[17/02, 8:18 pm] Jeyam: மாற்றுத்திறனாளி மாணவர்கள் “ஸ்கிரைப்” நியமனத்தில் அலட்சியம்...!!
மாற்றுத்திறன் மாணவர்களில் பலவகையினர் உள்ளனர் . அதில் கோர்வையாக பேசத் திணறும் மாணவர்களும் உள்ளனர். அப்படி பேச முடியாத, காது கேளாத, எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள, சொந்தமாக உதவியாளரை (Scribe) அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. இந்த உதவியாளர்கள் மூலம் தங்களின் விடைகளைப் பதிவு செய்யலாம். மேலும், இவர்களுக்கான தேர்வு மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள், கூடுதல் நேரம், மற்றும் உதடு அசைவுகளைப் புரிந்து கொள்ளும் வகையில் முகக்கவசம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஸ்கிரைப் உதவியாளர்களாக பள்ளி ஆசிரியர்களே நியமிகப்பட்டு வந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டு முதல் கல்லூரி மாணவ, மாணவிகள், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்களை நியமக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முழுமையாக பேச இயலாத, கோர்வையாக பேச முடியாத மாற்றுத் திறனாளி மாணவரின் வார்த்தை செயல்பாடு தன்னார்வலர்களுக்கு புரியாது. எனவே கற்பித்தல் பணியில் உள்ள பாட சம்பந்தமான ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக பயன்படுத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தயவுசெய்து தேர்வு துறை இதில் தனிக்கவனம் செலுத்தி பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஸ்க்ரைப் மாணவர்களுக்காக தேர்வு எழுத ஆவண செய்து தர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
[20/02, 6:28 am] Jeyam: *🔴🟢🛑 வணக்கம்.
மாற்றுத்திறன் மாணவர்களில் பலவகையினர் உள்ளனர் . குறிப்பாக கோர்வையாக பேசத் திணறும் மாணவர்களும் உள்ளனர். கற்பித்தலில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களே மாணவரின் வார்த்தையைக் கேட்டு கோர்வையாக எழுத முடியும். மாற்றுத்திறன் மாணவரின் வார்த்தை செயல்பாடு தன்னார்வலர்கள் புரியாது. எனவே கற்பித்தல் பணியில் உள்ள பாட சம்பந்தமான ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக பயன்படுத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்கள் வேண்டுகோளாக, கோரிக்கையாக வைக்கின்றனர். தயவுசெய்து தேர்வு துறை இதில் தனிக்கவனம் செலுத்தி பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஸ்க்ரைப் மாணவர்களுக்காக தேர்வு எழுத ஆவண செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் அனைவரும் வேண்டி கேட்டுக் கொள்கிறார்கள்.
[20/02, 6:28 am] Jeyam: *🔴🟢🛑தேர்வுத்துறை இயக்குநரின் ‘ஸ்கிரைப்’ நியமன சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும்!*
பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பெ. சண்முகம் கடிதம் சென்னை, பிப். 5 - மாற்றுத் திறன் கொண்ட மாண வர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் ஆசிரியர்கள் மற்றும் கல்வி யாளர்கள் மேற்கொண்ட பணிக்கு மாறாக, கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர் களையும் நியமிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநர் சுற்ற றிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்ப தாவது: ஆசிரியர் - கல்வியாளர்களை நியமிப்பதே வழக்கம்! பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களில் கண் பார் வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்ப் பேச இயலா தோர், எதிர்பா ராத விபத்தால் கை முறிவு ஏற்பட்டு தேர்வு எழுத இயலாதோர், மன நலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறை பாடு உள்ளவர்கள், நரம்பியல் குறை பாடு உள்ள மாணவர்கள் தேர்வு எழு தும் போது, சொல்வதை எழுதுபவர் கள் (ஸ்கிரைப்) நியமனம் செய்யப் படுவர். அப்படி நியமிக்கப்படுப வர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி யாளர்களாக இருப்பார்கள். ஆனால், தற்போது, அரசு தேர்வுத் துறை இயக்குநர், அனைத்து முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2026-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, வருகின்ற திருப்புதல் தேர்விலும், மார்ச், ஏப்ரல் மாத பொதுத்தேர்விலும் நியமிக்க வேண்டு மென தெரிவித்துள்ளார். மாற்றுத் திறன் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்! இது ஆசிரியர்கள் மத்தியிலும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர் கள் மற்றும் அவர்களது பெற்றோர் கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை யும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. எந்தவொரு பயிற்சியும் இல்லா மல் கல்லூரியில் படிக்கும் மாண வர்களையும், தன்னார்வலர்களை யும் ஸ்கிரைப்பாக நியமிப்பது மாற்றுத்திறன் கொண்ட மாண வர்களின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்பை மறுதலிக்கும் செயலாகும். மாற்றுத் திறன் கொண்ட மாண வர்கள் நன்றாக படித்துச் சொல்லும் போது, ஸ்கிரைப்பாக எழுதுபவர் சரி யாக பிழை இல்லாமல் எழுதினால் மட்டுமே தேர்ச்சிப் பெற முடியும். ஆனால், ஆசிரியர்களாக இல்லாமல் வேறொருவரை நியமித்தால் அவர்கள் பிழையோடு எழுதும் போது மதிப்பெண் குறைந்தும், தேர்ச்சிப் பெறாமலும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உடன் தலையிட வேண்டும் மேற்படி குறைபாடு உள்ள மாணவர்களை கையாள்வதற்கே உரிய பயிற்சி தேவை என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, அமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலன்களைப் பாதுகாக்கும் வகையில் ஸ்கிரைப் சம்பந்தமாக எந்தவித பயிற்சியும் இல்லாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர் களையும் நியமிக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடி யாக ரத்து செய்திடவும், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களையே ஸ்கிரைப்பாக நியமிக்கும் நடை முறையை பின்பற்ற வேண்டு மெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பெ. சண்முகம் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
[20/02, 6:28 am] Jeyam: *🔴🟢🛑மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு* வணக்கம், மாற்றுத்திறன் மாணவர்களில் பலவகையினர் உள்ளனர் . குறிப்பாக கோர்வையாக பேசத் திணறும் மாணவர்களும் உள்ளனர். கற்பித்தலில் அனுபவம் பெற்ற ஆசிரியர்களே மாணவரின் வார்த்தையைக் கேட்டு கோர்வையாக எழுத முடியும். மாற்றுத்திறன் மாணவரின் வார்த்தை செயல்பாடு தன்னார்வலர்கள் புரியாது. எனவே கற்பித்தல் பணியில் உள்ள பாட சம்பந்தமான ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக பயன்படுத்த தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரின் மூலமாக பெற்றோர்கள் வேண்டுகோளாக, கோரிக்கையாக வைக்கின்றனர். தயவுசெய்து மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை ஸ்க்ரைப் மாணவர்களுக்காக தேர்வு எழுத ஆவண செய்து தர வேண்டும் என பெற்றோர்கள் அனைவரும் வேண்டி கேட்டுக் கொள்கிறார்கள்.
[20/02, 6:28 am] Jeyam: ஸ்க்ரைப் மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை முரண்படும் கள நிலவரம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று . . கல்வியியலில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர்கள் யாரையும் அழைக்க சொல்லி தகவல் தலைமை ஆசிரியர்களுக்கு செல்லவில்லை ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாக அருகாமையில் இருக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாடம் சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களை தாங்களே தேடி கண்டுபிடித்து கல்லூரி முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி இப்பணிக்கு அழைத்து வாருங்கள் என்று தான் தகவல் தெரிவித்துள்ளார்கள் எனவே அமைச்சர் அவர்கள் சொல்வது போல் கலர் நிலவரம் இல்லை கல்வியியலில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவர்களும் இல்லை.கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களை தேடி தலைமை ஆசிரியர்கள் அலையும் நிலைமை தான் தொடர்கிறது இதனால் யாரை அழைப்பார்கள் யாரை தேர்வு எழுத சொல்வார்கள் என்று தெரியாமல் தலைமை ஆசிரியர்களும் குழம்பிப் போய் உள்ளார்கள் திருப்புதல் தேர்வுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்கள் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை எனவே கள நிலவரம் முரண்பட்டதாக உள்ளது எனவே ஸ்கைப் மாணவர்களின் வாழ்க்கையில் தமிழக அரசு விளையாடுவதை தவிர்த்து பாடம் சார்ந்த ஆசிரியர்களையே தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும் என பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்
No comments:
Post a Comment