Thursday, 29 June 2017

 வார இதழின் அழகான பரிசினை வழங்கிய காவல் ஆய்வாளர் 

பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!

வார இதழ் நடத்திய போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர்களின் அழகிய வண்ணப்படம் பரிசாக வழங்கப்பட்டது . சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விகடன் இதழின் அழகான பரிசினை தேவகோட்டை காவல் ஆய்வாளர்  வழங்கி பாராட்டினார்.


Tuesday, 27 June 2017


ஆங்கிலம் எளிதாக பேச வேண்டுமா? தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசியுங்கள்
மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்றுனர் தகவல்



Sunday, 25 June 2017

விகடனின் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் 

Saturday, 24 June 2017


காசை பார்த்து ஆசை மாணவரின்  எண்ண வெளிப்பாடு


ஹெட்மாஸ்டரின் பேச்சை கேட்டு ஆசையை அடக்கிய 6ம் வகுப்பு மாணவரின் பேச்சு

காசை பார்த்து ஆசை ஆனால் ஹெட்மாஸ்டர் பேச்சுதான் கண் முன்பாக வந்தது மாணவரின் உண்மையான எண்ண வெளிப்பாடு

கோவிலில்  உண்டியல் எண்ணும்போது காசை பார்த்த உடன் ஆசையாக தான் இருந்தது .ஆனால் ஹெட்மாஸ்டர் சொன்னத நினைத்து எனது மனதின் ஆசையை  கை விட்டு என்னை நானே சரி செய்து கொண்டேன்..6ம் வகுப்பு மாணவனின் உண்மையான பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டையில் உள்ள கோவிலில் உண்டியல் காசு மற்றும் பணம் எண்ணுவதற்காக சென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் 6ம் வகுப்பு மாணவனின் அனுபவத்தை நீங்களே கேளுங்கள் :

Wednesday, 21 June 2017

சர்வதேச  யோகா தின விழா
தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்
காவல் ஆய்வாளர் பேச்சு
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சர்வேதச யோகா தின விழா நடைபெற்றது.

Tuesday, 20 June 2017

யோகா தினத்தை வரவேற்று  YOGA என மாணவர்களால் அழகான வடிவம் அமைத்துள்ள  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

Monday, 19 June 2017

விகடன் நிருபர்கள்  மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல்


பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி!

 அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி அளவில் சிவகங்கை,ராமநாதபுரம் ,புதுகோட்டை மாவட்ட அளவில் பங்கேற்ற ஒரே பள்ளி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 


Sunday, 18 June 2017

பள்ளியில்   யோகா பயிற்சி 

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி நடைபெற்றது.

Saturday, 17 June 2017

விகடன் நாளிதழில் ( உலகம் முழுவதுற்குமான இணையதள பதிவு ) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி சுட்டி ஸ்டார் மு.ராஜேஸ்வரி பங்கேற்று கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்ற 100 ஜன்னல் வீடு தொடர்பான தகவல்களை வண்ணப்படங்களுடன் இந்த வார சுட்டி விகடனில் காணுங்கள்.இது தொடர்பாக கிழ்க்கண்ட லிங்க் வழியாகவும் சென்று பாருங்கள்.விகடன் இதழக்கு நன்றி.


Friday, 16 June 2017


இப்படியும் சில மனிதர்கள்

இது உண்மையா ? நடக்குமா ? என்றால் உண்மைதான்,நடந்துள்ளது.
பள்ளியை பாராட்ட பல ஊர்களை தாண்டி  வந்த 13 பேர் கொண்ட குடும்பம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சமுதாய முன்னேற்றம் ஏற்படுத்த கூடிய கல்வி தொடர்பான  நிகழ்வுகளை ஊடகங்களில் படித்து பள்ளியை பாராட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள  சாலை மறைகுளம் ஊரிலிருந்து பல ஊர்களை தாண்டி ராமமூர்த்தி என்பார் குடும்பத்துடன் பள்ளிக்கே வருகை தந்து பாராட்டு தெரிவித்தார்.

Wednesday, 14 June 2017

மாணவியின் கல்விக்கு வீடு  தேடி சென்று உதவி

                    தேவகோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் சினேகா என்கிற மாணவி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 10ம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்துள்ள மாணவிக்கு 11ம் வகுப்புக்கு  ரூபாய் 11,000 கல்வி உதவி தொகை தேவைப் பட்டது. இந்த தகவலை துபாயில் வசிக்கும் திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.உடன் அந்த தொகையை வழங்கினார்.அதனை மாணவியின் வீட்டுக்கே சென்று மாணவியின் தாயாரிடம் வழங்கினேன்.உதவி செய்த திரு.ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றி.
லெ .சொக்கலிங்கம்,
தேவகோட்டை 

Tuesday, 13 June 2017

மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல் 

அமெரிக்க வாழ் இந்தியர் திரு.ராம் வள்ளியப்பன் பள்ளிக்கு மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்த வந்தபோது அவர்களது தாயார் திருமதி. செந்தாமரை ஆச்சி,தந்தையார் திரு.வள்ளியப்பன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கியபோது 
 
தினத்தந்தி  நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வெளியாகி உள்ளது.
தினமணி நாளிதழில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் செய்தி வெளியாகி உள்ளது.

Monday, 12 June 2017

தினமலர் பட்டம் இதழில்   (உலகம் முழுவதற்குமான இணையதள  பதிவு) ஒரு பக்கம் முழுவதும்   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கருத்துக்கள் வண்ண படத்துடன் வெளிவந்துள்ளது.தினமலருக்கு நன்றி 


The New Indian Express செய்தி தாளில்  (உலகம் முழுவதற்குமான பதிவு) என்கிற  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு வெளிவந்துள்ளது.கீழ்கண்ட லிங்க் வழியாக காணலாம் .


http://epaper.newindianexpress.com/c/19734214

Saturday, 10 June 2017

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பெற்றோர்கள் ஒவ்வொரு வருடமும் 10 மணி நேரம் பிள்ளைகளுக்காக பள்ளியில் நேரம் செலவிட வேண்டும்
அமெரிக்க அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்
மாணவர்கள் கேள்விகள் கேட்டு படிப்பதே அமெரிக்க கல்வி முறை  
 அமெரிக்காவில் அவரவர் வேலையை அவர்களே செய்வார்கள்
அமெரிக்க வாழ் இந்தியரான முகநூல் நிர்வாக அலுவலர் பேச்சு  

தேவகோட்டை – அமெரிக்க அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்  பெற்றோர்கள் ஒவ்வொரு வருடமும் 10 மணி நேரம் பிள்ளைகளுக்காக பள்ளியில் நேரம் செலவிட வேண்டும் என்று முகநூல் நிர்வாக அலுவலர் மாணவர்களிடம் பள்ளியில் பேசினார்.

Friday, 9 June 2017

பிற்பகல்  நாளிதழில்  (தமிழகம் முழுவதற்குமான பதிப்பு )  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு வெளியாகி உள்ளது.
முகநூலில் (FACEBOOK) தயாரிப்பு,நிகழ்ச்சி நிருவாக பிரிவில் அமெரிக்காவில் பணியாற்றும் v.ராம் வள்ளியப்பன் தனது குடும்பத்தினருடன் பள்ளியை பாராட்ட நேரில் வந்த அமெரிக்க வாழ் இந்தியர் .

Thursday, 8 June 2017

பள்ளியில்  தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் முன்னிலையில் சேக்கிழார் விழா குழுவின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 



புதிய மாணவர்களை கீரிடம் வைத்து வரவேற்ற அரசு உதவி பெறும்நடுநிலைப் பள்ளி

மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு,புத்தகம்,சீருடை வழங்கும் விழா

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு  உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு  இன்று பள்ளி திறந்து புதியதாக சேர்ந்த மாணவர்களை கீரிடம் வைத்து வரவேற்றனர்.

தமிழ் பிளாஷ் நியூஸ் (TAMIL FLASH NEWS) (உலகம் முழுவதற்குமான பதிவு) என்கிற இணையதள செய்தி தளத்தில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வு வெளிவந்துள்ளது.

Tuesday, 6 June 2017


மாணவர் சேர்க்கை  விழிப்புணர்வு முகாம்

தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.தொடர்ந்து 4 வருடங்களாக மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Monday, 5 June 2017

தினமலர்  நாளிதழில் பட்டம் இணைப்பில் (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவியின் கேள்வி வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள் .

 

Sunday, 4 June 2017

 தமிழக அரசின் நிதி துறை கூடுதல் செயலர் திரு.சண்முகம் IAS அவர்களுடன் 

Thursday, 1 June 2017

தினகரன் நாளிதழில் (உலகம் முழுவதற்குமான இணைய தள பதிவு ) தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி நிகழ்வு வெளியாகி உள்ளது.அனைவரும் காணுங்கள் .


http://epaper.dinakaran.com/index.php?rt=index/frontpage/20170602/02



Inline image 1
Inline image 2