அறிவியல் விழா
அறிவியல் கண்காட்சி
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சிக்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.சிவகங்கை மாவட்ட ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ . மு . மு . அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர் அரங்குலவன் கண்காட்சியை துவக்கி வைத்தார். இளம் வயது மாணவர்கள் ஏராளமான அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள். ஆல் தி சில்ட்ரன் உதவியாளர் ஜேம்ஸ் ஜெபராஜ் உட்பட ஏராளமான பொது மக்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். சிறப்பாக செய்து காண்பித்து பாராட்டு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
வீடியோ :
https://www.youtube.com/watch?v=hnBI2xoveVQ
https://www.youtube.com/watch?v=qJa_rdd67KU
No comments:
Post a Comment