Wednesday, 11 March 2026

 நூலக புத்தகம் வாசித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா 

  
  
ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் வெற்றி உறுதி   - மாணவர்களுக்கு அறிவுரை

அறக்கட்டளை நிர்வாகி  பேச்சு 






தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நூலக புத்தகங்கள் வசித்து மிக சிறப்பாகப் பின்னூட்டம் வழங்கிய  மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
                                                            ஆசிரியர் ஸ்ரீதர்   வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகி சிதம்பரம்  மற்றும் காளையப்பன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்  . அறக்கட்டளை  நிர்வாகி  அய்யப்பன் பேசுகையில் , 
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் .காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டம் எல்லாம் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. 

                              பசி இல்லாமல் இருந்தால்தான் நம்மால் எதுவும் செய்ய முடியும். நன்றாக படிக்க முடியும். அதனால்தான் இந்த மாதிரியான திட்டங்களை வகுத்துள்ளார்கள். 

                                படிப்பு தான் நம்முடைய கடமை. படிப்பில் தான் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாம் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் நாம் மொபைல் டிவி பார்ப்பதால்  நம்முடைய கவனம் சிதறும். 

                                     நாம் அதையெல்லாம் தவிர்த்து படிப்பில்  கவனம் செலுத்தவேண்டும். பள்ளிக்கு வந்தவுடன் 8 மணி நேரம் இங்கு தான் இருக்கிறோம். அதனால் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் நமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். 

                             ஆசிரியர்கள் சொல்வதை என்றும் மறக்கக்கூடாது. நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். மரங்கள் நமக்கு நிறைய நன்மைகளை தருகிறது. 

                                        மரங்கள் நிழல் கொடுக்கிறது. காய்கனிகளை கொடுக்கிறது. மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்ளுக்கு  மட்டும் பலன் கொடுப்பது இல்லை. எல்லா மனிதர்களுக்குமே நன்மை செய்கிறது.

                                 இயற்கை சூழலுக்கு மரங்கள் மிக மிக முக்கியம்.மரங்கள்  இல்லை என்றால் மனிதர்கள் வாழ முடியாது. முடிந்தவரை நாம் மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும். பேனாவின் பயன் எழுதவேண்டும். எழுதாமல் அழகுக்கு வைத்துக் கொள்வதில் பயனில்லை.

                                 நாம் இங்கு ஊற்றி  எழுத ஆரம்பித்தவுடன் நமக்கும் பயனுள்ளதாக இருக்கும். மற்றவருக்கும் பயன்படும். நாம் படித்து அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும். 

                                    நம்முடைய படிப்பு மற்றவருக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். நாம் நல்ல அறிவை   கற்றுக்கொள்ள வேண்டும். 

                              கற்க, கசடற என்ற திருக்குறளுக்கு ஏற்ப நாம் கசடற என்றால் குறையில்லாமல் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய ஆசிரியர்கள் நமக்கு கற்றுக் கொடுப்பார்கள். 

                               நாம் படிப்போடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதை படிப்பதோடு விட்டுவிடாமல் வாழ்க்கையிலும் செயல்படுத்த வேண்டும்.

                                       நாம் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு சென்று நம் குடும்பத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். என்று பேசினார்.

                                      நூலக புத்தகங்கள் வாசித்து  சிறப்பாக எடுத்துக்கூறிய  மாணவர்கள் நந்தனா,  ஜெயகாந்தன்,ஸ்டெபி ,ஜாய் லின்சிகா,சபரிவர்ஷன்,யோகின் ஆகியோருக்கு  பரிசாக புத்தகங்கள்  வழங்கப்பட்டது . நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி  நன்றி கூறினார்.


படவிளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேவகோட்டை குன்றக்குடி தைப்பூச காவடி நகரத்தார் ஸ்ரீ சண்முகநாதன் அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் சிதம்பரம்  ,  அய்யப்பன், காளையப்பன்  ஆகியோர் நூலக புத்தகங்கள் வாசித்து  வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசாக புத்தகங்களை  வழங்கினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

 

வீடியோ

https://www.youtube.com/watch?v=AVLPVeks1GU


https://www.youtube.com/watch?v=S_JMY_kJ7ok

No comments:

Post a Comment