Monday, 30 March 2026

 பள்ளியில் தொங்கும் நூலகம் 




 தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில்  தொங்கும் நூலகம்  அமைக்கப்பட்டது.

                             நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தொங்கும் நூலதிற்கான  புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொங்கும் நூலகமும் அமைக்கப்பட்டது. மாணவர்கள் எளிதாக அவர்களே சென்று புத்தகங்களை எடுத்து வாசிக்கும்  வகையில் தொங்கு  நூலகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும்,  மிக எளிதாக புத்தகங்களை  வாசிக்கவும் தொங்கும் நூலகம் பயன்படும் என்று  தேவகோட்டை ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார்.

 படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆல்  தி சில்ட்ரன் தொண்டு  நிறுவனத்தின் மூலமாக தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது. தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


வீடியோ : https://www.youtube.com/watch?v=B9p01jz1nrA





No comments:

Post a Comment