழுவதும் டோக்கன் ஸ்ட்ரைக் செய்வார்கள்.அதில் வெற்றி பெற்று விடுவார்கள்.போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு வங்கி திறக்கவிடாமல் செய்து விடுவார்கள்.அது ஒற்றுமையே பலம்.ஆனால் நம்மில் அப்படி இல்லை.அனைவரும் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை.இதுவே அனைவரும் பங்கு கொண்டால் இரன்டு நாள்களில் நாம் வெற்றி பெற இயலும்.என்று கருது தெரிவித்தார்.

எட்டாம் நாள் போராட்டம் :
                                 வழக்கம் போல் இன்றும் கஸ்பார் சார் அவர்களுடன் ட்ரெயினில் சென்று EB உணவகத்தில் உணவு அருந்தி விட்டு காத்திருப்பு போராட்ட களத்துக்கு சென்றோம்.இன்று பல்வேறு சங்கங்களில் இருந்து பல்வேறு ஊழியர்கள் பங்கேற்றனர்.கூட்டம் மிக அதிகம்.இன்று நண்பர் இளமாறன்,தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் ஆசிரியர்கள்,சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் முருகன்,பாகை கண்ணதாசன் என பலரையும் சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது .மேலும் இதுநாள் வரை போனில் பேசிய தோழர் கணேசன் அவர்களை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பும் கிடைத்தது .மாலை மீண்டும் ட்ரெயின் வழியாக பயணம்.

பரபரப்பை ஏற்படுத்திய ஓன்பதாம் நாள் போராட்டம் :
                                      இன்று காலை தாமதமாக தான் போராட்ட களத்துக்கு சென்றேன்.இன்று புதியதாக யாரையும் சந்திக்க வில்லை.உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாமதமாக சென்றாலும் இத்துணை நாள் சந்தித்த அனைவரையும் சந்தித்தேன்.போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் தோழர் சுப்பிரமணியம்,தாஸ் ,பாஸ்கர் ஆகியோருடன் ஒன்றாக சென்று மதிய உணவு அருந்தி விட்டு ,ஒன்றாக இயல்பாக அனைவரும் பேசிக்கொண்டு தேவகோட்டை வந்து சேர்ந்தோம்.

துணிச்சலான ,வரவேற்க தக்க முடிவு எடுத்த தோழர் செல்வகுமார் :

                              இன்று மதியம் RDM கல்லூரியில் காலையில் கைது ஆனவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டோம்.முதலில் 20 பேர் கைதாகி பிறகு 470 பேர் தானாகவே கைது ஆகி உள்ளே சென்றனர்.மதியம் 1.30 மணி அளவில் கோர்ட் முடிவுகள் வெளியான பிறகு தோழர் செல்வகுமார் அங்கு கூடியிருந்த அனைவரையும் அழைத்து எங்களிடம் ஒரு தகவல் கூறினார். நான் தற்போது இங்குள்ள காவல் ஆய்வாளர் அவர்களிடம் சென்று ,எங்களை எப்போது விடுவிப்பு செய்வீர்கள் என்று கேட்டபோது ,அதற்கு அவரோ முதலில் சாப்பிடுங்கள் ,  பின்பு விடுதலை செய்வது குறித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.உடனே தோழர் அவர்கள் ,கோர்ட் விடுதலை  செய்ய சொல்லிவிட்டது.மேலும் இன்று காலையில் காவல் துறை ஆய்வாளர் அவர்கள் ,நாம் சாப்பிடும் முன்பு நம்மை கைது செய்து அழைத்து வந்து விட்டார்.எனவே இப்போதும் சரியான தகவல் சொல்ல மறுக்கிறார்.எனவே நாம் சாப்பிட வேண்டாம்.அனைவரும் களைந்து செல்வோம் என்று  சொன்ன உடன் யாரும் சாப்பிடாமல் அங்கு இருந்து கிளம்பி சென்றனர்.என்னே உணர்வு ஒற்றுமை,பாராட்டுக்கள் .அவரது முடிவுக்கு  வாழ்த்துக்கள் .

முகநூல் ,வாட்சப் வழியாக போராட தூண்டிய தோழர் தேவராஜன் :
                                               அனைத்து ஆன்லைன் ஊடக தொடர்பு வழியாக விடிய,விடிய பல்வேறு பதிவுகளை வெளியிட்டு தோழர் தேவராஜன் உதவியாக இருந்தார்.

போராட்டத்தில் பங்கேற்க தூண்டிய காரைக்குடி அழகப்பா மாடல் பள்ளி முதுகலை ஆசிரியர் காளிதாஸ் ;
                                      இவரது பள்ளியில் பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் அலுவலக உதவியாளருடன் சேர்ந்து கலந்து கொண்டனர்.என்னிடமும் தினசரி தொலைபேசி வாயிலாக பேசி ஊக்கப்படுத்தினார் .அவரையும் போராட்ட களத்தில் கண்டு பேசியதில் மகிழ்ச்சி.



28 வருட பணிக்காலத்தில் முதன்முறையாக கைதான ஆசிரியை:

போராட்டத்தில் பங்கு கொண்டது தொடர்பாக பள்ளியில்  ஆசிரியர்களுடன் சுவையான கலந்துரையாடல் :(ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தல் )
                                   எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவர் தான் 28 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும்,இது வரை போராட்டம் என்றால் வீட்டில் இருந்து கொண்டதாகவும்,இந்த முறை தான் மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில் ,தன்னிடம் அனைவரும் போராட்டத்துக்கு   செல்லாமல் விடுப்பை நீடிக்க சொன்னார்கள் என்றும்,ஆனால் நான் இந்த முறை விடுப்பை முடித்து விட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும்போது தீடீரென காவல் துறையினர் தன்னை கைது செய்தபோது முதலில் பயந்ததாகவும் ,பிறகு ஆட்கள் நிறைய பேர் வந்தபோது பயம் போய் விட்டதாகவும்,இனி வரும் காலங்களில் போராட்டம் நடந்தால் கண்டிப்பாக தான் கலந்து கொள்ள ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.போராட்டத்தில் எங்கள் பள்ளி ஆசிரியைகள்,ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் கைதும் ஆனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து நாட்களும் போராட்டத்தில் பங்கு பெற்ற எங்கள் பள்ளி ஆசியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டேன்.

                                     இதே போல் எங்கள் பள்ளியின் மற்றுமொரு ஆசிரியை அவர்களும் தானகவே போராட்டத்தில் சென்று கைதாகி கல்லூரி உள்ளே சென்றார் என்பதும்,இவரும்  முதல் முறை கைதாகி உள்ளே செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமும் போராட்ட களத்துக்கு வந்து ஆச்சரியப்படுத்திய  ஆசிரிய ஜோடி
                     
                        தினமும் எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா தனது மனைவி உடன் (தேவகோட்டை ஊராட்சி ஒன்றியதில் பணி புரிபவர் ) அனைத்து நாட்களும் போராட்டத்துக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்தினார்.


சம்பளம் அதிகம் கேட்டு போராட்டமா? மாணவர் மற்றும் பெற்றோரின்  கேள்விக்கு பதில்
                  முதல் கேள்வி : போராட்டத்தில் இரண்டு நாட்கள் கலந்து கொண்டு பள்ளி விடுமுறை விட்டு இருந்த நிலையில் பெற்றோர் ஒருவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.சார் சம்பளம் அதிகம் கேட்டு போராட்டம் செய்கிறீர்களா ? என்று கேட்ட்டார் .
                   இரண்டாவது கேள்வி :    பள்ளி திறந்த நிலையில் மாணவர்கள் காலை வழிப்பாட்டு கூட்டத்தில் என்னிடம் சம்பளம் அதிகம் கேட்டுத்தானே போராட்டம் செய்தீர்கள் என்றும் , மற்றொரு மாணவர் பழைய பென்ஷன் கேட்டு நீங்கள் போராட்டம் செய்தீர்கள் என்றும் பேசினார்கள்.
            
மூன்றாவது கேள்வி :

                                       
நீங்கள் போராடுவதை நான் ஏற்று கொள்ளும்  வகையில் எப்படி சொல்வீர்கள்? பத்திரிக்கை ஆசிரியரின் கேள்விக்கு அவருக்கு  புரியும்  வகையில் பதில்

                               மாணவர்,பெற்றோர்,பத்திரிக்கை ஆசிரியர் மூன்று பேருக்கும் ஒரே மாதிரியான பதில் ;
                                                 நாங்கள் பென்ஷன் வேணும் என்றுதான் அதுவும் பழைய பென்ஷன் வேண்டும் என்றுதான் போராட்டம் செய்கிறோம்.எங்களுக்கு மட்டும் இல்லை,வரும் கால சந்ததிகளான உங்களுக்கும் சேர்த்து தான் போராட்டம் செய்கிறோம்.நீங்களும் அரசு வேலைக்கு செல்லும்போதும் அல்லது உங்கள் அக்கா,தங்கை,அண்னன்,தம்பி போன்றோர் அரசு பணிக்கு வரும்போதும் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறோம்.இது எங்களுக்கான போராட்டம் இல்லை என்றும்,உங்களுக்கான போராட்டம் என்றும் விளக்கினோம் .
                                   மேலும் ஒரு சீட்டு கம்பெனியில் பணம் கட்டுகிறீர்கள் ,பணம் எங்கு உள்ளது தெரிவியவில்லை என்று சொன்னால் சும்மா விடுவீர்களா என்று கேட்டதற்கு ,விடமாட்டோம் என்று சொன்னார்கள் .அதே போல்தான் அரசில் பணத்தை கட்டி விட்டு இப்போது கேட்டால் அதற்கான கணக்கு எங்கு உள்ளது என்று தெரியவில்லை என்று சொல்கிறார்கள் என்று சொன்னோம்.

                         உடனே பெற்றோரும்,மாணவர்களும்,பத்திரிக்கை ஆசிரியரும் விளக்கமாக நீங்கள் சொல்லி உள்ளீர்கள்.உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சொன்னார்கள்.

                                  தோழர்களே போராட்டம் வாழ்க்கையில் வரலாம்,போகலாம் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகி விட கூடாது.எங்கள் வாழ்க்கையில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்கும்போதுதான் போராட்டத்தின் வெற்றியாக இருக்கும் என்பது உண்மை.
                               போராட்டம் வாபஸ் என்று செல்லும்போது ,என்னிடம் அனைவரும் பகிர்ந்து கொண்ட விஷயம் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று சொல்லி சென்றனர்.

                            கண்டிப்பாக பழைய பென்ஷன் திட்டத்தினை பெறும் வரை போராட்டம் தொடரும்.அனைவரும் அதற்கான ஆர்வத்துடன் உள்ளனர்.கலந்து கொள்ளாத பலரும் தற்போது போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுடன் உள்ளனர்.
           எனது முதல் பகுதியை படித்து விட்டு பல்வேறு தோழர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்து சொன்னதுடன் பகுதி இரண்டை படிக்க ஆர்வமுடன் உள்ளதாக சொன்னார்கள்.வாழ்த்து சொன்ன தோழர்களுக்கும்,மனதுக்குள் வாழ்த்து தெரிவித்த தோழர்களுக்கும் அன்புடன் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
                           அனைத்து அரசு ஊழியர்களும் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க ஆர்வமாக போராட உள்ளனர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

ஊக்கமளித்த குடும்பம் :
                  எனக்கு முழு அளவில் ஊக்கப்படுத்தி எண்ணை தினமும் போராட்ட களத்துக்கு அனுப்பிய எனது மகனுக்கும்,எனது மனைவிக்கும் நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எனது மகன் தினமும் வீட்டுக்கு வந்த உடன் அப்பா ஏன் நீங்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்பார்? நானும் அன்று நடந்த விஷயங்களை அவருக்கு விளக்கி சொல்வேன்.புரிந்தும் ,புரியாத நிலையில் தலையை ஆட்டி கொள்வார்.செய்தி சேனலில் போராட்டம் தொடர்பான செய்தி வந்த உடன் அப்பா எங்கே நீ இருக்கிறயா ? என்று ஆர்வமுடன் கேட்பார்.சில நாட்கள் நான் இரவில் வர இயலாத நிலையில் என் மனைவியிடம் அப்பா ஏன் வரவில்லை என்று கேட்டு விட்டு தூங்கி உள்ளார் என்று எனது மனைவி சொல்வார்கள்.
                             
                                வாழ்த்துக்களுடன் பழைய பென்ஷன் திட்டம் கிடைத்து விட்டது என்கிற தகவலை காது குளிர கேட்டுக்கொண்டே உங்களிடமிருந்து தற்போது விடை பெறுகிறேன்.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
செல் : 9786113160

வாட்ஸப் : 8056240653







L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
CELL :09786113160.E-Mail : jeyamchok@gmail.com http://www.kalviyeselvam.blogspot.in/WHATSAP  : 08056240653
FACE BOOK  : https://www.facebook.com/chokka.lingam.5815










































No comments:

Post a Comment