பெற்றோர்களே உங்கள் குழந்தைகளிடம் பேசுங்கள்
தலைமை ஆசிரியர் வேண்டுகோள்
பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது.
தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் பெற்றோர்களிடம் பேசும்போது, பெற்றோர்கள் அனைவ்ரும் பள்ளி முடிந்து வந்தவுடன் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். பள்ளியில் நடந்த நிகழ்வுகளை காது கேளுங்கள். உங்களின் குழந்தைகளுக்காகத்தான் நீங்கள் கடுமையான வேலைகள் பார்த்து உழைத்து சம்பாதிக்கிறீர்கள் . அவர்கள் மனதில் இருப்பவற்றை உங்களிடம் இயல்பாக பேச சொல்லுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேளுங்கள். மனம் விட்டு பேச சொல்லுங்கள். அப்போதுதான் நிகழ்காலமும், எதிர்காலமும் நன்றாக இருக்கும், உங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே நல்வழிபடுத்த நல் வாய்ப்பாக அமையும்.என்று பேசினார்.பெற்றோர்கள் பலரும் பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளை பாராட்டி பேசினார்கள். ஆசிரியர்கள் ஸ்ரீதர், முத்துலெட்சுமி ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிறப்பாக பேசிய பெற்றோர்கள் உஷா மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.பள்ளியின் சிறப்புகள் குறித்து மாணவி நந்தனா பேசினார்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் , பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் நடந்தது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டனர்.இதில் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி பேசினார்.சிறப்பாக பேசிய பெற்றோர்கள் உஷா மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பள்ளியின் சிறப்புகள் குறித்து மாணவி நந்தனா பேசினார்.
வீடியோ :
https://www.youtube.com/@chokkalingamlakshmanan5676/videos
https://www.youtube.com/watch?v=10AdUkPwI1k
No comments:
Post a Comment